Post Office Tata Aig Insurance Policy in Tamil
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்..! பணம் என்பது நாம் அனைவருக்கும் எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்து இருக்கும். ஆகையால் நாம் எப்போதும் நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வதை காட்டிலும் அதிகமாக தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்போம். இவ்வாறு நினைப்பதும், அதற்கு ஏற்றவாறு பணம் சம்பாதிப்பதும் சரியானதாக இருந்தாலும் கூட பணத்தினை வீட்டிலேயே வைத்து சேமிப்பது மூலம் எந்த பயனும் கிடையாது.
ஏனென்றால் வீட்டில் சேமிப்பது வைப்பது மூலம் நமது பணம் அப்படியே பாதுகாப்பாக இருக்குமே தவிர அதற்கான வட்டியோ, அல்லது வேறு ஏதேனும் சலுகைகளும் இதில் நமக்கு கிடைக்காது. அதுவே இந்த பணத்தினை நமக்கு ஏற்ற மாதிரியான ஒரு திட்டத்தில் சேமித்து வைப்பதன் மூலம் அதிகப்படியான நன்மை கிடைக்கும். ஆகையால் இன்று போஸ்ட் ஆபீசில் உள்ள ஒரு பாலிசி பற்றியும், அதில் நாம் எவ்வளவு சேமித்தால் எவ்வளவு ரூபாய் வரையிலும் பெறலாம் என்பதையும் தெளிவாக பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
போஸ்ட் ஆபீஸ் டாடா ஏஐஜி பாலிசி:
இந்தியாவில் போஸ்ட்டல் துறை ஆனது தற்போது விபத்து காப்பீடு ஒன்றை அறிமுகம் செய்து உள்ளது. இந்த பாலிசி 10,00,000 ரூபாய்க்கான பாலிசி ஆகும். மேலும் இதில் வருடாந்திர பிரீமியம் தொகையும் மிகவும் குறைவான ஒன்று தான்.
மேலும் இந்த பாலிசியில் நீங்கள் சேர விரும்பினால் உங்களது ஊரில் உள்ள போஸ்ட் ஆபிஸிலேயே சேர்ந்து கொள்ளலாம்.
வயது தளர்வு:
இந்த பாலிசியில் குறைந்தப்பட்சம் 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் வரை மட்டுமே இதில் சேர முடியும்.
பாலிசி தொகை:
இந்த பாலிசியில் உங்களுக்கான சேமிப்பு தொகையாக வருடா வருடம் வெறும் 399 ரூபாய் மட்டுமே செலுத்தினால் போதும்.
இப்பாலிசியின் முக்கிய விவரம்:
- Accidental Death
- Accidental Dismemberment Death
- Accidental Medical Expenses IPD
- Permanent Total Disability Insurance
- Permanent Partial Disability Insurance
- Last Rites Benefits
- Educational Benefits
- Acidental Medical Expenses OPD
- Hospital Daily Cash
- Family Transportation Benefits
மேலே சொல்லப்பட்டுள்ள முறையில் பாலிசிதாரர் திடீரென்று இறந்து விட்டால் அவருக்கு பாலிசி தொகையான 10,00,000 ரூபாய் வழங்கப்படும்.
அப்படி இல்லாமல் மேல் கூறியுள்ள சில காரணங்கள் காணப்பட்டால் அதற்கு ஏற்ற மாதிரியான பாலிசி தொகை உங்களுக்கு அளிக்கப்படும்.
- War
- Disease
- AIDS
- Sucide
- Illegal Act
- Bacterial Infections
- Dangerous Sports etc
- Millitary services or operations
அதேபோல் இத்தகைய முறைகளில் பாலிசிதாரர் இறந்தார் எனில் அவருக்கு எந்த விதமான தொகையும் இதில் வழங்கப்படாது.
தேவையான ஆவணம்:
ஆதார் அட்டை
தபால் துறையில் 1,875 ரூபாய் செலுத்தி 10,04,000 ரூபாய் அளிக்கும் சேமிப்பு திட்டம்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | Scheme in Tamil |