வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

கல்வி பற்றி பாரதியார் கவிதைகள் | Bharathiyar Kalvi Kavithai in Tamil

Updated On: November 21, 2025 5:27 PM
Follow Us:
---Advertisement---
Advertisement

பாரதியார் கவிதைகள் கல்வி | Bharathiyar Kalvi Kavithaigal in Tamil

மகாகவி பாரதியார் ஒரு தமிழ் கவிஞர் என்று அனைவராலும் போற்றப்பட்டவர். இவர் கவிஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த எழுத்தாளர். தம்முடைய கவிதையால் மக்களின் மூட நம்பிக்கையை வேரோடு அழித்த ஒரு உன்னத கவிஞர். இவருடைய கவிதைகள் யாவும் எளிய நடையுடும், உணர்ச்சி மிக்கதாகவும் இருக்கும். பெண் அடிமை, பெண் கல்வி அதிலும் குறிப்பாக கல்விக்காக பல கவிதைகளை இயற்றினார். அந்த வகையில் நாம் இந்த பதிவில் கல்வி பற்றிய பாரதியின் கவிதையை image வடிவத்தில் பார்க்கலாம் வாங்க.

Bharathiyar Quotes About Education Language:

கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே!
செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும்
கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்

bharathiyar quotes about tamil language

பாரதியார் கல்வி கவிதை :

கல்வியுள்ளவரே! கண்ணுள்ளார் என்னலாம்
கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம்
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை!
கற்பதுவேஉன் முதற் கடமை..!

bharathiyar quotes in tamil

பாரதியார் கல்வி கவிதைகள்:

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கி,இவ் வையம் தழைக்குமாம்;
பூணு நல்லறத் தோடிங்குப் பெண்ணுருப்
போந்து நிற்பது தாய்சிவ சக்தியாம்;
நாணும் அச்சமும் நாட்கட்கு வேண்டுமாம்;
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்கடிப் பெண்ணின் குணங்களாம்;
பெண்மைத் தெய்வத்தின் பேச்சுக்கள் கேட்டிரோ!

Bharathiyar Kalvi in Tamil:

இளமையிற் கல்லென இசைக்கும் ஒளவையார்
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய்
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?
இப்பொழுதே உண் இனித்திடும் தேன்

bharathiyar kavithaigal in tamil

கல்வி பற்றி பாரதியார் கவிதைகள்:

திறமை கொண்ட தீமையற்ற
தொழில் புரிந்து யாவரும்
தேர்ந்த கல்வி ஞானம் எய்தி
வாழ்வம் இந்த நாட்டிலே

வாழி கல்வி செல்வம் எய்தி
மனம் மகிழ்ந்து கூடியே
மனிதர் யாரும் ஒருநிகர்
சமானமாக வாழ்வமே

ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை
என்றெண்ணி இருந்தவர் மாய்ந்துவிட்டார்;
வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டிவைப்போம் என்ற
விந்தை மனிதர் தலை கவிழ்ந்தார்.

Bharathiyar Kalvi Kavithai in Tamil:

எவனையும் வெற்று காகிதம் என ஒரு போதும் எண்ணாதே..! ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான் நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்..!

bharathiyar kavithaigal in tamil images

பாரதியார் கல்வி கவிதை:

கல்வி எனும் கற்கண்டு உன் வாழ்வை கற்பக விருட்சம் போல வளர செய்யும்.

bharathiyar kavithaigal in tamil for students

Bharathiyar Quotes About Education in Tamil:

வீடுதோறும் கலையின் விளக்கம்,
வீதிதோறும் இரண்டொரு பள்ளி;
நாடுமுற்றிலும் உள்ளவூர்கள்
நகர்களெங்கும் பலபலபள்ளி;
தேடு கல்வியிலாத தொரூரைத்
தீயினுக்கு இரையாக மடுத்தல்

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள்ள தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்

Bharathiyar Quotes About Women in Tamil:

விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை

வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பாராம்

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,

நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்

திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்

செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;

பாரதியார் கட்டுரை
மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> Quotes in Tamil
Advertisement

Dharani

ஊடகத்துறைக்கு இளையவள். Pothunalam.com இல் ஜூனியர் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு வங்கி சார்ந்த பயனுள்ள தகவல்கள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த செய்திகளை உங்களுக்காக எழுதுகிறேன். நன்றி!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now