Green Comet has Come to Close to Earth in Tamil
பொதுவாக நாம் அனைவருக்குமே விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் இருக்கும். ஏனென்றால் அதனை பற்றிய தகவலை நாம் படிக்கும் பொழுது அல்லது கேட்கும் பொழுது சுவாரசியமாக இருக்கும். அதனால் ஒரு சிலர் விண்வெளி பற்றிய தகவல்களை தேடி தேடி அறிந்து கொள்வார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் தினமும் நமது பதிவின் மூலம் ஒரு விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம் அதனை பற்றி அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> விண்வெளிக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்து செல்வார்கள் தெரியுமா
50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம்:
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வந்த வால் நட்சத்திரத்தை கொடைக்கானலில் மார்ச் 2 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது. இதனை 4 மாதங்களுக்கு வெறும் கண்களால் பார்க்கலாம் என கொடைக்கானல் சூரிய ஆராய்ச்சி கூடம் தெரிவித்துள்ளது.
இதுவரை 6500-க்கும் மேற்பட்ட வால் நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளது. அப்படி கண்டுப்பிடிக்கப்பட்டுள்ள வால் நட்சத்திரங்களில் பல நட்சத்திரங்கள் பூமிக்கு அருகில் வந்து கடந்து செல்வது சகஜமான ஒன்று ஆகும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> விண்வெளியில் துப்பாக்கியால் சுட முடியுமா முடியாதா
அதேபோல் c/2022 E3 ZTF என அழைக்கப்படும் இந்த பச்சை நிற வால் நட்சத்திரம் 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு பூமிக்கு அருகில் வருகின்றது. அதாவது இந்த வால் நட்சத்திரம் 4 கோடி கிலோ மீட்டர்களுக்கு அப்பால் பூமியை கடந்து செல்கிறது.
இதனை நீங்கள் ஜூன் 12-ஆம் தேதி வரை வெறும் கண்களில் காணலாம். பூமியை இந்த வால் நட்சத்திரம் நெருங்கி கடந்து செல்லும் போது சுமார் 57 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்து செல்லும் என்று கூறப்படுகின்றது.
இதனை சூரியன் மறைவிற்கு பிறகு வடக்கு திசையில் காணலாம் என்று கூறப்படுகின்றது. மேலும் இந்த நட்சத்திரம் மிகவும் பிரகாசமாக இருப்பதால் சில இடங்களில் நன்றாக வானில் காணலாம் என்றும் கூறப்படுகின்றது.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> விண்வெளியின் வாசனை எப்படி இருக்கும் தெரியுமா
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |