செப்டம்பர் 15 முதல் தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அரசு அறிவிப்பு..!

Advertisement

செப்டம்பர் 15 முதல் தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி அரசு அறிவிப்பு..!

மாணவ செல்வங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. அதாவது வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதில் முதல் தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவல்களை நாம் இப்பொழுது படித்தறியலாம் வாங்க.

அதாவது கடந்த மே 7-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், அரசுப் பள்ளிகளில் ஒன்று  முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு இனி காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதல் கட்டமாக இத்திட்டம் சில மாநகராட்சிகளிலும் தொலைதூர கிராமப்புறங்களிலும் செயல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான அரசாணை அண்மையில் வெளியிடப்பட்டது.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம்:

அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்பதற்காகவும், தாய்மார்களின் சுமையை குறைக்க வேண்டும் என்பதற்காகவும், மாணவர்கள் யாரும் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காகவும் இத்தகைய திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த சிற்றுண்டி திட்டத்திற்கு ரூ.33.56 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் வருகின்ற 15.09.2022 தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்படும் என்று மேலும், இந்த திட்டத்தின் மூலமாக தமிழ்நாட்டில் உள்ள 1,545 அரசு பள்ளிகளில் பயிலும் 1,14,095 மாணவர்களுக்கு காலை உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் எந்தெந்த உணவு வகைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனபதற்கான பட்டியலையும் பள்ளிக்கல்வித்துறை முன்பே வெளியிட்டிருந்தது.

இந்த திட்டம் குறித்த மேலும் முழு விவரங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 அரசுப் பள்ளியில் காலை உணவு திட்டம்..! அரசாணை வெளியிட்டது..!

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News

 

Advertisement