நட்பு பற்றிய கவிதைகள் | Natpu Kavithai in Tamil
எத்தனை உறவுகள் இருந்தாலும் நட்பெனும் உறவு தனித்துவமானது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் நண்பர்களை இணைப்பது ஒன்றும் தவறே இல்லை. நாம் கஷ்டத்தில் இருக்கும் அனைத்து சமயத்திலும் முதலில் வந்து உதவி செய்வது நட்பு தான். இன்றளவு பலரது வாழ்க்கையில் மாற்றங்களை கொண்டுவருவதும், ஏமாற்றங்களை துரத்தி அவர்களுக்கு ஆறுதல் தருவதாகவும் இருப்பது உண்மையான நல்ல நண்பர்கள் மட்டுமே. நண்பர்கள் என்பவர்கள் ஜாதி, மத, இன மொழி போன்ற எல்லைகளைக் கடந்து நம்முடைய எண்ணங்களில் வலிமையால் நம்மோடு பணியாற்றுபவர்கள் ஆவர்.. நட்பை பற்றி சொல்லனும்னா நிறைய விஷயங்கள் நாம் இது போன்று கொல்லிக்கொண்டே போகக்கூடிய உண்மையான உறவு அது. சரி இந்த பதிவில் நட்பு பற்றிய கவிதை வரிகளை IMAGES மூலம் பதிவு செய்துள்ளோம், அவற்றில் உங்களுக்கு பிடித்த IMAGES-ஐ டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள்..
நட்பு பற்றிய கவிதைகள் – Friendship Kavithai in Tamil:
நட்பு மேகம் அல்ல கலைவதற்கு.
இது அன்னையின் அரவணைப்பு.
ஒரு வரி நட்பு கவிதை – Friendship Quotes in Tamil:-
“காதலுக்கு” எல்லைகள் உண்டு..!
ஆனால்
“நட்பிற்கு” எல்லைகள் கிடையாது..!
நட்பு கவிதை வரிகள் தமிழ் – Natpu Kavithai in Tamil:-
தட்டிக்கொடுக்க நண்பன் இருந்தால்
வேதனை கூட சாதனை ஆகும்.
நட்பு கவிதை:-
புன்னகை ஒன்றே போதும்
நண்பர்களை சேகரிக்க
புதைந்து போகும் வரை
தொடர்ந்து வரும் நல்ல நட்பு.
Friendship Quotes in Tamil:-
கண் விழித்ததும்
கலைந்து
போக கூடியது
நட்பல்ல…
கண் மூடும் வரை
தொடர்ந்து
வருவதுதான்
உண்மையான நட்பு..!
நட்பு கவிதை வரிகள் தமிழ்:
நட்பு மற்ற உறவுகளை
விட மிகவும்
வித்தியாசமானது
இறக்கும் வரை பிரிக்க
முடியாதது தான் நட்பு.
Natpu Quotes in Tamil:
நண்பர்கள் என்ற
செல்வம் உன்னை
தேடி வர புன்னகை
என்ற ஒரு கருவி மட்டும்
உன்னிடம் இருந்தால்
போதும்.
Natpu Kavithai Tamil:
சொந்தங்கள் என்பது
பனி துளி போன்றது
சிறு பொழுதில் மறைந்து
விடும். நட்பு என்பது
பரந்த வானம் போன்றது
உன்னை சுற்றி எப்போதும்
நிலைத்து நிக்கும்.
நண்பர்கள் தின வாழ்த்துக்கள் 2021 | Friendship Day Quotes in Tamil |
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |