Canara Bank Rd Scheme in Tamil
நமது முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து சேமிப்பு என்பது நம்மிடம் உள்ள ஒரு சிறந்த பண்பாகும். அதாவது நமது முன்னோர்களின் காலகட்டத்தில் சேமிப்பு என்றால் அது அவர்கள் விளைவிக்கும் உணவு பொருட்கள் மற்றும் சில பொருட்களை சேமித்தார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் சேமிப்பு என்றால் பணத்தை தான் சேமிக்க வேண்டும். ஏனென்றால் இன்றைய சூழலை பொறுத்த வரையில் நமிடம் பண இருந்தாலே போதும் மற்ற எல்லாமே நம்மிடம் தானாக வந்துவிடும் என்ற சூழல் தான் இங்கு நிலவுகின்றது.
அதனால் தான் நாம் அனைவருமே தங்களது எதிர்கால தேவைக்காக சேமிக்க நினைக்கின்றோம். ஆனால் ஒரு சிலருக்கு சேமிப்பு பற்றிய சரியான புரிதல் இல்லை என்பதே உண்மை. அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தான். இன்றைய பதிவில் தபால் துறையின் Canara Bank Rd சேமிப்பு திட்டம் பற்றிய முழுவிவரங்களையும் அறிந்து கொள்வோம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Canara Bank Rd Details in Tamil:
தகுதி:
இந்த கனரா வங்கியின் Rd சேமிப்பு திட்டத்தில் நீங்கள் சேமிக்க வேண்டும் என்றால் நீங்கள் 18 வயது நிரம்பிய இந்திய குடிமக்களாக இருந்தால் மட்டும் போதும்.
சேமிப்பு தொகை:
நீங்கள் இந்த கனரா வங்கியின் Rd சேமிப்பு திட்டத்தில் குறைந்தபட்சம் 50 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் சேமிக்கலாம்.
சேமிப்பு காலம்:
இந்த திட்டத்தில் நீங்கள் 120 மாதங்கள் அதாவது 10 வருடம் வரை சேமிக்கலாம்.
தபால் துறையில் நீங்கள் சேமிக்கும் தொகைக்கு 8.2% வட்டிவிகித்தை அளிக்கும் சேமிப்பு திட்டம்
வட்டி விகிதம்:
காலம் | பொது குடிமக்களுக்கான வட்டிவிகிதம்% | மூத்த குடிமக்களுக்கான வட்டிவிகிதம்% |
1 வருடம் மட்டும் | 6.90% | 7.40% |
1 வருடத்திற்கு மேல் முதல் 2 வருடங்களுக்கும் குறைவானது | 6.90% | 7.40% |
2 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவானவர்கள் | 6.85% | 7.35% |
3 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 5 வருடங்களுக்கும் குறைவானவர்கள் | 6.80% | 7.30% |
5 ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் முதல் 10 ஆண்டுகள் வரை | 6.70% | 7.20% |
எவ்வளவு கிடைக்கும்:
ஜென்ரல் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
நீங்கள் இந்த கனரா வங்கியின் Rd சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து நீங்கள் மாதா மாதம் 5,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் 5 வருட முடிவில் 3,00,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள்.
நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 5 வருடத்திற்கு உங்களுக்கு 56,830 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 3,56,830 ரூபாயினை பெறுவீர்கள்.
சீனியர் சிட்டிசனுக்கு எவ்வளவு தொகை கிடைக்கும்.?
நீங்கள் இந்த கனரா வங்கியின் Rd சேமிப்பு திட்டத்தில் 5 வருட கால அளவை தேர்வு செய்து நீங்கள் மாதா மாதம் 5,000 ரூபாயை முதலீடு செய்கிறீர்கள் என்றால் நீங்கள் 5 வருட முடிவில் 3,00,000 ரூபாயை முதலீடு செய்திருப்பீர்கள்.
நீங்கள் முதலீடு செய்த தொகைக்கு 5 வருடத்திற்கு உங்களுக்கு 61,568 ரூபாய் வட்டி தொகை கிடைக்கும். 5 வருடத்திற்கு பிறகு நீங்கள் செலுத்திய தொகை மற்றும் வட்டி தொகை இரண்டினையும் சேர்த்து 3,61,568 ரூபாயினை பெறுவீர்கள்.
தபால் துறையில் 5 வருடத்தில் 1,37,020/- அளிக்கும் மாதாந்திர வருமான திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |