வாலிபால் விளையாட்டை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்

Advertisement

வாலிபால் விளையாட்டு

பொதுவாக என்னென்ன விளையாட்டுகள் இருக்கிறது அதை எப்படி விளையாடுவார்கள் என்று தெரியும். ஆனால் அதில் உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகள் பற்றி தெரிந்திருக்காது. விளையாட்டுகளின் விதிகள் மற்றும் விதிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ள இந்த பதிவில் கடைசியாக கொடுக்கப்பட்டிருக்கும் அட்டவணையில் உள்ள லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள். இப்போது வாலிபால் விளையாட்டின் விதிமுறைகளை பற்றி படித்து தெரிந்து கொள்வோம்.

வாலிபால் விளையாட்டு என்றால் என்ன.?

ஒரு வலையில் இரண்டு அணிகளாக பிரிக்கப்பட்டு கைகளால் பந்தை அடித்து விளையாடுகின்ற விளையாட்டு ஆகும்.

வாலிபால் விளையாட்டை எப்படி விளையாடுவது.?

வாலிபால் மைதானம் செவ்வக வடிவத்தில்  18 மீட்டர் நீளமும், 9 மீட்டர் அகலமும் கொண்டதாக இருக்க வேண்டும். இந்த விளையாட்டில் மொத்தம் 12 வீரர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு அணியிலும் 6 வீரர்கள் இருப்பார்கள். விளையாட்டை ஆரம்பிப்பதற்கு நாணயத்தை சுற்றுவார்கள்.

இதை வைத்து தான் எந்த அணி முதலில் அடிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.  வலைக்கு மேல் பகுதியில் பந்தை அடித்து புள்ளிகளை பெற வேண்டும்.

பெண்கள் விளையாடும் மைதானத்தின் வலையின் உயரம் 2.24 மீட்டர் நீளம் இருக்க வேண்டும். அதுவே ஆண்களுக்கு 2.43 மீட்டர் இருங்க வேண்டும்.

இதையும் படியுங்கள் ⇒ புட்பால் விளையாட்டை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

இந்த விளையாட்டில் குறைந்தபட்சம் 3 சுற்றுகளும், அதிகபட்சம் 5 சுற்றுகளும் நடக்கும். முதலில் நடக்கும் 3 சுற்றுகளில் 25 புள்ளிகளை பெற்ற அணி மற்ற அணியை விட 2 புள்ளிகள் வித்தியாசத்தில் சுற்றை வெல்லும்.

வாலிபால் விதிமுறைகள்:

வீரர்கள் தொடர்ந்து இரண்டு முறை பந்தை அடிக்க கூடாது. வலையின் 10 அடி தூரத்தில் இருந்து தான் பந்தை தடுக்கவோ அல்லது அடிக்கவோ முடியும். பந்தை கைய தவிர உடலில் வேற எந்த பகுதிகளாலும் அடிக்க கூடாது. 

வீரர்கள் பந்துகளை எடுத்து செல்லவோ அல்லது பந்துகளை கையால் எடுத்து கொண்டு ஓடவோ அனுமதி கிடையாது.

இதையும் படியுங்கள் ⇒ கபடி விளையாட்டின் விதிமுறைகள்

இதுபோன்ற மேலும் தகவல்களை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉 Sports

 

Advertisement