Australia to Allow Employees to Ignore Work Calls and Emails Outside Working Hours
பொதுவாக வேலை செய்யும் இடத்தில் வேலை நேரம் முடிந்த பிறகும் வீட்டிற்கு வந்த பிறகு வேலையில் சம்மந்தமான தகவல்களை கேட்பார்கள். அப்படி இருக்கும் போது அதற்கான பதிலை நாம் சொல்ல வேண்டியிருக்கும். பதில் சொல்வது மட்டுமில்லாமல் ஏதவாது ஒரு வேலை கொடுத்தும் செய்ய சொல்வார்கள். அதனை நாம் தவிர்க்க முடியாது. லீவு நாட்களில் கூட வேலை செய்ய சொல்கிறார்களே என்று புலம்புவோம். இதெற்கெல்லாம் தீர்வு கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா நாட்டில் ஒரு அறிவிப்பை அறிவித்திருக்கிறது அது என்னவென்று இந்த முழு பதிவையும் படித்து அறிந்து கொள்ளுங்கள்.
ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ள அறிவிப்பு:
விடுமுறை நாட்களிலும் சாராய் வேலை முடிந்த பிறகும் சரி நிறுவனத்தார்கள் வேலை செய்பவர்களிடம் வீட்டிற்கு சென்றபிறகும் அலுவலகத்தைப் பற்றியே சிந்திக்கவேண்டிய நிலை உள்ளது. வேலை இல்லாத நேரத்தில் பொழுதை சந்தோசமாக கழிக்க முடியாத சூழ்நிலை மற்றும் வெளியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
4 நாட்கள் வேலை 3 நாட்கள் ரெஸ்ட் எங்கு தெரியுமா
இந்த பிரச்சனையை போக்கும் வகையிலும், தொழிலாளர்களுக்கு உரிமை வழங்கும் வகையிலும் பிரான்ஸ், ஸ்பெயின் பெல்ஜியம் ஆகிய ஐரோப்பிய நாடுகள் புதிய சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இந்த நாடுகளில் எல்லாம் வேலை நேரம் முடிந்தபின், தொழிலாளர்களை நிறுவனம் தொடர்புகொண்டால் அழைப்பை துண்டிக்கும் உரிமையை இந்த சட்டம் வழங்கியுள்ளது. இந்த நாடுகளை போலவே ஆஸ்திரேலியாவும் உள்ளது.
தொழிலாளர்கள் வேலை நேரம் முடிந்து சென்றபின், நிறுவனத்திடம் இருந்து வரக்கூடிய அழைப்புகள், மின்னஞ்சல்கள் போன்றவற்றை நிராகரிப்பதற்கான உரிமையை வழங்க, சட்டத்தில் திருத்தும் செய்யப்பட்ட்டுள்ளது.
வேலை நேரம் முடிந்த பிறகு வேலையாட்களை தொடர்பு கொண்டால் அந்த அழைப்பை வேலையாட்கள் தவிர்க்கலாம். வேலை நேரம் அல்லாத வேளையில், நீங்கள் பணியாற்றும் நிறுவனத்தினர் போனில் அழைத்தாலோ, மெசேஜ் அனுப்பினாலோ, அதனை தவிர்க்கலாம் என்று சட்டம் கொண்டு வர உள்ளது. ஒருவேளை நிறுவனர் மீறி போன் செய்தாலோ சம்மந்தப்ட்ட நிறுவன அதிபருக்கு அபராதமும் விதிக்க முடியும்.
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |