30 நாட்கள் கர்ப்ப அறிகுறிகள் | 30 days Pregnancy Symptoms in Tamil
1 மாத கரு எப்படி இருக்கும்? பொதுவாக ஒரு பெண் தாய்மையை அடைவதின் மூலம் ஒரு பெண்ணின் வாழ்க்கை முழுமை அடைகிறது என்றே கூறலாம். அதாவது ஒரு பெண் குழந்தையாக பிறந்து பருவ பெண்ணாக மாறி திருமணத்திற்கு பிறகு கர்ப்பம் அடைவதின் மூலம் தாயாகி அவளின் வாழ்க்கையின் முழுமைத்தன்மையை அடைகிறாள். இவ்வளவு பெரிய வரப்பிரசாதமான தாய்மை ஒரு சிலருக்கு கவனவாக உள்ளது. ஆனால் ஒரு சிலருக்கும் தங்கள் கர்ப்பமாக தான் இருக்கின்றோம் என்பதே தெரியாமல் போகி சில தவறுகள் ஏற்படுகின்றது. பொதுவாக நமது உடலில் ஏதாவது ஒரு நோய் ஏற்படுகின்றது என்றால் அதற்கான அறிகுறிகளை நமது உடல் நமக்கு அளிக்கும். அதேபோல் தான் இப்பொழுது நீங்கள் கர்ப்பமாக இருக்கின்றிர்கள் என்றால் அதற்கான சில அறிகுறிகளை நமது உடல் நமது கவனத்திற்கு கொண்டு வரும்.
அதுமட்டும் இல்லாமல் இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒவ்வொரு மாதத்திற்கும் வெவ்வேறு மாதிரியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஆகவே இன்றைய பதிவில் முதல் மாதம் கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு தோன்றும் அறிகுறிகளை என்னென்ன என்பதை பற்றி தான் பார்க்கப்போகிறோம்.
முதல் மாதத்தில் கருவின் வளர்ச்சி எப்படி இருக்கும்:

கர்ப்பத்தின் முதல் மாதத்தில் என்ன நடக்கிறது என்பதைப் நாம் புரிந்துகொள்வது அவசியம். ஒரு பெண்ணின் கருமுட்டையானது விந்தணுவின் மூலம் கருவுற்றால், அது கருப்பையின் உட்புறத்தில் பொருத்தப்பட்டு, அந்த நிமிடத்திலிருந்து, ஒரு புதிய உயிரின் வாழ்க்கை தொடங்குகின்றது.
கர்ப்பத்தின் முதல் மாதத்தில், கருவானது இதயம், மூளை மற்றும் நரம்பு மண்டலம் போன்ற முக்கிய உறுப்புகள் மற்றும் அமைப்புகளின் உருவாக்கம் உட்பட குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உட்படுகிறது.
இந்நிலையில் மனித கோரியானிக் கோனாடோட்ரோபின் (hCG) போன்ற கர்ப்பத்தை ஆதரிக்க உடல் ஹார்மோன்களை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது.
30 நாட்கள் கர்ப்ப அறிகுறிகள்:

கர்ப்பம் முக்கிய அறிகுறிகள் என்ன:
- மாதவிடாய் தவறியது
- குமட்டல்
- வாந்தி
- சோர்வு
- தசைப்பிடிப்பு
- மார்பக மாற்றங்கள்
- மனநிலை மாற்றங்கள்
- உணவு ஆசைகள் அல்லது வெறுப்புகள்
- தலைவலி
- மலச்சிக்கல்
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
தசை பிடிப்புகள்:
மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வழியை போலவே இந்த தசைபிடிப்பு வழியும் இருக்கும். ஆதி வயிற்று மற்றும் கீழ் முதுகில் தசை பிடிப்பு ஏற்படும். கர்ப்பமாக இருக்கும் போது இலேசான அல்லது தசைப்பிடிப்பை நீங்கள் அனுபவிக்கலாம். இந்த பிடிப்புகள் உங்கள் மாதவிடாய்க்கு முன் நீங்கள் அனுபவிப்பதை போல இருக்கும்.
மார்பகம் மென்மை:
மார்பகத்தில் வலி மற்றும் மென்மையான உணர்வுகளை ஏற்படுத்தும். மார்பகங்கள் கருமையாக தோன்றி அரிப்பு கூச்சம் அல்லது முட்கள் போன்ற உணர்வை உண்டாக்கும். இது மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளிலிருந்து வேறுபட்டவை மாதவிடாய் சுழற்சி வராத நிலையிலும் தோன்றும்.
உடல் வீக்கம்:
வீக்கம், வயிறு இழுப்பது, இழுப்பது புரோஜெஸ்ட்ரான் அளவு அதிகரிப்பதன் விளைவாகும். ஹார்மோன்களின் அதிகரித்த அளவு செரிமானத்தை தடுக்கிறது. குடல் வாயுவை அடைக்கிறது. வயிற்று இடுப்பை சுற்றி ஆடைகள் அசெளகரியப்படுத்தும்.
அடிக்கடி சிறுநீர்:
அடிக்கடி சிறுநீர் கழிக்க தூண்டுவது கர்ப்ப அறிகுறி. இது கர்ப்ப காலத்தில் மட்டுமே அதிகரிக்கும். வளரும் கருப்பை சிறுநீர்ப்பை தள்ள தொடங்கும் போது ஹார்மோன் மாற்றங்கள் கூடுதல் உற்பத்தியுடன் அடிக்கடி சிறுநிர் கழிப்பது பொதுவான அறிகுறி. சிறுநீரகங்கள் இரத்தத்தை வ்டிகட்ட அதிக நேரம் வேலை செய்கின்றன இதனால் அடிக்கடி சிறுநிர் கழிக்க வேண்டும் என்னும் எண்ணம் உண்டாகிறது.
மலச்சிக்கல்:
புரோஎஸ்ட்ரோன் ஹார்மோன் குடலில் மலச்சிக்கலை உண்டாக்கலாம். கர்ப்பத்தின் ஆரம்ப அறிகுறியாக குடல் இயக்கங்கள் ஹார்மோன்களின் தூண்டுதலால் கடினமடைகின்றன. செரிமான அமைப்பு வழியாக வேகமாக உணவு செல்லும் வேகம் குறைவதால் இது நிகழ்கிறது. இவற்றால் மலசிக்கல் பிரச்சனை ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
தலைவலி:
பொதுவான மாதவிடாய் முன் அறிகுறி. கருத்தரித்தவுடன் ஈஸ்ட்ரோஜன் மற்ரும் புரோஜெஸ்ட்ரோன் ஹார்மோன்கள் குழந்தைக்கு கருப்பையை தயாரிக்க அதிக வேலை செய்கின்றன. இதனால் இவை இரத்த சர்க்கரை அளவை குறைத்து தலைவலியை உண்டு செய்கின்றன.
மயக்கம்:
சில நேரங்களில் காலை நேரத்தில் மயக்கம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. தூக்கம் வந்து கொண்டே இருக்கும். உடல் ஆனது சோர்வடையும்.
கர்ப்பத்தின் பிற அறிகுறிகள்:
- முதுகு வலி
- அதிகரித்த உடல் வெப்பநிலை
- முகப்பரு அல்லது தோல் மாற்றங்கள்
- வாயில் உலோகச் சுவை
- அதிகரித்த யோனி வெளியேற்றம்
- நெஞ்செரிச்சல்
குறிப்பு:
உங்களுக்கு மாதவிடாய் ஆனது எப்போதும் வர தேதியை விட வருவதற்கு நாட்கள் ஆனால் சோதனை செய்வது நல்லது. மேற்கூறிய அறிகுறிகள் தோன்றினால் சில இரத்த பரிசோதனைகள் செய்து கன்பார்ம் செய்ய வேண்டும்.
ஆரம்பகால கர்ப்ப அறிகுறிகள்
| மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |














