மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் | Union Budget 2022 Highlights in Tamil
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த நான்காம் பட்ஜெட்டாகும். இந்த மத்திய பட்ஜெட்டானது இளைஞர்கள், பெண்கள், ஏழை மக்களின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டாக இது இருக்கும். அடுத்த 25 ஆண்டுகளுக்கான வளர்ச்சி திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வாங்க மத்திய பட்ஜெட் 2022-ல் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சத்தினை இந்த பதிவில் நாமும் தெரிந்துக்கொள்ளலாம்..
வேட்புமனு தாக்கல் செய்வது எப்படி? |
நாட்டின் பொருளாதார வளர்ச்சி சதவீதப்படி:
வருடம் | வளர்ச்சி விழுக்காடு |
2017 – 2018 | 06.80% |
2018 – 2019 | 06.53% |
2019 – 2020 | 04.02% |
2020 – 2021 | 07.96% |
குறிப்பு: 2020-ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் காரணமாக வளர்ச்சி தடைப்பட்டது.
நிதிநிலை அறிக்கை 2022 – முக்கிய அம்சங்கள்:
- நடப்பாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 9.2% சதவீதமாக இருக்கும்.
- நடப்பாண்டில் 5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்தப்படும்.
- அனைத்து கிராமப்புறங்களிலும் இ-சேவை வசதி ஏற்படுத்தப்படும்.
- அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்.
- கொரோனா காலத்தில் கல்வியில் பாதிப்படைந்த மாணவர்களுக்கு புதிதாக கல்வி தொலைக்காட்சி உருவாக்க திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
- அனைத்து வீடுகளுக்கும் குழாயின் மூலம் தண்ணீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ. 60,000/- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- பிரதமரின் அவாஸ் யோஜனா திட்டத்திற்கு ரூ. 48,000/- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- அனைத்து நில ஆவணங்களையும் கணினிமயமாக்கி “ஒரே நாடு – ஒரே பத்திரப்பதிவு” திட்டம் ஊக்குவிக்கப்படும்.
- நாடு முழுவதும் 75 மாவட்டங்களில் டிஜிட்டல் வங்கிகள் உருவாக்கப்படும்.
- சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு ரூ. 19,500/- கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- 2030-ம் ஆண்டுக்குள் 280 கிகா வாட் மின்சாரம் தயாரிக்க இலக்கு உள்ளது.
- சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்ட்டுக்கள் வரும் ஆண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
- பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 80 லட்சம் பயனாளர்களுக்கு வீடுகள் கட்டி தருவதற்கு ரூ. 40,000/- கோடி மானியமாக வழங்கப்படும்.
- நாடு முழுவதும் பல இடங்களில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் நிறுவப்படும்.
- திருத்தப்பட்ட வருமான வரி கணக்கினை 2 ஆண்டுகள் வரை தாக்கல் செய்யலாம்.
- பிட்காயின் போன்ற டிஜிட்டல் கரன்சிகள் மூலம் வரும் வருமானத்தில் 30% வரி செலுத்த வேண்டும்.
- உழவர்களுக்கு வேளாண் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொகையாக ரூ. 2.37 கோடி நேரடியாக வழங்கப்படும்.
இது போன்ற பலவிதமான பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | பொதுநலம்.com |