வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

உடையும் இந்தியா என்னும் நூலை எழுதிய எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பற்றிய சில குறிப்புகள்..!

Updated On: August 17, 2023 1:21 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

Writer Aravindan Neelakandan Biography in Tamil

நமது தமிழ் மொழியில் பல ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. நம்மில் பலருக்கும் புத்தகம் படிப்பது என்பது மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு ஆகும். நாம் அனைவரும் பல புத்தகங்களை படித்திருப்போம் அதனை எழுதியவரை நமது நினைவிலேயே மனதார பாராட்டியும் இருப்போம். ஆனால் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி நமக்கு தெரிந்திருக்காது. அதனால் தான் நமது பொதுநலம்.காம் பதிவின் மூலம் தினமும் ஒரு தமிழ் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாறு பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் உடையும் இந்தியா என்னும் நூலை எழுதிய எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டனின் வாழ்க்கை வரலாற்றினை தான் அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

Writer Aravindan Neelakandan Life History in Tamil:

Writer Aravindan Neelakandan Life History in Tamil

அரவிந்தன் நீலகண்டன் 1971-ஆம் ஆண்டு ஜூன் 16-ஆம் தேதி நாகர்கோவிலில் பிறந்தார். இவரின் தந்தை பெயர் என்.எஸ்.பிள்ளை ஆவார். இவர் சென்னைப் பல்கலைக் கழகத்தில் உளவியலில் முதுகலைப் பட்டமும், மதுரை காமாராஜர் பல்கலைக் கழகத்தில் பொருளாதரத்தில் பட்டமும் பெற்றுள்ளார்.

திண்ணை இணைய இதழில் இந்தியவியல் மற்றும் அறிவியல் கட்டுரைகளை எழுதத் தொடங்கியதிலிருந்து பொது வெளியில் அறிமுகமானார். மேலும் ராஜீவ் மல்கோத்ரா உடன் இணைந்து இவர் எழுதிய உடையும் இந்தியா என்னும் நூல் மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட இவரது படைப்பு ஆகும்.

அதே போல் இவரது ஆழி பெரிது வேதகாலப் பண்பாடு குறித்து எழுதியுள்ள ஓர் ஆய்வு நூல்,  தமிழ்ப் பேப்பர் என்ற இணைய இதழில் தொடராக வெளிவந்து  மிகப்பெரும் வரவேற்பை பெற்றது.

இதையும் படியுங்கள்=> முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்

பணிகள்:

கதைகள், கட்டுரைகள் மற்றும் நூல்கள் எழுதுவதோடு வலம் என்ற மாத இதழின் பொறுப்பாசிரியர்களில் ஒருவராகவும் செயல்பட்டு வருகின்றார். மேலும் ஸ்வராஜ்யா மற்றும் தமிழ் ஹிந்து இணையதளங்களின் பதிப்பாசிரியர்களில் ஒருவராகவும் உள்ளார்.

படைப்புகள்:

  1. உடையும் இந்தியா
  2. ஆழி பெரிது: வேதப் பண்பாடு குறித்த உண்மையான தேடல்
  3. இந்திய அறிதல் முறைகள்: நவீன அறிவியல் புலங்களைப் புரிந்து கொள்ள
  4. நம்பக்கூடாத கடவுள்
  5. நரேந்திர மோடி புதிய இரும்பு மனிதர்
  6. பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிஸம்
  7. இந்துத்துவச் சிறுகதைகள்
  8. இந்துத்துவம் ஓர் எளிய அறிமுகம்
  9. கொஞ்சம் தேநீர் கொஞ்சம் இந்துத்துவம்
  10. மோடியின் குஜராத்: இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு முன்மாதிரி

போன்ற தமிழ் புத்தகங்களை எழுதியுள்ளார்.

இதையும் படியுங்கள்=>தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள் என்ற சிறுகதையை எழுதிய நாஞ்சில் நாடன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil

 

Advertisement

Neve Thitha

எனது பெயர் நிவேதிதா நான் பொதுநலம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பணியாற்றி வருகின்றேன். நான் அனைத்து துறைகள் சம்மந்தப்பட்ட தகவல்களையும் உங்களுக்கு சுவாரசியமாக வழங்குகி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now