Interesting Facts About Comets in Tamil
வணக்கம் நண்பர்களே..! நமது சூரிய குடும்பம் பல ஆச்சிரியங்களையும், விநோதங்களை தனக்குள்ளே கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட நமது சூரிய குடும்பத்தில் உள்ள விநோதங்களில் ஒன்று தான் இந்த வால் நட்சத்திரங்கள். இவற்றை பற்றி தான் நாம் இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ள போகிறோம்.
அதாவது வால் நட்சத்திரங்கள் பற்றி பலரும் அறியாத சுவாரசியமான விஷயங்களை தான் இன்றைய பதிவில் காண இருக்கின்றோம். அதனால் இன்றைய பதிவை முழுதாக படித்து இதில் கூறியுள்ள வால் நட்சத்திரம் பற்றிய சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்ளுங்கள்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> 50 ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் பூமியை நெருங்கும் பச்சை நிற வால் நட்சத்திரம் அதனை பற்றி உங்களுக்கு தெரியுமா
Facts About Comets in Tamil:
நமது ஒன்பது கோள்களைப் போலவே வால் நட்சத்திரங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன.
இதுவரை சுமார் 6500 வால் நட்சத்திரங்கள் கண்டறியப்பட்டுள்ளது.
வால் நட்சத்திரங்கள் சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சூரிய குடும்பத்தின் ஆரம்ப கால உருவாக்கத்திலிருந்து வெளியிடப்பட்ட பனிக்கட்டிகள், தூசி மற்றும் பாறை குப்பைகளால் ஆனது.
ஊர்ட் கிளவுட் மற்றும் கைபர் பெல்ட் இரண்டு பகுதிகளிலிருந்து வந்ததாகக் கருதப்படுகிறது. இவை இரண்டும் நமது சூரிய குடும்பம் உருவானதில் இருந்து எஞ்சியிருக்கும் பொருட்கள் பனிக்கட்டி பொருட்களாக ஒடுங்கிய பகுதிகள் ஆகும்.
இதையும் தெரிந்துக் கொள்ளுங்கள்=> விண்வெளிக்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்து செல்வார்கள் தெரியுமா
வாழ் நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை நீள்வட்டமானது.
குறுகிய கால வால் நட்சத்திரங்கள் ஒவ்வொரு 20 வருடங்களுக்கும் அல்லது அதற்கும் குறைவான காலத்திற்கு சூரியனைச் சுற்றி வருகின்றன. இதுவே நீண்ட கால வால் நட்சத்திரங்கள் என்றால் ஒவ்வொரு 200 வருடங்களுக்கும் அல்லது அதற்கும் மேலாக சூரியனைச் சுற்றி வருகின்றன.
வால் நட்சத்திரங்கள் பொதுவாக சுமார் 360 கிமீ/வி வேகத்தில் சூரியனைச் சுற்றி வரும்.
வால் நட்சத்திரங்கள் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளன. அதாவது கரு, கோமா மற்றும் வால்கள் ஆகும்.
வால் நட்சத்திரங்கள் 1 கிலோ மீட்டருக்கும் குறைவான விட்டம் முதல் 300 கி.மீ வரையிலான அளவில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளார்கள்.
வால் நட்சத்திரங்களின் கோமா என்ற பகுதி மட்டும் சுமார் 1,20,000 கி.மீ அளவில் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது பூமியின் விட்டத்தை போல் பத்து மடங்கு ஆகும்.
இதையும் தெரிந்து கொள்ளுங்கள்=> விண்வெளியில் துப்பாக்கியால் சுட முடியுமா முடியாதா
இது போன்ற தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் | Science |