Diabetes Golden Recipe in Tamil
இக்காலத்தில் உடலில் என்னவிதமான நோய் வருகிறது என்பதே தெரிவதில்லை. அந்த அளவிற்க்கு நோய்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, பெரும்பாலானவர்கள் சர்க்கரை நோயினால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், அவர்கள் பல்வேறு உணவுகளை தவிர்த்துவிட்டு மருந்துகளை உட்கொண்டு வருகிறார்கள்.
சர்க்கரை நோயை குணப்படுத்த ஒரு அருமையான இயற்கை மருந்து உள்ளது. அதனை பற்றி இப்பதிவில் பின்வருமாறு பார்க்கலாம். அதாவது, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்கக்கூடிய ரெசிபி பற்றி இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉https://bit.ly/48Smee9 |
எப்பேர்ப்பட்ட சர்க்கரை நோயையும் எளிதில் குணப்படுத்தும் இந்த ரெசிபி..!
Ingredients
- பெரிய நெல்லிக்காய் - 1
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- வெந்நீர் - 300 மிலி
Instructions
How To Make Diabetes Golden Recipe in Tamil:
- முதலில், நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளுங்கள்.
- அடுத்து, மிக்ஸி ஜாரினை எடுத்து, அதில் நறுக்கி வைத்துள்ள நெல்லிக்காய் மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
- இப்போது, இதனுடன் 300 மிலி அளவிற்கு சூடான தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள்.
- அவ்வளவு தாங்க. சர்க்கரை நோய்க்கு எளிமையான மருந்து ரெடி.!
பயன்படுத்தும் முறை:
இந்த கோல்டன் ரெசிபியை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தினமும் இவ்வாறு குடித்து வந்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும்.
கோல்டன் ரெசிபி நன்மைகள்:
- சர்க்கரை நோயினால் உண்டாகும் உடல் அசதி, பலவீனம் உள்ளிட்ட பல பிரச்சனைகளை நீக்குகிறது.
- மேலும், கண் பிரச்சனைகள், சிறுநீரக பிரச்சனைகள், நரம்புகளில் உள்ள பிரச்சனைகள் போன்றவற்றை குறைக்கிறது.
- மன அழுத்தத்தை குறைக்கிறது.
- புற்றுநோய் மற்றும் ஒவ்வாமைகளைத் தடுக்க உதவுகிறது.
- பாதங்களில் வலி, எரிச்சல் போன்றவற்றை குணப்படுத்துகிறது.
- எல்லாவற்றிக்கும் மேலாக சர்க்கரை அளவை குறைத்து கட்டுக்குள் வைக்கிறது.
சர்க்கரை நோய் பிரச்சனை உள்ளவர்கள் இந்த காய்கறிகளை தவறாமல் சாப்பிடுங்கள்..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |