Google Ceo Salary | Salary of Google CEO Per Month
நம்முடைய அன்றாட பயன்பாட்டிற்காக உருவாக்கப்படும் நவீன தொழில்நுட்பங்கள் நம் வாழ்க்கையில் இன்றியமையாததாக உள்ளது. அப்படி மக்களின் தேவைக்காக உருவாக்கபட்டவை தான் கூகுள், Chrome, Firefox போன்றவை. இவற்றில் மக்கள் அதிகமாக பயன்படுத்துவது கூகுள் தான். இந்த கூகுளுக்கு தெரியாத விஷயங்கள் என்று எதுவுமே இல்லை, பாடம் சொல்லி தரும் ஆசிரியரை போல அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்துள்ளது, சில நேரங்களில் ஆசிரியருக்கு தெரியாத செய்திகளை கூட தெரிந்து வைத்துள்ளது. உலகத்தை உங்கள் விரல் நுனியில் காமிக்கும் சக்தியை இந்த கூகுள் கொண்டுள்ளது என்றே சொல்லலாம்.
நொடியில் மக்களுக்கு தேவையான தகவல்களை வழங்கி வரும் கூகுளில் தலைமை அதிகாரியின் சம்பளம் எவ்வளவா இருக்கு என்று பலரும் சிந்தித்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் சுந்தர் பிச்சையின் சம்பளத்தை பற்றி அறிந்து கொள்வோம் வாங்க..
சுந்தர் பிச்சை பற்றிய சில விவரங்கள்:
இசுந்தர் பிச்சை அவர்கள் தமிழ் நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் 12-ம் தேதி ஜூலை மாதம் 1972 ஆம் ஆண்டு ரெகுநாத பிச்சை – லட்சுமி பிச்சை தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். சுந்தர் பிச்சை தன்னுடன் படித்த அஞ்சலி என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு காவ்யா மற்றும் கிரண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இவர் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர், இவர் சிறு வயதிலேயே சிறந்த மாணவனாக இருந்தார். பத்மா சேஷாத்ரி பாலா பவனில் கல்வி பயின்றார். பிறகு அவர் கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிப்புரிந்தனர். கரக்பூரில் உள்ள IIT- யில் பி.டெக் படித்தார். பின்னர் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் அறிவியல் மற்றும் இயற்பியலில் பட்டம் பெற்றார்.
சுந்தர் பிச்சை வெற்றி பெற்ற கதை
இவர் 2004 ஆம் ஆண்டு கூகுள் பொறியாளராக வாடிக்கையாளர் மென்பொருள் தயாரிப்புகள் தொகுப்பில் பணியாற்றி வந்தார். இவர் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்து வந்தார். இப்பொழுது கூகுள் நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
Sundar Pichai Salary Per Month in Rupees 2024:
இவருடைய சம்பளத்தை தோராயமாக அறிந்து கொள்வோம் வாங்க..
சுந்தர் பிச்சையின் மாதச் சம்பளம் சுமார் 1,38,30,531 கோடி ரூபாய்.
சுந்தர் பிச்சையின் சம்பளம் வருடத்திற்கு சுமார் 16,59,66,376 ரூபாய்.
சுந்தர் பிச்சையின் வார சம்பளம் 31,91,661 ரூபாய்
சுந்தர் பிச்சை ஒரு நாளைக்கு சம்பளம் 6,38,332 கோடி ரூபாய்.
இதுபோன்ற மேலும் சுவாரஸ்யமான தகவல்களை பெற இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉👉 | Salary and Promotion Details in Tamil |