பெண்களுக்காக தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டம்..!

Nattu Koli Valarpu In Tamil

இலவச கோழி வழங்கும் திட்டம்..! Nattu Koli Valarpu Thittam..!

Nattu Koli Valarpu In Tamil / இலவச நாட்டு கோழி பெறுவது எப்படி: வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் தமிழக அரசு அறிவித்துள்ள இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டத்தை பற்றித்தான் இந்த பதிவில் படித்து தெரிந்துக்கொள்ள போகிறோம். இந்த திட்டத்தில் யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம், தேவையான ஆவணம், விண்ணப்பம் எப்படி நிரப்புவது என்ற அனைத்து விவரங்களையும் இந்த பதிவில் தெளிவாக தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

newதமிழக அரசு வழங்கும் இலவச தையல் இயந்திரம்..! எப்படி பெறுவது? Free Sewing Machine Scheme in Tamil..!

யார் விண்ணப்பிக்கலாம்:

தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டம் பெண்களுக்கு மட்டும்தான் வழங்கி வருகிறார்கள்.

தேவையான ஆவணம்:

இலவச கோழி வழங்கும் திட்டத்தில் இணைக்கவேண்டிய ஆவணம் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, வங்கி கணக்கின் நகல், விண்ணப்பதாரரின் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ விண்ணப்பத்தில் இணைத்தல் வேண்டும்.

முன்னுரிமை: 

இலவச நாட்டு கோழி வழங்கும் திட்டத்தில் ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு 30% இட ஒதுக்கீடு கொடுக்கிறார்கள்.

திட்ட பயன்கள்: 

பெண்களுக்கு இந்த திட்டத்தின் மூலம் இலவசமாக 20-25 வரையிலும் கோழி வழங்குகிறார்கள்.

இந்த திட்டத்தின் மூலம் வழங்கும் நாட்டு கோழிகளுக்கு தடுப்பூசிகள் அனைத்தும் கால்நடைகள் பராமரிப்பு அதிகாரி மூலமே வழங்கப்படும்.

விண்ணப்பம் செலுத்தும் இடம்:

இந்த திட்டத்தில் விண்ணப்ப படிவத்துடன் மேல் கூறிய ஆவணங்களை இணைத்து விண்ணப்ப படிவத்தில் சரியான விவரங்களை நிரப்பிய பிறகு கால்நடை அதிகாரி அல்லது உங்களுடைய ஊரில் உள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்ப படிவத்தினை ஒப்படைத்தால் அவர்களே அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுப்பார்கள்.

விண்ணப்பம் நிரப்பும் முறை:

Nattu Koli Valarpu In Tamil

இந்த விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவரின் பெயர், தொலைபேசி எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், PIP அல்லது BPL எண், விண்ணப்பதாரரின் இனம், முகவரி, ஊராட்சி/ பேரூராட்சியின் பெயர், குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களின் விவரம் குறிப்பிட வேண்டும்.

அடுத்து விண்ணப்ப படிவத்தில் முன்னுரிமை பிரிவில்(விதவை/ கணவரால் கைவிடப்பட்டோர்/திருநங்கை) இவற்றில் ஏதேனும் உள்ளவர்கள் சரியானவற்றை கொடுத்து நிரப்பவும்.

குடும்பத்தில் உள்ள நபர்கள் ஏதேனும் பணியில் இருந்தால் அதன் விவரம், அடுத்து இதற்கு முன் தமிழக அரசின் இலவச ஆடு, கோழி, கறவை மாடு வழங்கும் திட்டத்தில் நீங்கள் விண்ணப்பித்து பயனடைந்து இருக்கிறீர்கள் என்றால் அதன் விவரத்தினை குறிப்பிட வேண்டும்.

அதன் பிறகு மேல் கொடுத்துள்ள ஆவணங்கள் அனைத்தும் சரியானது என்று உறுதிமொழி அளித்து கையொப்பம் இடவேண்டும். விண்ணப்ப படிவத்தினை சரியாக பூர்த்தி செய்து கால்நடை மருத்துவரிடம் ஒப்படைத்து அதன் பிறகு இலவசமாக வழங்கிய கோழிக்கு நோய் ஏதேனும் ஏற்பட்டால் அந்த கால்நடை மருத்துவரிடம் சென்றே அதற்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளலாம்.

இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருந்தால் மற்றவர்களுக்கும் ஷேர் செய்யவும்.

newஅம்மா இரு சக்கர வாகனம் திட்டம்..! Amma Two Wheeler Scheme..!
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil