பொங்கலுக்கு ஊருக்கு போறவங்க இந்த பஸ் ரூட்ட தெரிஞ்சிக்கோங்க..!

Advertisement

Pongal Bus Route Chennai 2024 

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறை பல்வேறு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. மாநிலம் முழுவதும் ஜனவரி 12 முதல் 14 வரையிலும், பொங்கலுக்குப் பிந்தைய பண்டிகைகளுக்காக ஜனவரி 16 முதல் 18 வரையிலும் இயக்கப்படும்.

பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு பேருந்துகள் உட்பட 37,000 க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகளை இயக்க உளளதாக போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. சென்னையில் 6 இடங்களில் இருந்து பேருந்துகள் புறப்படும் எனவும் வழக்கமாக பேருந்துகள், சிறப்பு பேருந்துகள் என நாள்தோறும் 4,000க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் சிறப்பு பேருந்துகளின் எண்ணிக்கை 2024:

பேருந்து நிலையங்கள் பேருந்து செல்லும் வழித்தடங்கள்
மாதவரம் புதிய பேருந்து நிலையம் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு.
கே.கே.நகர் பேருந்து நிலையம் கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள்.
சானடோரியம் பேருந்து நிலையம் திண்டிவனம், விக்கிரவாண்டி மற்றும் பண்ருட்டி நோக்கி பேருந்துகள்.
தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிலையம் ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர், ஆரணிக்கு பேருந்து.
பூந்தமல்லி பைபாஸ் ரோடு பஸ் ஸ்டாப் ஆற்காடு, ஆரணி, வேலூர் வழியாக ஓசூர் மற்றும் திருத்தணி செல்லும் பேருந்துகள். 
டாக்டர் எம்ஜிஆர் பேருந்து நிலையம், கோயம்பேடு பெங்களூரு செல்லும் பேருந்துகள் மற்றும் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகள் திருநெல்வேலி, கரூர், தூத்துக்குடி, கும்பகோணம், விழுப்புரம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி மற்றும் சேலம்.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் SETC பேருந்துகள் ( ஆன்லைனில் முன்பதிவு செய்த பயணிகளுக்காக ) மற்றும் திருச்சி, தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் நோக்கி ஜிஎஸ்டி சாலையில் செல்லும் பேருந்துகள்

 pongal bus route chennai 2024 tamil

மேலும் விவரங்களுக்கு:

கிளாம்பாக்கம்:

கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் , கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை,  திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், எர்ணாகுளம் ஊர்களுக்கு SETC பேருந்துகள் இயக்கப்படும் என கூறப்படுகிறது.

கோயம்பேடு:

கோயம்பேட்டில் இருந்து திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர் செல்லும் சாதாரண பேருந்துகளும், திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, சிதம்பரம், கடலூர் மற்றும் புதுச்சேரி, கடலூர் செல்லும் பேருந்துகளும் புறப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே போல, புதுக்கோட்டை, திண்டுக்கல், திருப்பூர், ராமநாதபுரம், சேலம், கோவை ஆகிய ஊர்களுக்கான சாதாரண பேருந்துகளும் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி, சேலம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மயிலாடு துறை ஆகிய ஊர்களுக்கும் பேருந்துகள் இயக்கப்படும்.

பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் தேதி

பூந்தமல்லி:

பூந்தமல்லியில் இருந்து காஞ்சிபுரம், வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, ஓசூர் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.

தாம்பரம் சானிடோரியம்:

தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக செல்லும்  கும்பகோணம், தஞ்சாவூர் TNSTC பேருந்துகளும், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து, ஒரகடம் வழியாக காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ஆரணி செல்லும் பேருந்துகளும் இயக்கப்படும்.

ஈ.சி.ஆர். வழியாக சிதம்பரம், கடலூர் புதுச்சேரி செல்லும் வாகனங்கள் கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்தும் இயக்கப்படும் எனவும், கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மாதவரத்தில் இருந்து புறப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்த பயணிகளுக்கு மட்டும், கிளாம்பாக்கத்தில் இருந்து SETC சொகுசு பேருந்துகள் இயப்படும் எனவும், கோயம்பேடு, தாம்பரம், பெருங்களத்தூரில் இருந்து செல்ல முன்பதிவு செய்த தென்மாவட்ட மக்கள், கோயம்பேட்டில் பேருந்து புறப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நேரத்திற்கு கிளாம்பாக்கம் வர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் நேரில் முன்பதிவு செய்ய வசதியாக, கிளாம்பாக்கம், கோயம்பேடு மற்றும் தாம்பரம் மெப்ஸ் பேருந்து நிலையங்களில் காலை 7 மணி முதல் முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகிறது.

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement