அனைவரும் எதிர்பார்த்த வாட்ஸ் ஆப்பில் புதிய மாற்றம்..!

Whatsapp update in tamil

புதிய மாற்றங்கள்

வாட்சப் பயனர்களுக்கு அன்பு வணக்கம்..! பொதுவாக  வாட்சப் என்பது அப்போது பெரிய ஆட்கள் மட்டுமே பயன்படுத்திய ஒன்றாக இருந்தது. ஆனால் இன்று அனைவரின் கையில் இருக்கக்கூடிய ஒன்றாக திகழ்கிறது. இப்போது வாட்சப் என்பது அன்றாட வாழ்வில் அத்தியாவசிய ஒன்றாகவும் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் நாம் அதிகம் அறிவியல் ரீதியாக வளர்ந்து கொண்டு வருகிறோம் என்பதுதான். என்னதான் வளர்ந்து வந்தாலும் நாம் நிறைய விஷயங்களை தினமும் கற்றுக்கொண்டு அதற்கு தகுந்ததுபோல் நம்மை தயார் செய்து கொள்ள வேண்டும். அந்த அடிப்படையில் வாட்சப்புக்கு புதிய மாற்றங்களும் அப்டேட் செய்து உள்ளார்கள். வாங்க அதனை படித்து தெரிந்துகொள்வோம்.

வாட்சப் புதிய மாற்றங்கள்:

இந்த மாற்றத்தை வாட்சப் பயனர்கள் நீண்ட நாட்களாக காத்திருந்த ஒன்றாகும். இப்போது பயன்படுத்தும் வாட்சப் இன்டர்நெட் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது வரவிருக்கும் வாட்சபை நான்கு விதமாக பயன்படுத்த முடியும். அந்த நன்கு வாட்சப் லாகின் செய்து பயன்படுத்தும் படி இருக்கும் அதேபோல் ஸ்மோர்ட் போனில் இன்டர்நெட் தேவைப்படாது.

Disappearing Messages:

நீங்கள் அனுப்பிய மெசேஜ் தானாக அழியும் வசதி போன வருடம் அறிமுகப்படுத்திய நிலையில் இந்த வசதியை பயன்படுத்துபவர்களுக்கு 7 நாட்களில் தானாக மறைந்து விடும். இப்போது வரப்போகும் அப்டேட் என்பது 7 நாட்கள் மட்டுமில்லாமல் 90 நாட்கள் கூடுதலாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

Privacy மாற்றம்:

முன்பு நாம் ஒருவர் வாய்ஸ் மெசஜ் அனுப்பினால் அதனை அனுப்பிய பின் மட்டுமே கேட்கமுடியும் ஆனால் இப்போது வரப்போகும் அப்டேட்டில் நம்முடைய வாய்ஸ் மெசஜை அனுப்புவதற்கு முன்னால் அதனை நாம் கேட்டுவிட்டு அதன் பின் கூட அனுப்ப முடியும்.

அதேபோல்  நம்முடைய வாட்சப் Dp-யை அனைவருக்கும் காட்டும் படி இப்போது இருக்கும் வாட்சப்பில் உள்ளது இனி வரும் வரும் வாட்சப் குறிப்பிட்ட நபருக்கும் மட்டும் காட்டும் வசதிகள் உள்ளது.

அது மட்டுமில்லாமல் அட்மின்களின் வேலையை எளிதாகக்க அனைத்து குரூப்களையும் ஒரு குரூப் போல் அட்மின் வைத்துக்கொண்டு அதிலிருந்து ஒரு மெசஜ் அனுப்பினால் அதன் குரூப்பில் உள்ள அனைத்து குரூப்புக்கும் அந்த மெசஜ் போகும். இது அனைத்து குரூப் அட்மினுக்கும் உதவியாக இருக்கும்.

வாட்சப் என்பதன் தமிழ் பொருள்

இதுபோன்ற பயனுள்ள செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉News