ஆசியக் கோப்பை 2022 | இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வாரியம் ஆசிய கோப்பை 2022-க்கான இந்திய கிரிக்கெட் அணிகளை அறிவித்துள்ளது. ஆசிய கோப்பை தொடர் ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 11 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. ஆசிய கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 5 அணிகளுடன் தகுதிச்சுற்றில் ஜெயிக்கும் அணி 6வது அணியாக இணையும். இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று போட்டியில் தகுதிபெறும் அணி ஆகிய 3 அணிகளும் ஏ பிரிவிலும், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் பி பிரிவிலும் இடம்பெற்றுள்ளன. 2022 ஆசியக் கோப்பையின் இறுதிப் போட்டி செப்டம்பர் 11-ஆம் தேதி துபாயில் நடைபெறவுள்ளது. சரி இந்த ஆண்டு நடைபெறும் ஆசிய கோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.
இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு 2022 | Asia Cup 2022 Teams List India
இந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கான இந்திய அணியை பிசிசிஐ எப்போது அறிவிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஜஸ்பிரித் பும்ரா முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். 2022 ஆசியக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் துணைக் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகிய இரு விக்கெட் கீப்பர்கள் அணியில் உள்ளனர்.
இந்திய அணி விவரம்:
ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், சாஹல், ரவி பிஷ்னோய், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங் மற்றும் ஆவேஷ் கான்.
இதையும் படியுங்கள் 👉 2022 காமன்வெல்த் விளையாட்டில் 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம்: பதக்கம் வென்ற வீரர்களின் முழு விவரம்..!
இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 | Sports |