வெந்தய குழம்பு செய்வது எப்படி.?
சைவ பிரியர்கள் தினமும் சாம்பார், கார குழம்பு, குர்மா போன்றவற்றை செய்து தான் சாப்பிடுவார்கள். அதிலும் காரமாக குழம்பு இருந்தால் விரும்பி சாப்பிடுவார்கள். தினமும் ஒரே குழம்பு சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். அதிலும் வெந்தயத்தை வைத்து இட்லி மாவு அரைப்போம். வயிற்று வலி ஏற்பட்டால் வெந்தயம் சாப்பிடுவோம். வேறு எந்த உணவும் செய்து சாப்பிட்ருக்க மாட்டோம், அதனால் தான் இந்த பதிவில் வெந்தய குழம்பு செய்வது எப்படி என்று படித்து தெரிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
வெந்தய குழம்பு செய்ய தேவையான பொருட்கள்:
- வெந்தயம்- 3 தேக்கரண்டி
- சீரகம்- 1 தேக்கரண்டி
- மிளகு- 1/4 தேக்கரண்டி
- சின்ன வெங்காயம்-25
- தக்காளி-2
- பச்சை மிளகாய்-2 தேக்கரண்டி
- மிளகாய் தூள்- 2 1/2 தேக்கரண்டி
- மஞ்சள் தூள்- 1/4 தேக்கரண்டி
- நல்லெண்ணெய்-6 தேக்கரண்டி
- உளுத்தப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
- கருவேப்பிலை-2 கைப்பிடி
- வெல்லம்- சிறிய துண்டு
வெந்தய குழம்பு செய்முறை:
முதல் கடாய் வைத்து 2 தேக்கரண்டி வெந்தயம், 1 தேக்கரண்டி செர்க்கம் சேர்த்து வறுத்து கொள்ளவும். சிவந்த நிறம் வந்தததும் மிக்சியில் சேர்த்து பவுடராக அரைத்து கொள்ளவும்.
அடுத்து குழம்பு வைப்பதற்கு பாத்திரம் வைத்து 4 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி, 1 தேக்கரண்டி வெந்தயம், 1 தேக்கரண்டி உளுத்தப்பருப்பு, சின்ன வெங்காயம் 25 சேர்த்து வதக்கவும், வெங்காயம் சிவந்த நிறம் வந்ததும், 15 பூண்டு பல் சேர்த்து வதக்கவும், நறுக்கிய பச்சை மிளகாய், நறுக்கிய தக்காளி 2 சேர்த்து வதக்கவும், தக்காளி சுருங்கிய பதம் வந்த பிறகு கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
எப்போதும் போல் சட்னி செய்யாமல் கர்நாடகா ஸ்டைல் சட்னி செய்து கொடுங்கள் |
பின் அதில் 1/4 தேக்கரண்டி மஞ்சள் தூள், 2 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள், சிறிதளவு புளி தண்ணீர், தேவையான அளவு உப்பு, சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
கொதிக்கிற இடைவெளியில் சிறிதளவு திருகிய தேங்காய், 1 பல் பூண்டு, மிளகு 1/4 தேக்கரண்டி சேர்த்து அரைக்கவும். அரைத்த தேங்காவை வடிகட்டி பாலை மட்டும் எடுத்து கொள்ளவும்.
கொதிக்கின்ற குழம்பில் தேங்காய் பாலை ஊற்றி கொதிக்க விடவும். அதில் அரைத்து வைத்த வெந்தய பொடியிலிருந்து 1 தேக்கரண்டி, சிறிய துண்டு வெல்லம் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க விடவும். இறக்கும் போது 2 தேக்கரண்டி நல்லெண்ணெய், ஒரு கொத்து கருவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்ளோ தாங்க சுவையான வெந்தய குழம்பு ரெடி.!
ஐயர் வீட்டில் செய்யும் அருமையான பூண்டு சட்னி இரண்டு இட்லி அதிகமாக உள்ள போகும்
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | Samayal Kurippugal |