தமிழ் புதல்வன் திட்டம்
வாசகர்கள் வனைவர்க்கும் வணக்கம். இன்றைய பதிவில் ஒரு அருமையான தகவல் பற்றி தெரிந்து கொள்ளலாம். அதாவது, தமிழ் புதல்வன் திட்டம் பற்றிய சில தகவல்களை இப்பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம் வாங்க. தமிழ் புதல்வன் திட்டம் பற்றி நாம் அனைவருமே அறிந்து இருப்போம். அனால், இத்திட்டம் பற்றி நம்மில் பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தமிழ் புதல்வன் திட்டம் என்பது சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட திட்டமாகும். நிதியாண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கு என்று தனி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே, இத்திட்டத்தின் மூலம் தமிழ் புதல்வன் திட்டம் என்றால் என்ன.? இத்திட்டத்தின் நோக்கம் என்ன.? உள்ளிட்ட பல விவரங்களை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம் வாங்க.
பெண்களுக்காக 50,000 கடன் வழங்கும் அன்னபூர்ணா திட்டம்!
தமிழ் புதல்வன் திட்டம் என்றால் என்ன.?
தமிழ் புதல்வன் திட்டம் என்பது, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றுள்ள மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டமாகும். இத்திட்டத்த்தின் கீழ், அரசு பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்கள் பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் போன்ற கல்வி சம்மந்தப்ட்ட பொருட்களை வாங்கி பயன்பெறும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இத்திட்டம், இனி வரும் நிதியாண்டில் இருந்து செயல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சுமார் மூன்று லட்சம் கல்லூரி மாணவர்கள் பயனடைவார்கள். இத்திட்டத்தினை நிறைவேற்றிட வரும் நிதியாண்டில் 360 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதேபோல மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும், புதுமைப் பெண் திட்டம் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் கல்வி பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
செல்வமகள் சேமிப்பு திட்டம் வருடம் 5000
தமிழ் புதல்வன் திட்டத்தின் நோக்கம்:
அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி போகும் மாணவர்கள் மேன் மேலும், கல்வியில் வளர்ச்சி அடைந்து எதிர்காலத்தில் நமது மாநிலம் மற்றும் நாட்டின் எதிர்காலத் தூண்களாக இருக்க வேண்டும் என்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.
இந்த முன்னோடித் திட்டங்களின் மூலம் நமது இளைஞர்கள் ஆற்றலை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தி கொண்டு முன்னேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
தொடங்கியது “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம்
மேலும் இதுபோன்ற வங்கிகள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Banking |