திருமதி முத்துலட்சுமி ராகவன் அவர்கள் பற்றிய தகவல்கள்

muthulakshmi raghavan biography in tamil

முத்துலட்சுமி ராகவன் கதை | Muthulakshmi Raghavan Novels List

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் பிரபல எழுத்தாளரான முத்துலட்சமி ராகவன் அவர்களை பற்றி தெரிந்து கொள்வோம். புத்தகம் படிப்பதில் ஆர்வம் உள்ளவர்கள் இவர்களின் புத்தகத்தை வாங்கி படியுங்கள். இவர்கள் எழுதிய புத்தகங்கள் பெண்களின் வாழ்க்கையை பற்றி எழுதியிருப்பார்கள். மேலும் இவர்கள் பிறப்பு, இறப்பு, எழுதிய நாவல்கள் பற்றிய தகவ்களை இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்வோம்.

இதையும் படியுங்கள் ⇒ தி. ஜானகிராமன் பற்றிய தகவல்கள்

முத்துலட்சுமி ராகவன் வாழ்க்கை வரலாறு : 

முத்துலட்சுமி ராகவன் வாழ்க்கை வரலாறு

முத்துலட்சுமி ராகவன் பிறப்பு:

முத்துலட்சுமி ராகவன் அவர்கள் மதுரையில் பிறந்தார். இவர்கள் கல்லூரி படிப்பை மதுரையிலே படித்தார். இவர் கல்லூரி படிப்பு படித்து கொண்டிருக்கும் போதே திருமணம் நடந்தது. இவரது கணவர் பெயர் ராகவன். இவர்கள் இருவருக்கும் பாலச்சந்தர் என்ற மகன் உள்ளார். பாலச்சந்தர் டாக்டராக பணி புரிகிறார்.

தொழில்:

இவர் திருமணத்திற்கு பிறகு தபால் துறையில் வேலை செய்தார். இவருடைய உடல் ஆரோக்கியத்தில் காச நோய் மூளையில் ஏற்பட்டது. இதனால் நீண்ட நாளாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

நாவல் எழுத ஆரம்பித்தது:

மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் போது தான் கதை எழுத தொடங்குகிறார். அப்போது இவருடைய கணவன் ராகவன் உரம் தயாரிக்கும் தொழிலை செய்தார்.

லட்சுமி பாலாஜி பதிப்பகம் என்னும் நிறுவனத்தை தொடங்கி இவர்கள் எழுதிய நூல்களை வெளியிட்டார். மேலும் அருண் பதிப்பகம் என்ற நிறுவனமும் உள்ளது.

இவர் தனது 24 -ம் வயதில் தொடுவானம் என்ற நூலை எழுதி அசோகன் அவர்களுக்கு அனுப்பி வைத்தார். அந்த நாவலை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் இவர் 16 ஆண்டுகளாக எழுதிய நாவல்களை வெளியிடவில்லை. அவர்களே  வைத்து கொண்டார்.

2007-ம் ஆண்டு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்ததும் நிலாவெளி என்ற நாவலை அருண் பதிப்பகத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த நாவல் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்தது.

முத்துலட்சுமி ராகவன் எழுதிய நாவல்கள்: 

முத்துலட்சுமி ராகவன் அவர்கள் 200 நாவல்களை எழுதியுள்ளார். இவர் எழுதிய நாவல்களில் என்ன வென்று சொல்வதே என்ற நாவல் பிடித்தமான நாவலாம். வாஸந்தி என்ற  நாவலாசிரியரை தான் இவருக்கு பிடிக்குமாம்.

முத்துலட்சுமி ராகவன் இறப்பு:

இவர் 2021-ம் ஆண்டு உலகையே பாதித்த கொரோனா தொற்றால் மே 18, 2021-ல் இவரது உடல் இந்த மண்ணை விட்டு பிரிந்தது.

முத்துலட்சுமி ராகவன் நாவல்கள் பட்டியல்:

 1. தொடுவானம்
 2. நிலாவெளியில்
 3. நிழலோடு நிழலாக
 4. நிலவே நீ சாட்சி
 5. அக்கினி பறவை
 6. காதலின் பொன்வீதியில்
 7. நதியோரம் நடந்தபோது
 8. காத்திருந்தேன் காற்றினிலே
 9. வென்று விடு என் மனதை
 10. உயிரே.. உனைத்தேடி
 11. ஊஞ்சலாடும் உள்ளம்
 12. மௌனத்தின் குயிலோசை
 13. பூக்கோலம் போடவா
 14. உன்னோடு ஒருநாள்
 15. இதயத்தின் சாளரம்
 16. மனதில் ஓர் ஓவியம்
 17. நெஞ்சமடி நெஞ்சம்
 18. ஏதோ ஓர் நதியில்
 19. நிலாக்கால நினைவுகள்
 20. சொன்னது நீதானா
 21. பூவே மயங்காதே
 22. தென்றலைத் தேடி
 23. நீ எந்தன் வெந்நிலவு
 24. நீங்காத நினைவுகள்
 25. இனிதாக ஒரு விடியல்
 26. கல்லூரி காலத்திலே
 27. மலர்ந்தும் மலராமல்
 28. உன்னை விட ஓர் உறவா..
 29. நீ சொன்ன வார்த்தை 3
 30. கடலில் கலந்த நதி
 31. நெஞ்சத்திலே நீ நேற்று வந்தாய்
 32. முகில் மறைத்த நிலவு
 33. தீயாக உனைக் கண்டேன்
 34. எனக்கென்று ஓர் இதயம்
 35. பனித்திரை
 36. காற்றோடு தூது விட்டேன்
 37. சந்தித்தேன்.. சிந்தித்தேன்
 38. யார் அந்த நிலவு
 39. யாரோடு யாரோ.
 40. மாறியது நெஞ்சம்
 41. ஊமையின் ராகம்
 42. நேசம் மட்டும் நெஞ்சினிலே
 43. கனாக் கண்டேன்
 44. அன்றொரு நாள் இதே மழையில்
 45. பூவொன்றைக் கண்டேன்.
 46. கீதையின் ராதை
 47. உறங்காத உள்ளம்
 48. நீயின்றி நானில்லை
 49. வார்த்தை தவறியது ஏனோ?
 50. உன் மனதைத் தந்துவிடு
 51. கனல் வீசும் காதல்
 52. என்னவென்று நான் சொல்ல..? (3 பாக நாவல்)
 53. தன்னந்தனிமையிலே
 54. அந்தி மழை பொழிகிறது
 55. நீதானே எனது நிழல்
 56. காதலாகி கசிந்துருகி
 57. ஒற்றையடிப் பாதையிலே
 58. பூவும் புயலும்
 59. ஆற்றங்கரை அருகினிலே
 60. இமையோரம் உன் நினைவு
 61. வசந்தமென வந்தாய்
 62. மௌனத்திரையின் மறைவினிலே
 63. தூங்காத கண்ணென்று ஒன்று
 64. புலர்கின்ற பொழுதில்
 65. மௌனமான நேரம்
 66. வேரென நீயிருந்தாய்..
 67. வானம் வசப்படும்
 68. அந்தி வானம்
 69. ஆராதனை
 70. மௌனமே காதலாய்
 71. வந்ததே புதிய பறவை
 72. கானல் வரிக் கவிதை
 73. மன்னிப்பாயா..?
 74. மை விழியே மயக்கமென்ன..? (நான்கு பாக நாவல்)
 75. வைகறையே வந்துவிடு
 76. சங்கமித்த நெஞ்சம்
 77. இளவேனிற்காலம்
 78. ஓரவிழிப் பார்வையிலே.
 79. தென்னம்பாளை..
 80. புதிய பூவிது பூத்தது
 81. கன்னிராசி
 82. சொல்லத்தான் நினைக்கிறேன்
 83. உன்னோடு நான்
 84. நதி எங்கே போகிறது
 85. தேடினேன் வந்தது
 86. மாலை நேரத்து மயக்கம்
 87. கண்ணாமூச்சி ரே..ரே..
 88. ஆசையா..? கோபமா..?
 89. பொன் மகள் வந்தாள்.
 90. மின்னலாக வந்தவளே.
 91. ஜனனி.. ஜகம் நீ.
 92. அலைபாயும் மனது.
 93. காலை நேரத்துக் காற்று.
 94. அம்மம்மா கேளடி தோழி.. (ஐந்து பாக நாவல்)
 95. கை தொட்ட கள்வனே
 96. விட்டுச் சிறகடிப்பாய்
 97. நதியோரம்
 98. விடிகின்ற வேளையிலே
 99. பூமிக்கு வந்த நிலவு
 100. எங்கிருந்தோ ஆசைகள் (ஆறு பாக நாவல்)
 101. போர்க்களத்தில் ஓர் பூவிதயம் (இரண்டு பாக நாவல்)
 102. மழைச் சாரலாய் மனம் நனைத்தாய்
 103. புதிதாக ஓர் பூபாளம்
 104. தஞ்சமென வந்தவளே
 105. உயிர்த்தேனே..! உன்னாலே உயிர்த்தேனே..
 106. நிலாச்சோறு
 107. உன்மீது ஞாபகம்
 108. காதலென்பது எதுவரை.
 109. ராதையின் நெஞ்சமே
 110. சொல்லாமலே பூப்பூத்ததே
 111. மனதோடு பேசவா
 112. சித்திரமே..! நில்லடி
 113. இது நீரோடு செல்கின்ற ஓடம். (மூன்று பாக நாவல்)
 114. கனவில் வந்த தேவதை
 115. பொய் சில நேரங்களில் அழகானது
 116. அழகான ராட்சசியே..! (மூன்று பாக நாவல்)
 117. பிரிய சகி..!
 118. கன்னத்தில் முத்தமிட்டாள்
 119. வந்தாள் மகாலட்சுமியே
 120. ஏழு ஸ்வரங்கள் (ஏழு பாக நாவல்)
 121. மன்னவன் வந்தானடி தோழி
 122. மார்கழிப் பனியில்
 123. காற்றுக்கென்ன வேலி
 124. மோகத்தைக் கொன்று விடு
 125. என் மனது ஒன்றுதான்
 126. புதுசா.. புதுசா.. ஒரு காதல் பாட்டு
 127. நிலாக் காயும் நேரத்திலே
 128. மேகங்கள் நகர்கின்றன
 129. தூரத்தில் நான் கண்ட உன் முகம்
 130. கூட்டாஞ்சோறு
 131. ஆனந்த கீதம்
 132. உழவன் மகள்
 133. தென்னங்கீற்றின் பாடலிலே
 134. தட்டுத் தடுமாறி நெஞ்சம்
 135. கொதிக்கும் பனித்துளி
 136. நீ எங்கே..?
 137. நேற்று இந்த நேரம்
 138. கனவோடு சில நாள்
 139. அகல் விளக்கு
 140. எண்ணியிருந்தது ஈடேற.. (எட்டு பாக நாவல்)
 141. அவளுக்கு நிலவென்று பெயர்
 142. விண்ணைத் தாண்டி வந்தாயே
 143. மஞ்சள் வெயில் மாலை நேரம்
 144. சிறகடிக்கும் மனது
 145. பனி விழும் இரவு
 146. கள்வனைக் காதலி
 147. ரூபசித்திர மாமரக் குயிலே
 148. மனம் திருட வந்தாயா..?
 149. மெல்லிசையாய் ஓர் காதல்
 150. அனிச்ச மலர்..!
இதுபோன்று பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —>Novel Writers  in Tamil