எழுத்தாளர் நா.சொக்கன் வாழ்க்கை வரலாறு..!

Advertisement

Tamil Writer N.Sokkan Life History in Tamil

நமது தமிழ் மொழியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளது. அதில் சில புத்தகங்கள் நமது மனதுக்கு பிடித்தாக இருக்கும். அப்படி உங்களின் மனதிற்கு பிடித்த புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று என்றாவது ஆசைப்பட்டுள்ளீர்களா..? அப்படி ஆசைப்படுபவர்களுக்காக தான் இந்த பதிவு. ஆம் நண்பர்களே நமது பதிவின் தினமும் ஒரு தமிழ் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றினை பற்றி அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் தமிழ் எழுத்தாளர் நா.சொக்கனின் வாழ்க்கை வரலாறு பற்றி பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

இதையும் படித்துப்பாருங்கள்=> உடையும் இந்தியா என்னும் நூலை எழுதிய எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பற்றிய சில குறிப்புகள்

Writer N.Sokkan Life History in Tamil:

Writer N.Sokkan Life History in Tamil

நா.சொக்கன் 1977-ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி சேலம், ஆத்தூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் நா. சொக்கநாதன் ஆகும். இவர் தற்போது பெங்களூரில் மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார்.

1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். இவர் நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் மற்றும் புதினங்களை எழுதியுள்ளார்.

மேலும் வாழ்க்கை வரலாறுகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பல நூல்களும் பல்வேறு பத்திரிகைகளில் தொடர்கள், கட்டுரைகளும் எழுதி வருகிறார், குழந்தைகளுக்கான படைப்புகளையும் அதிகம் எழுதி வருகிறார்.

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  1. பச்சை பார்க்கர் பேனா
  2. என் நிலைக்கண்ணாடியில் உன் முகம்
  3. மிட்டாய்க் கதைகள் (கலீல் கிப்ரன் சிறுகதைகள் மொழிபெயர்ப்பு)

வாழ்க்கை வரலாறுகள்:

  1. ஏ. ஆர். ரஹ்மான்: ஜெய் ஹோ!
  2. அம்பானி ஒரு வெற்றிக்கதை
  3. முகேஷ் அம்பானி
  4. அனில் அம்பானி
  5. பில் கேட்ஸ்: சாஃப்ட்வேர் சுல்தான்
  6. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி: ரூபாய் பத்தாயிரம், பத்தாயிரம் கோடி ஆன கதை
  7. அஸிம் ப்ரேம்ஜி: கம்ப்யூட்டர்ஜி
  8. லஷ்மி மிட்டல்: இரும்புக்கை மாயாவி
  9. ரத்தன் டாடா
  10. அம்பானிகள் பிரிந்த கதை
  11. ஏர்டெல் (சுனில் பார்தி) மிட்டல்: பேசு!
  12. சுபாஷ் சந்திரா: ஜீரோவிலிருந்து ஜீ டிவிவரை
  13. ரிச்சர்ட் ப்ரான்ஸன்: ‘டோண்ட் கேர்’ மாஸ்டர்
  14. சச்சின்: ஒரு புயலின் பூர்வ கதை
  15. திராவிட்:இந்திய பெருஞ்சுவர்
  16. ஷேக்ஸ்பியர்:நாடகமல்ல, வாழ்க்கை
  17. நெப்போலியன்: போர்க்களப் புயல்
  18. சல்மான் ரஷ்டி: ஃபத்வா முதல் பத்மாவரை

இதையும் படியுங்கள்=> முதலில் இரவு வரும் என்ற சிறுகதையை எழுதிய எழுத்தாளர் ஆதவன் பற்றிய சில குறிப்புகள்

அரசியல்:

  1. அந்தமான் சிறை அல்லது இருட்டு உலகம்
  2. அயோத்தி: நேற்றுவரை
  3. மரியாதையாக வீட்டுக்குப் போங்கள் மகாராஜாவே (நேபாளத்தின் அரசியல் வரலாறு)
  4. கேஜிபி: அடி அல்லது அழி
  5. CIA: அடாவடிக் கோட்டை
  6. மொஸாட்: இஸ்ரேலிய உளவுத்துறை
  7. FBI: அமெரிக்க உளவுத்துறை
  8. ஹமாஸ்: பயங்கரத்தின் முகவரி

குழந்தைகளுக்கான படைப்புகள்:

  1. ஹாய் கம்ப்யூட்டர்
  2. விண்வெளிப் பயணம்
  3. டெலிவிஷன் எப்படி இயங்குகிறது?
  4. கேமரா எப்படி இயங்குகிறது?
  5. மொபைல் ஃபோன் எப்படி இயங்குகிறது?
  6. ரேடியோ எப்படி இயங்குகிறது?
  7. மேஜிக் தோணி (தேர்வு பயம் விரட்ட)
  8. Learn To Make Decisions (Introduction To Decision Making)
  9. அப்துல் கலாம்
  10. இன்ஃபோசிஸ் நாராயணமூர்த்தி
  11. பில் கேட்ஸ்
  12. அறிஞர் அண்ணா
  13. நெப்போலியன்
  14. சார்லி சாப்ளின்
  15. துப்பறியும் சேவகன்
  16. நம்(ண்)பர்கள் (கணிதப் புதிர்கள்)
  17. ஆடலாம், பாடலாம் (சிறுவர் பாடல்கள்)

விருதுகள்:

  1. திருப்பூர் கலை இலக்கியப் பெருமன்ற விருது

இதையும் படியுங்கள்=>தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள் என்ற சிறுகதையை எழுதிய நாஞ்சில் நாடன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்

இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil
Advertisement