நீங்க வீட்டில் மஞ்சள் பயன்படுத்துவீங்களா..! அப்போ இது தெரியாம பயன்படுத்தாதீங்க..!

Turmeric Multi Purpose

யாரிடமாவது ஒரு பொருளை பற்றி அந்த பொருள் எதற்கு எல்லாம் பயன்படுகிறது என்று கேட்டால் ஏதாவது ஒன்றை மட்டும் தான் சொல்வோம். ஆனால் அந்த பொருளானது நிறைய வகையான பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்தபட்டிருக்கும். நம்மில் சிலருக்கு அது தெரியமால் இருக்கும். பொதுவாக நாம் வாழ்ந்து கொண்டிருக்குக்கும் இந்த உலகத்தில் எல்லா பொருளும் பலநோக்கு திறனுடன் தான் இருக்கிறது. ஆனால் அது தான் நமக்கு தெரிவது இல்லை. ஆகவே இன்றைய பதிவில் மஞ்சள் ஆனது எவற்றிற்கு எல்லாம் பயன்படுகிறது என்று தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.

இதையும் படியுங்கள்⇒ உங்க வீட்ல ஓமவல்லி செடி இருக்கா..! அப்போ இதை தெரிஞ்சுக்கோங்க.. 

மஞ்சள்:

மஞ்சள் ஆனது மிகப்பழமை வாய்ந்த ஒரு மூலிகையாக உள்ளது. இதனை மற்ற நாடுகளை விட இந்தியாவில் தான் அதிகமாக பயன்படுத்துகின்றனர். மஞ்சள் செடியானது 60 முதல் 90 செ.மீ வரை வளரும் தன்மை கொண்டது.

அதுபோல இந்த செடி வளருவதற்கு 20 °C முதல் 30 °C வரை வெப்பநிலை கட்டாயமாக தேவைப்படும். மேலும் இத்தகைய மஞ்சள் ஆனது இஞ்சி குடும்பத்தினை சேர்ந்தவை ஆகும்.

மஞ்சளின் வகைகள்:

 1. கஸ்தூரி மஞ்சள்
 2. கரிமஞ்சள்
 3. காட்டு மஞ்சள்
 4. மர மஞ்சள்
 5. காஞ்சிரத்தின மஞ்சள்
 6. குடமஞ்சள்
 7. விரலி மஞ்சள்
 8. குரங்கு மஞ்சள்
 9. முட்டா மஞ்சள்
 10. ஆலப்புழை மஞ்சள்
 11. நாக மஞ்சள்

மஞ்சளில் உள்ள சத்துக்கள்:

மஞ்சளில் உள்ள சத்துக்கள்

 கால்சியம், கார்போஹட்ரேட், பொட்டாசியம், புரதம், இரும்புச்சத்து, கொழுப்புச்சத்து, வைட்டமின் B6, மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு என்ற பல சத்துக்கள் உள்ளது. இத்தனை சத்துக்களை கொண்ட மஞ்சள் ஏதோ ஒரு வகையில் உடலிற்கு நன்மையினை தருகிறது. 
வீட்டில் செம்பருத்தி செடி வைத்திருக்கும் அனைவருக்கும் இது தெரியாத..! அப்போ உடனே தெரிஞ்சுக்கோங்க.. 

மஞ்சளின் மருத்துவ குணங்கள்:

 • பாக்டீரிவைஅழித்தல்
 • கை மற்றும் கால்களில் புண்ணை குணப்படுத்த
 • வாய்ப்புண்
 • வயிற்று புண்
 • தொண்டையில் ஏற்படும் எரிச்சல்
 • உடலில் ஏற்படும் அலர்ஜி
 • மூளை நன்றாக செயல் பட
 • இதயம் பலம் பெற
 • புற்றுநோயினை எதிர்த்தல்

மஞ்சள் ஆனது மேலே சொல்லப்பட்டுள்ள நோய்கள் மட்டும் இல்லாமல் இன்னும் எண்ணற்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.

மஞ்சள் பொடி:

மஞ்சள் பொடி

இயற்கையான முறையில் இருந்து கிடைக்கக்கூடிய மஞ்சளை வெயிலில் காயவைத்து அதனை சுத்தப்படுத்தி தயாரித்தால் போதும் மஞ்சள் பொடி தயார் ஆகிவிடும்.

உடலில் ஏற்படும் சளி மற்றும் இருமலை குணப்படுத்துவதற்கு மஞ்சள் பொடியினை பாலுடன் சேர்த்து காய்ச்சி குடிக்கின்றனர். இவ்வாறு செய்வதன் மூலமும் விரைவில் நல்ல பலனை அடைகின்றனர்.

மேலும் நம்முடைய உடலில் ஏற்படும் எந்த விதமான பாக்டீரியா தொற்றாக இருந்தாலும் அதனை விரைவில் சரி செய்வதற்கு மஞ்சள் பொடியினை தான் உபயோகப்படுத்துகின்றனர்.

முகத்திற்கு மஞ்சள் பொடி:

மஞ்சளின் மருத்துவ குணங்கள்

மஞ்சள் அல்லது மஞ்சள் பொடி இவற்றில் எதை நம்முடைய சருமத்திற்கு பயன்படுத்தினாலும் கூட முகத்தில் இருக்கும் முடி, அழுக்கு, தேமல், கரும்புள்ளி மற்றும் பருக்கள் போன்றவற்றை நீக்கி முகத்தை பளபளக்க செய்ய உதவுகிறது.

இதோடு மட்டும் இல்லாமல் முகத்தை இளமையாக வைக்க இது மிகசிறந்த ஒன்றாக உள்ளது.

சமையலில் மஞ்சள்:

நம்முடைய வீட்டில் சமைக்கு அனைத்து சாப்பாட்டிலும் மஞ்சள் பொடி சேர்க்கப்படுகிறது. இவ்வாறு சேர்ப்பதன் மூலம் நாம் சாப்பிடும் சாப்பாடு செரிமானம் ஆகவும் மற்றும் நுண்ணுயிர்களை எதிர்க்கும் தன்மையினையும் அளிக்கிறது.

மேலும் இது போன்ற தகவலை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும். Multipurpose