Papaya Tree Multi Purpose
நாம் அனைவருடைய வீட்டிலும் தென்னை மரம், புளிய மரம், பூவரசன் மரம், வேப்பம் மரம் மற்றும் பப்பாளி மரம் என அடிப்படையிலான சில மரங்கள் உள்ளது. அத்தகைய மரங்கள் சிலவற்றில் நம்முடைய உடலுக்கு நன்மை தரக்கூடிய பழங்கள் கிடைக்கிறது. ஆனால் நமக்கு தெரிந்தது என்றால் இந்த ஒன்று மட்டும் தான். ஆனால் ஒவ்வொரு மரத்திலும் அதனுடைய இலை முதல் பழம் என அனைத்தும் எண்ணற்ற பயன்பாட்டினை கொண்டதாக உள்ளது. இத்தகைய திறனை தான் நாம் தமிழில் பல்நோக்கு திறன் என்றும் ஆங்கிலத்தில் Multi Purpose என்று கூறுவோம். அதனால் இன்று பப்பாளி மரத்தின் பல்நோக்கு திறனை பற்றி தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
பப்பாளி மரம் பற்றிய தகவல்:
பப்பாளி மரம் உடலுக்கு நன்மை தரக் கூடிய எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியதாக உள்ளது. இத்தகைய மரத்தில் ஆண் மற்றும் பெண் என இரண்டு வகையான பப்பாளி மரங்கள் உள்ளது.
இதில் பெண் பப்பாளி மரம் மட்டும் பழங்களை அதிகாமாக தரும் தன்மை கொண்டது. ஆண் பப்பாளி மரம் பழங்களை தராமல் பூக்கள் மட்டுமே பூக்கச் செய்யும்.
இதனுடைய இலைகள் மற்றும் காய்கள் பச்சை நிறத்திலும், பழங்கள் மஞ்சள் கலந்த ஆரஞ்சு நிறத்திலும் காணப்படும். மேலும் இதனுடைய இலைகள் ஆனது நீளமாக இருக்கும்.
மேலும் பப்பாளி மரம் தோராயமாக 10 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. இதனுடைய தாயகம் மெக்சிக்கோவாக இருந்தாலும் கூட இது இந்தியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் தென் அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் காணப்படுகிறது.
பப்பாளி இலை:
பப்பாளி இலையில் இருந்து நாம் சாறு எடுத்து குடிப்பதன் மூலம் இரத்த சர்க்கரையின் அளவினை குறைக்க செய்கிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவினையும் குறைப்பதற்கு உதவுகிறது.
இந்த பப்பாளி இலையில் இருந்து தயாரிக்கப்படும் சாற்றில் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் இது நமது உடலில் காணப்படும் தோல் சுருக்கத்தினை நீக்கி ஆரோக்கியமாக வாழ செய்கிறது.
இத்தனை நாளா இதை தெரிஞ்சிக்காமலேயே வெந்தயத்தை சாப்பாட்டில் பயன்படுத்தி இருக்கோமே.
பப்பாளியில் உள்ள சத்துக்கள்:
நாம் சாப்பிடக்கூடிய பப்பாளி பழத்தில் வைட்டமின் A, வைட்டமின் C, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீசு, நார்சத்து மற்றும் இரும்புசத்து என எண்ணற்ற சத்துக்கள் பப்பாளியில் உள்ளது.
பப்பாளியின் நன்மைகள்:
நம்முடைய கண்களுக்கு முதன்மை சத்தாக இருப்பது வைட்டமின் A தான். அதனால் பப்பாளி பழத்தினை நாம் தினமும் சாப்பிடுவதன் மூலம் கண் பார்வை தெளிவாக தெரியும் மற்றும் தூரப்பார்வை, கிட்டப்பார்வை பிரச்சனையும் நீங்கும்.
பப்பாளி இரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. மேலும் சருமத்தை பராமரித்து அழகாக இருக்க முக்கிய பங்கு வகிக்கிறது.
பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வினை அளிக்கக்கூடிய ஒன்றாக உள்ளது.
பப்பாளி ஜூஸ் நன்மைகள்:
பப்பாளியி ஜூஸ் குடிப்பதன் மூலம் அதில் பிளவனாய்டுகள், ஆன்டி ஆக்ஸைடுகள் நமது உடலில் புற்றுநோய்களை உருவாகும் செல்களை அழித்து புற்றுநோய் வராமல் இருக்க செய்கிறது.
அதுமட்டும் இல்லாமல் முகத்தில் காணப்படும் இறந்த செல்கள் அனைத்தும் அழிந்து முகம் பளபளப்பாகவும், ஈர்ப்பத்துடனும் இருக்க உதவுகிறது.
மேலும் நம்முடைய உடலில் காணப்படும் தேவையற்ற கொழுப்புகள் நீங்க பப்பாளி ஜூஸ் சிறந்த ஒன்றாக உள்ளது.
மூங்கிலின் பல்நோக்கு திறன் பற்றி உங்களுக்கு தெரியுமா
மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். | Multipurpose |