RBI Grade B Salary in Tamil
பொதுநலம் வாசகர்களுக்கு வணக்கம்..! பொதுவாக இவ்வுலகில் மனிதனாக பிறந்த அனைவருக்குமே பணம் எவ்வளவு முக்கியம் என்று தெரியும். அதனால் தான் நம் வாழ்க்கை பயணம் பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் நாம் கண்டிப்பாக ஒரு வேலைக்கு சென்று தான் ஆகவேண்டும். அதில சிலர் சொந்தமாக தொழில் செய்வார்கள். இன்னும் பலர் தொழிலாளியாக தான் இருக்கிறார்கள். சரி நாம் படிக்கும் காலத்தில் படித்து முடித்த பிறகு நாம் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருப்பார்கள்.
ஆனால் காலம் கடந்து பார்த்தால் தான் தெரியும் ஏதோ ஒரு வேலை கிடைத்தால் போதும் என்று. அதுபோல நம் அனைவருக்கும் எல்லா வேலைகளுக்கும் என்ன சம்பளம் என்று தெரியாது. அதாவது, ஒவ்வொரு துறைகளிலும் பணிபுரிபவர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது என்று தெரியாது. அதனால் தான் நம் பதிவின் வாயிலாக, தினமும் ஒரு வேலையின் சம்பளத்தை பற்றி பதிவிட்டு வருகின்றோம். அந்த வகையில் இன்று RBI Grade B – ஆபீஸருக்கு சம்பளம் – RBI Grade B Salary எவ்வளவு என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..!
TN TRB இரண்டாம் நிலை ஆசிரியர்களின் சம்பளம் 2024
RBI Grade B Salary எவ்வளவு..?
RBI என்றால் என்ன என்பது நம் அனைவருக்குமே தெரியும். RBI – Reserve Bank Of India. அதாவது இந்திய ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் ஏப்ரல் 1, 1935 இல் செயல்படத் தொடங்கிய இந்தியாவின் மத்திய வங்கியாகும்.
இந்த வங்கியானது மற்ற வங்கிகள் மற்றும் நிதி நிறுவங்களுடன் இணைந்து ஸ்பான்ஸர் செய்யும் வங்கியாகும். சரி இந்த RBI வங்கியில் பணிபுரியும் Grade B ஆபிஸருக்கு மாதம் சம்பளம் எவ்வளவு என்று உங்களுக்கு தெரியுமா..? அதை பற்றி இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பள்ளி சத்துணவு பணியாளர் சம்பளம் எவ்வளவு..
RBI Grade B Salary:
ரிசர்வ் வங்கி அதன் அலுவலக ஊழியர்களுக்கு பயனுள்ள சம்பளப் பேக்கேஜை வழங்கி வருகிறது. எனவே பெரும்பாலான வாய்ப்புகள் ரிசர்வ் வங்கி Grade B வேலையில் சேரவும் தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் விரும்புகின்றன.
சமீபத்திய அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, மொத்த RBI Grade B Salary, Allowances, Bonuses & Concessions உட்பட தோராயமாக ரூ.1,08,404 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. RBI Grade B அதிகாரியின் அடிப்படை சம்பளம் ரூ. 35,150 -ல் இருந்து ரூ. 55,200 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
அதாவது Grade B அடிப்படை Salary ரூ. 55,200 ஆக இருக்கிறது. இது ஆரம்ப கால ஊதியமாகும். மேலும் நிறுவனத்தில் அவர்களின் அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் அதிகாரியின் சம்பளம் அதிகரித்துக்கொண்டே செல்லும்.
RBI Grade B Officer Salary Structure:
Structure of RBI Grade B Salary |
|
Details | Salary Amount |
Basic Salary Pay | Rs.55,200 |
Dearness Allowances | Rs.23,144 |
Allowance for Meal | Rs.160 |
Allowance for Housing | Rs.5273 |
Direct Recruit – Special Allowances | Rs.1800 |
CVPS Incentives | Rs.827 |
Regional Compensatory Allowances | Rs.3664 |
Allowances of Special Prerequisite | Rs.1465 |
Grade Allowances | Rs.6,800 |
Total Gross Pay | Rs.1,08,404 |
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |