அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. கூடிய விரைவில் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு!

8th Pay Commission News Tamil

அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ்.. கூடிய விரைவில் அமலுக்கு வரும் 8வது ஊதியக்குழு | 8th Pay Commission News Tamil

அரசு ஊழியர்களுக்கு ஒரு நற்செய்தி .. அப்படி என்ன குட் நியூஸ் என்று தானே கேட்குறீர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. 7வது ஊதியக் குழுவுக்குப் பிறகு, 8வது ஊதியக் குழுவை அரசு விரைவில் அமைக்க உள்ளது. ஆக அடுத்த ஆண்டு மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும் என நம்பப்படுகிறது. இந்த தகவல் குறித்த விவரங்களை இப்பொழுது நாம் படித்தறியலாம் வாங்க.

ஊழியர்களின் சம்பளம் எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது?

7வது ஊதியக் குழுவின் கீழ், தற்போது ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியம் ரூ.18,000 ஆக உள்ளது. அரசு இந்த சம்பளத்திற்கு ஃபிட்மென்ட் காரணியை அமல்படுத்தியது. அதே சமயம் இதற்கு பெரும்பாலானோர் எதிர்ப்புக்கள் அதிகரித்து வந்தது, இருப்பினும் அப்போதைய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மத்திய ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க புதிய கொள்கையை பயன்படுத்த எண்ணினார். இதன் காரணமாக ஊழியர்களின் சம்பளம் கணக்கிடப்படும் ஃபிட்மென்ட் காரணி செயல்படுத்தப்பட்டது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
ஆட்டோ, டாக்சி, பஸ், லாரி வாங்க 75 லட்சம் வரை மானியம்..!

சம்பளம் நேரடியாக 18,000 ரூபாயில் இருந்து 26,000 ரூபாயாக உயர்த்தப்படலாம்:

ஏழாவது ஊதியக் குழுவில் ஃபிட்மென்ட் காரணி 2.57 மடங்கு இருந்தது, அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 14.29 சதவீதம் அதிகரித்தது, இந்த அதிகரிப்பு காரணமாக, ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் ரூ 18,000 ஆக நிர்ணயிக்கப்பட்டது. . அதே நேரத்தில், எட்டாவது ஊதியக் குழுவின் கீழ், இந்த முறை ஃபிட்மென்ட் காரணி 3.68 மடங்கு இருக்கலாம் என்றும், அதன் பிறகு ஊழியர்களின் சம்பளம் 44.44 சதவீதம் உயரக்கூடும் என்றும் நம்பப்படுகிறது. அதே நேரத்தில், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளம் நேரடியாக ரூ.18,000 லிருந்து ரூ.26,000 ஆக அதிகரிக்கலாம்.

8வது ஊதியக் குழுவை எப்போது அமல்படுத்தலாம்?

தற்போது ​​8வது ஊதியக் குழுவை அமல்படுத்துவது தொடர்பான எந்தவொரு அதிகாரபூர்வ தகவலையும் அரசு அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் மத்திய அரசு 2024-ம் ஆண்டில் 8-வது ஊதியக் குழுவை அறிமுகப்படுத்தலாம் என்றும் இது முழுமையாக அது 2026-ம் முதல் செயல்பாட்டுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அதே நேரத்தில், நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடைபெற உள்ளதால், அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு பெரிய பரிசை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி ரயில் வரும் வரை காத்திருக்க வேண்டாம்..! இந்த குட் நியூஸ் தெரியாதா உங்களுக்கு..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil