Tamil Writer Ki. Rajanarayanan Life History in Tamil
பொதுவாக நம்மில் பலருக்கும் புத்தகங்கள் படிப்பது ஒரு பொழுது போக்காக இருக்கும். அப்படி நாம் அனைவருக்கும் ஏதாவது ஒரு புத்தகம் மிகவும் மனம் கவர்ந்த புத்தகமாக இருக்கும். அதனை படிக்கும் பொழுது இதனை எழுதிய ஆசிரியரை பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று சிந்தனை செய்வோம். ஆனால் அதற்கான வாய்ப்பு நமக்கு கிடைத்திருக்காது.
உங்களுக்கும் இந்த மாதிரியான சிந்தனை உள்ளது என்றால் இந்த பதிவு உங்களுக்கு தான். ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் ஒரு தமிழ் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படும் தமிழ் எழுத்தாளர் கி. ராஜநாராயணன் பற்றி தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => திறனாய்வுச் செம்மல் என்ற விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் க. பூரணச்சந்திரன் பற்றிய சில குறிப்புகள்
Writer Ki. Rajanarayanan Biography in Tamil:
கி.ராஜநாராயணன் செப்டம்பர், 16 1922-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கோவி ல்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தில் பிறந்தார். இவரை கி.ரா என்று சுருக்கமாக அழைப்பார்கள்.
இவர் ஒரு விவசாயி ஆவார். ஆனால் இவர் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். இவரது முதல் கதை 1958-ஆம் ஆண்டு சரஸ்வதி இதழில் வெளியானது.
இவரின் கதைகள் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும் மற்றும் வாழ்க்கை முறையையும் விவரிப்பதாகவே இருந்துள்ளது.
இவர் தனது 99ஆம் வயதில் 2021-ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி புதுச்சேரியில் இயற்கை எய்தினார்.
படைப்புகள்:
அகராதிகள்:
கரிசல் வட்டார வழக்கு அகராதி
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => சாயாவனம் என்னும் புதினத்தை எழுதிய எழுத்தாளர் பற்றிய குறிப்பு
சிறுகதைகள்:
- கன்னிமை
- மின்னல்
- கோமதி
- நிலை நிறுத்தல்
- கதவு(1965)
- பேதை
- ஜீவன்
- நெருப்பு
- விளைவு
- பாரதமாதா
- கண்ணீர்
- வேட்டி’
- கரிசல்கதைகள்
- கி.ரா-பக்கங்கள்
- கிராமிய விளையாட்டுகள்
- கிராமியக்கதைகள்
- குழந்தைப்பருவக்கதைகள்
- கொத்தைபருத்தி
- புதுவை வட்டார நாட்டுப்புறக்கதைகள்
- பெண்கதைகள்
- பெண்மணம்
- வயது வந்தவர்களுக்கு மட்டும்
- கதை சொல்லி
- மாயமான்
குறுநாவல்:
- கிடை
- பிஞ்சுகள்
நாவல்:
- கோபல்ல கிராமம்
- கோபல்லபுரத்து மக்கள் (சாகித்திய அகாடமி விருது பெற்றது – 1991)
- அந்தமான் நாயக்கர்
கட்டுரை:
- ருஷ்ய மண்ணின் நிறம் என்ன?
- புதுமைப்பித்தன்
- மாமலை ஜீவா
- இசை மகா சமுத்திரம்
- அழிந்து போன நந்தவனங்கள்
- கரிசல் காட்டுக் கடுதாசி
- மாந்தருள் ஒரு அன்னப்பறவை
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் => எழுத்தாளர் நா.சொக்கன் வாழ்க்கை வரலாறு
தொகுதி:
- நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்
திரைப்படமாக்கப்பட்ட இவர் எழுத்துக்கள்:
- ஒருத்தி (கிடை என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு அம்சன் குமார் இயக்கிய திரைப்படம்)
- கரண்ட் (கரண்டு என்ற கதையினை அடிப்படையாகக் கொண்டு கே. அரிகரன் இயக்கிய இந்தி திரைப்படம்)
விருதுகள்:
- 1971- தமிழ் வளர்ச்சி ஆராய்ச்சி மன்றம் விருது
- 1979-இலக்கிய சிந்தணை விருது
- 1991 – சாகித்திய அகாதமி விருது
- 2008 – மா.சிதம்பரம் விருது
- 2016-தமிழ் இலக்கிய தோட்டம்
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் => உடையும் இந்தியா என்னும் நூலை எழுதிய எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பற்றிய சில குறிப்புகள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |