Andhra Style Brinjal Recipes in Tamil
வணக்கம் நண்பர்களே..! அனைவருமே வீட்டில் தக்காளி ரசம், மிளகு ரசம், வெங்காய ரசம் போன்ற பல வகையான ரசம் வைத்து இருப்பீர்கள். ஆனால் கத்தரிக்காய் ரசம் வைத்து இருக்கிறீர்களா.? அப்படி நீங்கள் வைக்க வில்லை என்றால் இப்பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் வைப்பது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
How To Make Andhra Style Brinjal Rasam in Tamil:
தேவையான பொருட்கள்:
- கத்தரிக்காய்– 1/4 கிலோ
- எண்ணெய்- 2 ஸ்பூன்
- கடுகு- 1 ஸ்பூன்
- பட்ட மிளகாய்- 2
- சீரகம்- 1 ஸ்பூன்
- பெருங்காய தூள்- 1/2 ஸ்பூன்
- கறிவேப்பிலை- தேவையான அளவு
- புளி கரைசல்- 1/2 கப்
- வெங்காயம்- 1
- பச்சை மிளகாய்- 2
- வெல்லம்- 2 ஸ்பூன்
- கொத்தமல்லி இலை- சிறிதளவு
கத்தரிக்காய் ரசம் செய்யும் முறை:
ஸ்டேப் -1
முதலில் கத்தரிக்காயின் மேற்பகுதியில் லேசாக எண்ணெய் தடவி கொள்ளுங்கள். அடுத்து, அடுப்பை ஆன் செய்து குறைவான தீயில் வைத்து கத்தரிக்காவை சுட்டு எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
பிறகு, சுட்ட கத்தரிக்காவின் மேல் சிறிதளவு தண்ணீர் தெளித்து அதன் தோலினையும் காம்பினையும் நீக்கி விட்டு ஒரு கிண்ணத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
ஆந்திரா ஸ்டைல் கிரீன் சில்லி சிக்கன்
ஸ்டேப் -3
இப்போது, ஒரு கரண்டியினை பயன்படுத்தி கத்தரிக்காவை மசித்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
நன்றாக மசித்த பிறகு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -5
பிறகு, இதனுடன் நச்சு எடுத்த வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -6
இந்நிலையில், கரைத்து வைத்த புளி கரைசலை சேர்த்து அதனுடன் 1 கப் அளவிற்கு தண்ணீரும் சேர்த்து கையை பயன்படுத்தி நன்றாக கரைத்து விடுங்கள்.
ஐயர் வீட்டு பருப்பு ரசம் இப்படி வச்சா தான் சுவையும், வாசனையும் தூக்கலா இருக்கும்….
ஸ்டேப் -7
இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். எண்ணெய் சூடானதும், அதில் கடுகு மற்றும் சீரகம் சேர்த்து பொரிய விடுங்கள். பிறகு இரண்டாக நறுக்கிய பட்ட மிளகாய், பெருங்காய தூள் மற்றும் 2 கொத்து கறிவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ளுங்கள்.
ஸ்டேப் -8
இப்போது வதக்கிய பொருட்களை எடுத்து தயார் செய்து வைத்துள்ள கத்தரிக்காய் ரசத்தில் சேர்த்தால் சுவையான ஆந்திரா ஸ்டைல் கத்தரிக்காய் ரசம் தயார்.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |