தமிழ் வாழ்க்கை தத்துவங்கள் | Life Advice Quotes in Tamil Words..!

Advertisement

தமிழ் வாழ்க்கை தத்துவங்கள் | Life Advice Quotes in Tamil Words..!

மனித பிறவியின் வாழ்க்கை என்பது 1 முறையாக இருந்தாலும் கூட அதனை நமக்கு பிடித்தமாறு வாழ முடியுமா என்று கேட்டால்..? இதற்கான பதில் முடியாது என்று பிறந்த குழந்தையினை தவிர அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் இன்பம் மட்டும் இல்லாமல் துன்பம், சோகம், அழுகை மற்றும் ஏமாற்றம், நம்பிக்கை துரோகம் என இவற்றையும் கலந்த ஒரு புத்தகமாக தான் நாம் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அமைகிறது. அந்த வகையில் இவ்வாறு ஒவ்வொருவரது வாழ்க்கையிலும் ஏற்படும் துன்பங்களையும், சோகங்களையும் பாடல்கள் கேட்பது, கவிதைகள் எழுதுவது என இவற்றின் மூலமாக மனதை ஆறுதல் படுத்தி கொள்கிறார்கள்.

அப்படி பார்த்தால் நாம் எந்த புத்தகங்களை வேண்டுமானாலும் படித்து தெரிந்துக்கொள்ளலாம் ஆனால் வாழ்க்கை என்னும் புத்தகத்தை மட்டும் படிக்கவே முடியாது என்று கூறுவார்கள். ஏனென்றால் வாழ்க்கை என்பது நமக்கான அனுபவத்தை தேடிக்கொடுக்கும் ஒன்றாக தான் இருக்கிறது. ஆகவே இன்று நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்ற மாதிரியான வாழ்க்கை தத்துவங்களை கவிதைகள் மூலம் படங்களாக பார்க்கலாம் வாங்க..!

வாழ்க்கை தத்துவங்கள்:

எதை வேண்டுமானாலும் 
விட்டுக் கொடு- ஆனால் அது
யாருக்காக என்பதில் மட்டும் 
கவனமாக இரு..!

valkai thathuvam

Valkai Thathuvam:

சிலரை மறந்து விடுங்கள் 
சிலரை மன்னித்து விடுங்கள்
சிலரை கடந்து விடுங்கள் 
சிலரை வெறுத்து விடுங்கள் 
எவரையும் தூக்கி
சுமக்காதீர்கள் உங்கள்
வாழ்க்கை சுமையாகிவிடும்..! 

valkai thathuvam tamil

வாழ்க்கை தத்துவங்கள் கவிதை:

நம் வாழ்வில் எல்லாம்
மாறிவிடும் ஒருநாள்- ஆனால் 
ஒரே நாளில் மாறிவிடாது..!

life thathuvam in tamil

Life Thathuvam in Tamil Images:

நல்லவராக நடிக்க
எல்லாராலும் முடியும் 
நல்லவராக வாழ ஒரு
சிலரால் மட்டும் தான் முடியும்..!

 life thathuvam in tamil images

தமிழ் வாழ்க்கை தத்துவங்கள்:

எல்லாரது பாதையும் 
உன்னுடைய பாதை அல்ல
உனக்கான பாதையை நீயே 
தேர்ந்தெடு உன் வாழ்க்கை 
மற்றவர்களை போல் இல்லாமல்
என்றும் பிரகாசிக்கும்..!

life valkai thathuvam in tamil images

 

நற்சிந்தனை துளிகள்

இது போன்று கவிதைகள் பற்றிய பதிவுகளை பார்க்க இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–>  QUOTES IN TAMIL
Advertisement