வீட்ல எலுமிச்சை மரம் இருக்கா..! அப்படினா இது தெரிஞ்சுருக்கனுமே உங்களுக்கு தெரியாதா..!

Lemon Tree Multi Purpose 

பொதுவாக Multi Purpose என்றால் பல்நோக்கு என்று அர்த்தம். இந்த வார்த்தையினை பொதுவாக மனிதர்களை புகழ்ந்து கூறுவதற்காக சில நேரத்தில் உபயோகப்படுத்துவார்கள் என்று கூறலாம். உதாரணமாக ஒரு மாணவன் நிறைய திறமைகளை தனக்குள் வைத்து அதன் மூலம் நல்ல நிலைக்கு வருகிறான் என்றால் அந்த இடத்தில் அந்த மாணவனை புகழ்ந்து கூறுவதற்காக பல்நோக்கு திறன் கொண்டவன் என்று கூறுவார்கள். ஆனால் இதனை மட்டும் இந்த வார்த்தை குறிக்காமல் மற்றொன்றையும் குறிக்கிறது. அது என்னவென்றால் ஒரு பொருளானது ஒரே ஒரு விஷயத்திற்கு பயன்படாமல் நிறைய விஷயங்களுக்கு பயன்பட்டால் அதனையும் Multi Purpose என்று கூறுவார்கள். இத்தகைய Multi Purpose கொண்ட மரம், செடி என நமக்கு தெரியாமல் ஏராளனவற்றை உள்ளது. அவற்றில் ஒன்றான எலுமிச்சை மரத்தினை பற்றி தான் இன்றைய Multi Purpose பதிவில் பார்க்கப்போகிறோம். ஆகையால் உங்களுடைய வீட்டில் எலுமிச்சை மரம் இருந்தால் அந்த மரத்தில் எத்தனை அம்சங்கள் உள்ளது என்று பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ வீட்டில் தென்னை மரம் இருந்தால் மட்டும் போதாது இந்த விஷயம் தெரியுமா. 

எலுமிச்சை மரம்:

எலுமிச்சை மரம்

எலுமிச்சை மரமானது ரூட்டேசியே என்ற குடும்பத்தை சேர்ந்தவை ஆகும். மேலும் இந்த மரமானது செம்மண் கலந்த மண்ணில் மட்டுமே வளரும் தன்மை கொண்டது.

இத்தகைய எலுமிச்சை மரமானது 3 முதல் 6 மீட்டர் வரை உயரமும், அதனுடைய இலைகள் 6 முதல் 11.5 செ.மீ நீளமும் கொண்டுள்ளது. மேலும் இந்த எலுமிச்சை மரத்தில் ஜூலை மாதம் தான் காய்கள் வைக்க ஆரம்பம் ஆகிறத.

இது அதிகமாக மிதமான வெப்ப மண்டலம் மற்றும் வெப்ப மண்டல பகுதிகளில் வளரும் பண்பு கொண்டதாக உள்ளது. எனவே இதனை பயிர் செய்வது என்பது சாத்தியமான ஒரு செயல்.

எலுமிச்சை இலை:

எலுமிச்சை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய இலையில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. ஆகையால் அது நிறைய விஷயங்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.

 

 • உடலில் ஏற்படும் வெப்பம் 
 • நீண்ட நாட்களாக உள்ள காயம் 
 • தோலில் ஏற்படும் அலர்ஜி 
 • தடிப்பு 
 • உடல் எடை குறைவு 
 • இரத்த அழுத்தத்தை குறைத்தல் 

எலுமிச்சை பழம்:

எலுமிச்சை பழம்

எலுமிச்சை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய எலுமிச்சை பழத்தில் மொத்தம் 10 சத்துக்கள் உள்ளது.

எலுமிச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்:

 1. வைட்டமின் B6
 2. வைட்டமின் C
 3. வைட்டமின் D
 4. பொட்டாசியம்
 5. கொலஸ்ட்ரால்
 6. சோடியம்
 7. கலோரிகள்
 8. இரும்புச்சத்து
 9. கால்சியம்
 10. மெக்னீசியம்

எலுமிச்சை பழத்தின் பயன்கள்:

எலுமிச்சை பழம் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்வதற்கு பயன்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் முடக்கு வாதம், உடலில் ஏற்படும் அலர்ஜி மற்றும் வாதம் போன்ற பிரச்சனைகளுக்கும் ஒரு மருந்தாக எலுமிச்சை பழம் பயன்படுகிறது.

உடலில் ஏற்படும் மயக்கம், வாந்தி, குமட்டல், தலைவலி மற்றும் தொண்டை வலி போன்ற நோய்களுக்கு ஒரு சிறந்த பலனை நம்முடைய வீட்டில் உள்ள எலுமிச்சை பழம் உபயோகப்படுத்தபடுகிறது.

மேலும் மலச்சிக்கல், வாய் துறுநாற்றம் மற்றும் சரும பிரச்சனை ஆகியவற்றிற்கும் நன்மையினை அளிக்கிறது. இவற்றை எல்லாம் விட வீட்டில் ஊறுகாய் செய்தல், சாதம் செய்தல் மற்றும் மிட்டாய் தயாரித்தல் என உணவு பொருளாகவும் உபயோகப்படுகிறது.

வீட்டில் செம்பருத்தி செடி வைத்திருக்கும் அனைவருக்கும் இது தெரியாத..! அப்போ உடனே தெரிஞ்சுக்கோங்க..!

எலுமிச்சை சாறு பயன்கள்:

 • வயிற்று வலி
 • உடலின் வெப்பத்தினை குறைத்தல்
 • அஜீரண கோளாறு
 • தோலில் காணப்படும் எரிச்சல்
 • குமட்டல்
 • வாந்தி

போன்ற அனைத்திற்கும் எலுமிச்சை சாறு ஏதோ ஒரு வகையில் இதுநாள் வரையிலும் பயன் அளித்து வருகிறது. நம்முடைய வீட்டில் இருக்கும் எலுமிச்சை மரத்தில் இவ்வளவு பல்நோக்கு தன்மைகள் உள்ளதா என்பது சிலருக்கு ஆச்சரியமாக இருக்கும்.

எலுமிச்சை தோல்:

எலுமிச்சை தோல்

எலுமிச்சை பழ தோலிலும் கால்சியம், பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளது. இதுபோன்ற சத்துக்களை கொண்ட எலுமிச்சை பழத்தின் தோலினை முகத்தில் மெதுவாக தேய்த்து வர முகம் நன்றாக பளபளப்பு அடைந்து பளிச்சென்று இருக்கும். மேலும் இது இரத்த அழுத்தத்தை சீராக வைத்து இருக்கவும் மற்றும் வியர்வை துர்நாற்றத்தை குறைக்கவும் உதவுகிறது.

மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கிய குறிப்புகள், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> பொதுநலம்.com