கவிஞர் தாமரை வரலாறு | Kavignar Thamarai Biography in Tamil

Advertisement

Kavignar Thamarai History in Tamil

புத்தகம் என்றால் அனைவர்க்கும் பிடிக்கும் அதிலும் கவிதை வரிகள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் காரணம் நாம் நினைப்பதையும் ஒரு கவிதைகள் மூலம் சொல்லவும் முடியும். அதனை படிக்கும் போதும் உணரவும் முடியும்.

கவிதைகள் என்றால் வைரமுத்து, வாலி என ஆண்கள் வரிசையில் ஆயிரம் பேர் இருந்தாலும். அதனை பெரிதாக யாரும் பேசமாட்டார்கள். ஆனால் பெண்களுக்கும் கவிதைகள் எழுத முடியும் அவர்களையும் கவிஞர் என்றும் சொல்கிறார்கள். அந்த துறையிலும் பெண்கள் கால் பதித்து வருகிறார்கள்.  அந்த பெண்களின் வரிசையில் இன்று நாம் பார்க்கப்போவது கவிஞர் தாமரை தான் வாங்க அவர்களை பற்றி தெரிந்துகொள்ளலாம்..!

Kavignar Thamarai Biography in Tamil:

Kavignar Thamarai

தாமரை கோவையில் பிறந்தார். இவருடைய தந்தை கவிஞராகவும் நாடகாசிரியராகவும் இருந்துவந்தார்.  இவர் படிப்பை எந்திரப் பொறியியல் பட்டதாரி படிப்பை முடித்தார். அங்கேயே படிப்பை முடித்து ஆறு ஆண்டுகள் பணி புரிந்தார். கவிதை மீது ஏற்பட்ட ஆசையின் காரணமாக கவிதைகள் கதைகள் என எழுதிவந்தார். அதிலும் இவர் எழுதிய ஒரு கதவும் கொஞ்சம் கள்ளிப்பாலும் கவிதை என நிறைய கவிதைகள் எழுதியுள்ளார்.

இவரின் இலக்கிய திறமைக்கு திருப்பூர் தமிழ்ச்சங்க விருது, சிற்பி விருது ஆகிய விருதுகளையும் பல்வேறு பரிசுகளையும் பெற்றுள்ளார். இவரின் திறமையை கண்டு திரைத்துறையில் கால் பதித்தார். இவர் திரைப்படங்களில் நிறைய பாடல்களை எழுதியுள்ளார்.

நேற்று மனிதர்கள் சிறுகதையின் ஆசிரியர் பிரபஞ்சன் பற்றி தகவல்கள்..!

இவர் மனித உரிமைப் போராளியும் தமிழ் தேசியவாதியுமான தியாகுவை திருமணம் புரிந்துள்ளார்.

திரைத்துறையில் எழுதிய பாடல்கள் வசீகரா, அழகிய அசுரா, தவமின்றிக் கிடைத்த வரமே, இஞ்சேருங்கோ என புகழ்பெற்ற பாடல்களை திரை துறையில் எழுதியுள்ளார். இவரின் பாடல்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை இன்று வரை பெற்று வருக்கிறது.

இவர் நூற்றுக்கும் மேலான பாடல்களை இயற்றியுள்ளார். இவர் ஆங்கில சொற்களை சேர்த்து பாடல்களை எழுதுவதில்லை என்று உறுதியாக இருந்தவர். இவர் ஹாரிஸ் ஜயராஜ், கௌதம் மேனன் என இவர்களின் வெற்றி கூட்டணி சேர்த்து நிறைய வெற்றி பாடல்களையும் தந்துள்ளது.

இதையும் படியுங்கள்⇒ புத்தகங்களைக் காதலித்த லட்சுமி கிருஷ்ணமூர்த்தி பற்றி உங்களுக்கு தெரியுமா..?

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement