பேருந்து பயணம்
பேருந்து பயணம் என்பது நாம் அனைவருக்கும் இன்றியமையாத ஒன்றாக உள்ளது. ஏனென்றால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு நாம் செல்வதற்கு பெரும்பாலும் நாம் பேருந்து வசதியினை தான் பயன்படுத்துகின்றோம். இத்தகைய பேருந்து பயணத்தில் தமிழக அரசானது நிறைய அறிவிப்பினை மக்கள் நலன் கருதி அறிவித்துள்ளது. அதுவும் குறிப்பாக பெண்களுக்கு அறிவித்த கட்டணமில்லா பேருந்து பயணமானது மிகவும் நன்மை பயனிக்கும் வகையில் இருந்தது. இவ்வாறு இருக்கையில் தமிழக அரசு பேருந்து பயணம் குறித்து ஒரு முக்கிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. பேருந்து பற்றிய அடுத்த அறிவிப்பு என்னவாக இருக்கும் என்று நீங்கள் யோசிக்கலாம். உங்களுடைய யோசனைக்கான பதிலை இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொண்டு தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தலாம் வாருங்கள்..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl
ஏசி பேருந்து பயணம்:
நாம் பயணம் செய்யும் முறையில் பேருந்து பயணமும் ஒன்று. அத்தகைய பேருந்திலும் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்து என்ற இரண்டு வகையான பேருந்துகள் உள்ளது.
அதுபோல ஏசி பேருந்தும் உள்ளது. இப்போது வெயில் காலம் வந்துவிட்ட காரணத்தினால் பெரும்பாலான மக்கள் ஏசி பேருந்தில் தான் பயணம் செய்ய விரும்புகிறார்கள்.
இப்படி இருக்கும் பட்சத்தில் தமிழக அரசானது ஏசி பேருந்தில் பயணம் செய்வது குறித்து முக்கிய அறிவிப்பினை அறிவித்துள்ளது. அது என்ன அறிவிப்பு என்றால்…?
தமிழகத்தை பொறுத்தவரை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த வெயில் பிரச்சனையால் மக்கள் அனைவரும் வீட்டில் இருப்பதற்கே அவஸ்தி படும் நிலையில் இருக்கும் போது வெளியில் பயணம் செல்லும் போது அதிக அளவில் கஷ்டப்படுகிறார்கள்.
இத்தகைய கஷ்டத்தில் கொஞ்சம் விடுபட வேண்டும் என்பதற்காக மக்கள் பேருந்தில் பயணம் செய்யும் போது ஏசி இருக்கும் பேருந்தில் பயணம் செய்து வருகிறார்கள். ஆனால் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழா அரசு அறிவிப்பு ஒன்று அறிவித்துள்ளது.மேலும் படிக்க
அத்தகைய அறிவிப்பில் படி பேருந்தில் ஏசி பொருத்தப்பட்டு இருப்பதை நீக்கி வரும் பணியினை தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது.
எதனால் பேருந்தில் ஏசிகள் நீக்கப்படுகிறது என்றால் பேருந்தில் ஏசியில் இருந்து போதுமான அளவு காற்று வராத காரணத்தினால் பயணிகள் புகார் அளிப்பதாகவும், பேருந்தில் உள்ள ஏசி பழுது அடைந்தால் அதனை மீண்டும் பழுது செய்வதற்கு கட்டணம் அதிகமாக இருப்பதனாலும் இதுபோன்ற காரணத்திற்காக தான் நீக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது.மேலும் ஒரு பேருந்தில் ஏசி வேலை செய்யவில்லை என்றால் அது இயக்க முடியாமல் அப்படியே இருக்கிறது என்பதும் ஒரு காரணம் ஆகும். அதுபோல ஏசி பேருந்து கட்டணம் என்பது தோராயமாக 20 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை இருக்கிறது. ஆனால் அந்த ஏசி பழுது அடைந்தால் அதற்கான கட்டணம் கூடுதலாக உள்ளது.
ஆகையால் இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் பேருந்தில் ஏசி பொருத்தப்பட்டு இருப்பதை நீக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்👇👇
இனி இவர்களுக்கு எல்லாம் 30,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்… தமிழக அரசியின் புதிய அறிவிப்பு..
மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | News in Tamil |