What Food do Astronauts Take to Space in Tamil
இன்றைய பதிவை முழுதாக படித்து முடிக்கும் பொழுது ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்ட மனத்திருப்தி கிடைக்கும். அதிலும் குறிப்பாக அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கும், விண்வெளி பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களுக்கும் இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
ஆம் நண்பர்களே நமது பதிவின் மூலம் தினமும் ஒரு விண்வெளி பற்றிய தகவலை அறிந்து கொண்டு வருகின்றோம். அந்த வரிசையில் இன்றைய பதிவில் விண்வெளியில் எந்த மாதிரியான உணவுகளை எடுத்து செல்வார்கள் என்பதை பற்றி தான் அறிந்து கொள்ள போகின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து இதில் உள்ள தகவலை அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> விண்வெளியில் துப்பாக்கியால் சுட முடியுமா முடியாதா
விண்வெளிக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்து செல்வார்கள்:
மனிதனாக பிறந்த அனைவருக்குமே உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று ஆகும். உணவு இல்லாமல் ஒரு மனிதனால் உயிர்வாழ்வது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.அதனால் அனைவருமே உணவினை தவிர்க்க மாட்டார்கள்.
அதேபோல தான் விண்வெளிக்கு செல்பவர்களுக்கும் உணவு என்பது மிகவும் அவசியம். ஆனால் நம்மில் பலரும் நினைத்து கொண்டிருப்போம் விண்வெளிக்கு உணவு எடுத்து செல்ல மாட்டார்கள் என்று, ஆனால் அது உண்மை இல்லை விண்வெளிக்கு கண்டிப்பாக உணவு எடுத்து செல்வார்கள். அடுத்து உங்களின் மனதில் உடனடியாக ஒரு கேள்வி எழும் விண்வெளிக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்து செல்வார்கள் என்று அதற்கான பதிலை இங்கு காணலாம்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> விண்வெளியின் வாசனை எப்படி இருக்கும் தெரியுமா
பொதுவாக விண்வெளியில் புவியிர்ப்பு விசை குறைவாக உள்ளதால் உணவு உண்பதில் பல சவால்கள் உள்ளன. அதாவது இவர்கள் தங்கள் எடுத்து செல்லும் உணவுகளை அதன் பொட்டலத்தில் இருந்து பிரித்து தங்களின் வாய்க்கு கொண்டு செல்வதே மிகவும் கஷ்டமாக இருக்கும்.
அதே போல் விண்வெளிக்கு என்ன உணவு எடுத்து செல்வது என்பதில் ஆரம்ப கால கட்டங்களில் பல குழப்பங்கள் ஏற்பட்டன. அவற்றை எல்லாம் ஆராய்ந்து அந்த குழப்பங்கள் அனைத்தும் திறக்கப்பட்டது.
அதாவது விண்வெளிக்கு உறைய வைத்த உலர் உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் தூள் பானங்களையே எடுத்து செல்வது தான் சரியாக இருக்கும் என்று கண்டறிந்தார்கள். அதன் பிறகு அனைத்து விண்வெளி வீரர்களும் இந்த மாதிரியான உணவுகளை எடுத்து செல்ல ஆரம்பித்தார்கள்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> விண்வெளியில் அடிபட்டால் இரத்தம் என்ன நிறத்தில் வரும் என்று தெரியுமா
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |