Novel Writer K.Poornachandran Life History in Tamil
நமது தமிழில் மொழியில் நூற்றுக்கணக்கான புத்தகங்கள் உள்ளது. அதில் சில புத்தகங்கள் நமது மனதுக்கு பிடித்தாக இருக்கும். அப்படி உங்களின் மனதிற்கு பிடித்த புத்தகங்களை எழுதிய எழுத்தாளர்கள் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று என்றாவது ஆசைப்பட்டுள்ளீர்களா..? அப்படி ஆசைப்படுபவர்களுக்காக தான் இந்த பதிவு.
ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் ஒரு தமிழ் எழுத்தாளரின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் திறனாய்வு செம்மல் என்ற விருது பெற்ற தமிழ் எழுத்தாளர் க. பூரணச்சந்திரனின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்ள இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து அவரின் வாழக்கை வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => சாயாவனம் என்னும் புதினத்தை எழுதிய எழுத்தாளர் பற்றிய குறிப்பு
Writer K.Poornachandran Life History in Tamil:
க.பூரணச்சந்திரன் மே 14, 1949 ஆம் ஆண்டு வேலூர் மாவட்டம் ஆர்க்காட்டில் பிறந்தார். இவர் ஒரு சிறந்த தமிழ் எழுத்தாளர். மேலும் இவர் இலக்கிய விமர்சனம், கோட்பாட்டு ஆய்வுகள் போன்றவற்றை மிகவும் ஆர்வம் கொண்டவர்.
இவர் திருச்சிராப்பள்ளி, பிஷப் ஹீபர் கல்லூரி தமிழ்த்துறையில் ஆசிரியராகவும், துறைத்தலைவராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இலக்கிய கொள்கையில் மிகுந்த ஆர்வம் காட்டி நூல்கள் பல எழுதியுள்ளார்.
இவர் தான் திருச்சியில் 1989 ஆம் ஆண்டு முதன் முதலில் பாதல் சர்க்காரின் பெயரால் நாடகப்பட்டறை நடத்தினார். 2015 ஆம் ஆண்டு இவர் பெயரில் திறனாய்வு அறக்கட்டளை ஒன்று நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் இவர் மாணவர்களுக்கு திறனாய்வு மற்றும் பல்வேறு துறைகளில் பயிற்சி அளித்து வருகின்றார்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் => எழுத்தாளர் நா.சொக்கன் வாழ்க்கை வரலாறு
படைப்புகள்:
- அமைப்புமைய வாதமும், பின்னமைப்புவாதமும்
- பத்திரிகை, தலையங்கம், கருத்துரை
- தொடர்பியல் கொள்கைகள்
- தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு
- இந்திய மொழிகள் ஓர் அறிமுகம்
- நவீன மொழிபெயர்ப்புக் கோட்பாடுகள்
- இலக்கியப் பயணத்தில் சில எதிர்ப்பாடுகள்
- கவிதையியல்
- கதையியல்
- கவிதைமொழி தகர்ப்பும் அமைப்பும்
- பொருள்கோள் நோக்கில் தொல்காப்பியம்
- தமிழ் இலக்கியத்தில் மேற்கத்தியக் கொள்கைகளின் தாக்கம்
மொழி பெயர்த்த நூல்கள்:
- குழந்தையின் வாழ்க்கையில் முதல் 365 நாட்கள்
- மனித உரிமைகள் பற்றிய ஐ.நா. அறிக்கை
- சிறார் உரிமை பற்றிய ஐ.நா. அறிக்கை
- விஷன்ஸ் கையேடு-மனித உரிமைகளும் குடியுரிமையும்
- விஷன்ஸ் கையேடு-உள்ளூர் மற்றும் உலகளாவிய பிரச்சினைகள்
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள் => உடையும் இந்தியா என்னும் நூலை எழுதிய எழுத்தாளர் அரவிந்தன் நீலகண்டன் பற்றிய சில குறிப்புகள்
விருதுகள்:
2016ஆம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
2018 ஆம் ஆண்டு திறனாய்வுச் செம்மல் விருது
ஆனந்தவிகடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2011)
கு.சின்னப்ப பாரதி அறக்கட்டளை சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2015)
ஆனந்தவிகடன் சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (2016)
சிறந்த பேராசிரியர்-சாதனையாளர் விருது (2017, பிஷப் ஹீபர் கல்லூரி, திருச்சி)
இதையும் தெரிந்து கொள்ளுங்கள் => தெய்வங்கள் ஆடுகள் ஓநாய்கள் என்ற சிறுகதையை எழுதிய நாஞ்சில் நாடன் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |