குடும்ப அட்டைதாரர்கள் வசதிபடி கைரேகை பதியலாம்
தமிழக ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை மலிவு விலையில் வழங்கப்படுகிறது. இந்நிலையில், ரேஷன் கடைகளில் நடைபெறும் குளறுபடிகளை தவிர்க்கும் பொருட்டு ரேஷன் கார்டுகளில் இருக்கும் உறுப்பினர் ரேஷன் கடைகளுக்கு நேரில் வந்தால் மட்டுமே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் எனவும், கைரேகை பதிவு கட்டாயம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை பற்றி முழுமையாக அறிந்து கொள்வோம் வாங்க..
Ration Shop Fingerprint News in Tamil:
குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் பெண்களுக்கு திருமணம் ஆகிவேறு ஊருக்கு சென்றிருப்பார்கள் இப்படி இருந்தால் அவர்களின் பெயர்களை நீக்க வேண்டியிருக்கும். வீட்டில் உறுப்பினர்கள் இறந்து விட்டாலும் குடும்ப அட்டையில் பெயர்களை நீக்க வேண்டும். சில பேர் பெயர்களை நீக்காமலே இருக்கின்றார்கள். அதனால் தான் குடும்ப அட்டைகளில் இணைக்கப்பட்ட அனைத்துப் பயனாளிகளின் கைவிரல் ரேகையைச் சரிபாா்க்க வேண்டுமென மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இதன்படி தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களிடம் கைரேகை பதிவு செய்யப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டுகளில் இருக்கும் உறுப்பினர்கள் ரேஷன் கடைகளில் வந்து கைரேகை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். ஏனென்றால் வெளி ஊரில் பார்ப்பார்கள், அவர்களை திடீரென்று வர சொன்னால் அவர்களால் வர முடியாது, இதனால் பெரும் அவதிக்கு உள்ளானார்கள். அதனால் அரசு புதிய புதிய முடிவை எடுத்துள்ளது.
அரசு கூறியதாவது குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்கள் தங்களின் வசதிக்கேற்ப ரேஷன் கடைகளில் வந்து கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவர்களிடம் எந்த விதமான ஆவணங்களையும் கேட்க கூடாது.
அதாவது குடும்ப உறுப்பினர்களின் வசதிக்கேற்ப வந்து கைரேகையை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களை கட்டாயப்படுத்தி பதிவு செய்தல் கூடாது. கைரேகை பதிவு செய்யப்படவில்லை என்றால் அவர்களுக்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் வழங்கப்படாது என்ற தவறான தகவலை கூற கூடாது.
4 நாட்கள் வேலை 3 நாட்கள் ரெஸ்ட் எங்கு தெரியுமா
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |