தபால் துறையில் 1,875 ரூபாய் செலுத்தி 10,04,000 ரூபாய் அளிக்கும் சேமிப்பு திட்டம்..!

Advertisement

RPLI Gram Suraksha Insurance Scheme in Tamil

போஸ்ட் ஆபீஸ் நாம் அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். ஏனென்றால் ஒவ்வொருடைய ஊரிலும் இது காணப்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலும் தன்னால் முடிந்த குறிப்பிட்ட சேமிப்பு தொகையினை இவற்றில் செலுத்தி சேமித்தும் வருகிறார்கள். அதிலும் குறிப்பாக செல்வமகள் சேமிப்பு திட்டம் பெண்களுக்கான ஒரு திட்டமாக இருப்பதனால் பெண் குழந்தையின் பெயரில் இதனை பணத்தினை சேமித்து வருகிறார்கள்.

ஆனால் தபால் துறையில் இந்த திட்டம் மட்டும் இல்லாமல் சீனியர் சிட்டிசன் திட்டம், செல்வமகன் சேமிப்பு திட்டம், டைம் டெபாசிட் திட்டம் மற்றும் பிக்சட் டெபாசிட் திட்டம் என இவற்றையும் கூட இருக்கிறது. அந்த வகையில் கிராம சுரக்ஷா பாலிசியும் ஒன்று ஆகும். மேலும் இவற்றின் தகுதிகள் அனைத்தும் வெவ்வேறு முறையில் தான் இருக்கிறது. ஆகவே இன்றைய பதிவில் கிராம சுரக்ஷா பாலிசி பற்றிய முழு விவரத்தை தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

போஸ்ட் ஆபீஸ்பாலிசி:

போஸ்ட் ஆபிசில் உள்ள இந்த இன்சூரன்ஸ் பாலிசியில் குறைந்த தொகையினை செலுத்தி அதிக தேவையினை பெற முடியும். மேலும் இதில் உங்களின் மாத சேமிப்பு தொகை ஆனது வயது மற்றும் பாலிசி தொகையினை பொறுத்தே மாறுபடும்.

வயது தளர்வு:

குறைந்தப்பட்சம் 19 வயது முதல் அதிகபட்சம் 55 வயது வரை உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் இந்த பாலிசியினை உங்களது போஸ்ட் ஆபீஸியில் வாங்கலாம்.

சேமிப்பு தொகை:

தபால் துறையில் இந்த பாலிசியில் குறைந்தபட்சம் 10,000 ரூபாய் முதல் அதிகபட்சமாக 10,00,000 ரூபாய் வரையிலும் பெற்றுக்கொள்ளலாம்.

சேமிப்பு காலம்:

இதில் உங்களுக்கான சேமிப்பு காலமாக 4 முதல் 51 வருடம் வரையிலும் அளிக்கப்படுகிறது. எனவே உங்களுக்கான சேமிப்பு காலத்தினையும் நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

போனஸ் ரேட்:

உங்களது சேமிப்பு தொகையில் உள்ள ஒவ்வோரு 1000 ரூபாய்க்கும் 48 ரூபாய் வருடா வருடம் போனஸ் ரேட் அளிக்கப்படுகிறது.

கடன் வசதி:

இந்த பாசிலிஸியில் நீங்கள் சேர்ந்த 3 வருடம் கழித்து கடன் பெற்றுக்கொள்ளும் வசதியும் இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து பாருங்கள் 👇
SBI வங்கியில் 500 முதலீடு செய்தால் வட்டி மற்றும் அசல் எவ்வளவு கிடைக்கும் 

கிராம சுரக்ஷா போஸ்ட் ஆபீஸ் பாலிசி:

ஒருநபர் 19 வயதில் 5,00,000 ரூபையினை 21 வருட கால அளவில் வாங்கினால் மாதம் எவ்வளவு கட்ட வேண்டும், எவ்வளவு அசல் கிடைக்கும் என்று கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

RPLI Gram Suraksha Insurance Scheme in Tamil
வயது  மாத சேமிப்பு தொகை  மொத்த சேமிப்பு தொகை  போனஸ் தொகை  அசல் தொகை 
19 வயது  1,875 ரூபாய் 4,72,500 ரூபாய்  5,04,000 ரூபாய் 10,04,000 ரூபாய்
மேலும் சேமிப்பு திட்டங்களை பற்றி தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Scheme in Tamil
Advertisement