வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

இனி இவர்களுக்கு எல்லாம் 30,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்…! தமிழக அரசியின் புதிய அறிவிப்பு..!

Updated On: April 17, 2023 6:20 AM
Follow Us:
ulemas and other personnel boards in tamil nadu government for scholarships in tamil
---Advertisement---
Advertisement

தமிழக அரசு உதவித்தொகை

தமிழக அரசு மக்கள் பயன்பெறும் வகையில் நிறைய திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. அதோடு மட்டும் இல்லமால் பெண்கள், மாணவர்கள் மற்றும் முதியோர்கள் என அவர்களுக்கும் உரிமைத்தொகையினை வழங்கி வருகிறது. இத்தகைய நிலையில் தமிழக அரசானது புதிய அறிவிப்பினை ஒன்று அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பானது ஒன்றை மட்டும் அடிப்படையாக வைத்து கூறாமல் நிறையவற்றாயினை அடிப்படையாக வைத்து தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆகையால் அத்தகைய அறிவிப்பினை பற்றிய முழுவிவரங்களையும் விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்துக்கொள்ளலாம் வாருங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

உதவித்தொகை அறிவிப்பு:

கடந்த சில மாதங்களாக நிறைய திட்டங்கள் அமலுக்கு கொண்டுவரப்பட்டது. அத்தகைய திட்டங்கள் யாவும் மக்கள் பயன்பெறும் வகையிலும் மற்றும் பாதுகாப்பு கருதியும் இருந்தது என்பது முக்கியமான ஒன்று.

அந்த  வகையில் முந்தைய தினம் சட்டசபையில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான் தமிழக மக்களுக்கு சில நற்செய்தியினை அறிவித்துள்ளார். அத்தகைய செய்தி என்னவென்றால்…

உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் கீழ் உள்ள உறுப்பினர்களின் குழந்தைகள் 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பள்ளி பயின்று கொண்டிருந்தால் அவர்களுக்கு ரூபாய் 1,000 உரிமைத் தொகையாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் படிக்க

அதேபோல இத்தகைய நல வாரியத்தின் கீழ் பதிவு செய்த ஒரு நபர் இயற்கை மரணம் அடைந்தால் இதுநாள் வரையிலும் அதற்காக 20,000 ரூபாய் உரிமைத்தொகையாக வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இனி உரிமைத்தொகையாக ரூபாய் 30,000 ரூபாய் அளிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதுவே உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் கீழ் பதிவு செய்த ஒரு நபர் திடீரென விபத்து காரணமாக மரணம் அடைந்தால் அவர்களுக்கு உதவித்தொகையாக இனி 1 லட்சம் ரூபாய் வழங்கப்படாது என்றும் அதற்கு மாறாக 1,25,000 ரூபாய் அளிக்கப்படும் என்றும் சட்ட சபையில் அறிவித்துள்ளார்.

மேலும் ஏழையாக உள்ள சிறுபான்மையினருக்கு மின் மோட்டார் பொருந்திய 2,500 தையல் மிசின் வழங்க கோரி சுமார் 60,00,000 ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்⇒ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு ஓர் நற்செய்தி.. இனி அனைத்தும் இப்படி தான் கிடைக்கும்.. 

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement

Prabha R

நான் உங்கள் பிரபா. நான் Business, Banking, News, Schemes, தொழிநுட்பம் என இத்தகைய பிரிவில் அன்றாடம் நடக்கும் பதிவுகளையும், நமக்கு தெரியாத பல பயனுள்ள தகவலையும் தமிழில் Pothunalam.com இணையத்தளத்தின் வாயிலாக பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now