வாசனை ஆள இழுக்குற அளவிற்கு சுவையான செட்டிநாடு மட்டன் வறுவல் செய்யலாம் வாங்க..!

Advertisement

Chettinad Mutton Varuval Recipe 

அனைவருடைய வீட்டிலும் மட்டன் சமைத்து சாப்பிட்டு இருப்பீர்கள். மட்டனை பொறுத்தவரை அதில் வெறும் குழம்பு மட்டும் தான் வைக்க முடியும் என்பது கிடையாது. ஏனென்றால் மட்டனில் நிறைய வகையான ரெஸிபிகளை நாம் செய்யலாம். அதனையுடைய சுவையும் ஒவ்வொரு ரெசிப்பிற்கு ஏற்றவாறு மாறிக்கொண்டே இருக்கும். அந்த வகையில் நாம் அனைவரும் மட்டன் வறுவல் சாப்பிட்டு இருப்போம். ஆனால் செட்டிநாடு சுவையில் மட்டன் வறுவல் அதிகமாக சாப்பிட்டு இருக்க மாட்டோம். சரி வீட்டிலேயே எப்படியாவது செய்யாலாம் என்று பார்த்தால் அதனுடைய சுவை என்பது அவ்வளவாக இருக்காது. அதனால் இன்று வீட்டிலேயே சுவையான செட்டிநாடு மட்டன் வறுவல் செய்வது எப்படி என்று தெரிந்துக்கொள்ள போகிறோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

செட்டிநாடு மட்டன் வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

  • மட்டன்- 1/2 கிலோ 
  • பட்டை- சிறிதளவு 
  • கிராம்பு- சிறிதளவு 
  • சின்ன வெங்காயம்- 20
  • பெரிய வெங்காயம்- 1
  • தக்காளி- 1
  • அரைத்த தேங்காய்- 3 ஸ்பூன் 
  • பூண்டு- 10 பல் 
  • இஞ்சி பூண்டு பேஸ்ட்- 2 ஸ்பூன் 
  • கறிவேப்பிலை- சிறிதளவு 
  • கொத்தமல்லி- சிறிதளவு 
  • மிளகாய் தூள்- 2 ஸ்பூன் 
  • மல்லித்தூள்- 2 1/2 ஸ்பூன்
  • மஞ்சள் தூள்- 1/4 ஸ்பூன் 
  • உப்பு- தேவையான அளவு 
  • எண்ணெய்- தேவையான அளவு 

மசாலா அரைக்க தேவையான பொருட்கள்:

  • சோம்பு- 1 ஸ்பூன் 
  • காய்ந்த மிளகாய்- 5
  • மல்லி- 1 ஸ்பூன் 

மீன் குழம்பு வைத்து சாப்பிட்டுருப்பீர்கள்..ஆனால் மீன் குருமா சாப்பிட்ருக்கீர்களா..

செட்டிநாடு மட்டன் வறுவல் செய்வது எப்படி..?

முதலில் எடுத்துவைத்துள்ள தக்காளி, வெங்காயம் ஆகியவற்றை சுத்தமாக தண்ணீரில் அலசி நறுக்கி வைத்து கொள்ள வேண்டும். அதேபோல் மட்டனையும் சுத்தமாக அலசி கொள்ள வேண்டும்.

செட்டிநாடு மட்டன் வறுவல் செய்வது எப்படி

இப்போது அடுப்பை பற்ற வைத்து அடுப்பில் ஒரு கடாயில் 1/2 கிலோ மட்டன், நறுக்கிய 1 வெங்காயம், தக்காளி, 1 ஸ்பூன் மிளகாய் தூள், கறிவேப்பிலை, 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து அதனுடன் தண்ணீரும் சேர்த்து நன்றாக மட்டனை வேக வைத்து விடுங்கள்.

அடுத்து மற்றொரு கடாயில் வறுத்து அரைப்பதற்கு எடுத்துவைத்துள்ள பொருட்களை நன்றாக பொன் நிறமாக வறுத்து அதனை சிறிது நேரம் ஆறவைத்து மிக்சி ஜாரில் சேர்த்து மசாலா பதத்திற்கு அரைத்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு அடுப்பில் ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடாயில் பட்டை, சோம்பு, பூண்டு, சின்ன வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து ஒரு 5 நிமிடம் வதக்கி கொள்ளுங்கள்.

5 நிமிடம் கழித்த பிறகு கடாயில் உள்ள பொருளுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட், 1 ஸ்பூன் மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லி தூள் மற்றும் தேங்காய் இவற்றை எல்லாம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடுங்கள்.

கடைசியாக 2 நிமிடம் கழித்த வேக வைத்து எடுத்துவைத்துள்ள மட்டனை இதனுடன் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து கொள்ளுங்கள் பின்பு இதனுடன்  அரைத்த மசாலா சேர்த்து மீண்டும் ஒரு 20 நிமிடம் வேக விடுங்கள். அவ்வளவு தான் சுவையான செட்டிநாடு மட்டன் வறுவல் தயார்.

இந்த மாதிரி மட்டன் சுக்கா செய்து சாப்பிட்டு பாருங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> samayal kurippugal in tamil
Advertisement