இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்ன? High Blood Pressure Symptoms in Tamil
ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. இன்றைய கால கட்டத்தில் ஆரோக்கியத்தை புறக்கணித்து, உணவு முறைகளை மாற்றிக்கொண்டு வருவத்தினாலும். அதிகரித்துக்கொண்டு வரும் வேலை பளுவால் ஏற்படக்கூடிய முறையற்ற தூக்கத்தினாலும் ஏராளமான நோய்களினால் அதிக மக்கள் பாதிக்கப்படுகின்றன. அந்த வகையில் உயர் இரத்த அழுத்தமும் ஒன்றாகும். இந்த இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்ன? மற்றும் இந்த இரத்த அழுத்த நோயால் ஏற்ப்படும் விளைவுகளை பற்றி இன்றைய பதிவில் நாம் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்ன? High BP Symptoms in Tamil
Hypertension என்று சொல்லக்கூடிய இந்த உயர் இரத்த அழுத்தம் வராமல் கட்டுப்படுத்த இரத்த அழுத்தத்தை 120/80 என்ற நிலையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கன் ஹார்ட் அசோசியேசன் (American Heart Association) கூறுகிறது.
அதாவது குறைந்த அளவு BP என்பது 80 அல்லது அதற்கும் கீழ் ஆகும். அதிகளவு BP என்பது 120-க்கும் குறைவாக வைத்திருக்க வேண்டுமாம். இல்லையென்றால் தமனிகள் இரத்த நாளங்களின் சுவர்களை சேதப்படுத்தி தீவிர இரத்த அழுத்தத்தை உணரச்செய்யும். இதன் காரணமாக அடைப்பு ஏற்பட்டால் இதயத்திற்கான ஆக்சிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தை அனுமதிக்காது.
இதனால் தீவிர தாக்கத்தை உண்டாகி உயிரையே பறித்துவிடுமாம். ஆக உயர் இரத்த அழுத்தம் தானே என்று அலட்சியமாக இருக்க கூடாது. ஒரு வேளை அலட்சியமாக இருந்தால் அபாயகரமான பக்கவாதமும், மாரடைப்பும் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறுகின்றன.
இரத்த அழுத்தத்திற்கான பாதிப்புகள் நாம் பரிசோதனை செய்யாதவரை நமக்கு அறிகுறைகளை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம் என்று எச்சரிக்கும் மருத்துவர்கள் இதன் காரணமாக தான் இரத்த அழுத்தத்தை ஒரு சைலண்ட் கில்லர் என்று அழைக்கின்றன.
எனவே உங்கள் இரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வு இருக்கும் சில அறிகுறிகள் இருப்பதாகவும் அதனை புறக்கணிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் அறிவுறுதிக்கின்றன. சரி வாங்க அதற்கான அறிகுறிக்கள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடம்பில் ஏற்படும் வைட்டமின் டி குறைபாட்டிற்கான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா..?
இரத்த அழுத்தம் அதிகமானால் அறிகுறிகள் என்ன? – High BP Symptoms in Tamil
- கடுமையான தலைவலி
- மங்கலான பார்வை
- மன தெளிவின்மையை Brain Fog
- மூச்சுத்திணறல்
- எப்பொழுது சோர்வாக இருப்பது
- குமட்டல்
மேல் கூறப்பட்டுள்ள அனைத்தும் புறக்கணிக்ககூடாத அறிகுறிகள் ஆகும். ஆக இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது மிகவும் சிறந்தது.
உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
வயது மூப்பு, மரபியல் மற்றும் உடல் எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் உயர் இரத்த அழுத்தம் வரும். ஆனால் இதனை நாம் நமது லைப் ஸ்டைலை மாற்றுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
அதன்படி அதிக அளவிலான உப்பு, சோடியம் அதிகம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உங்களால் முடியும் என்றால் வாரத்தில் ஒரு முறை உப்பில்லாத உணவுகளை சாப்பிடுங்கள்.
மது பழக்கத்தை முற்றிலும் தவிர்க்கவும்.
அதிக அளவிலான மன அழுத்தம், பதற்றம், டிப்ரஷனால பாதிக்கப்பட்டவர்களாக இருந்தால் அவர்களுக்கு கட்டுப்பாடற்ற Hypertension வருமாம், ஆக அவர்கள் எல்லாம் தினமும் கட்டாயம் தியானம், யோகா, உடற்பயிச்சி, நடைப்பயிற்சி, பாடல் கேட்பது என்று இது போன்ற விஷயங்களை செய்ய வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
உடலில் கொழுப்புகள் அதிகமாக இருக்கிறது என்பதை இதை வைத்து கண்டுபிடித்துவிடலாம்
மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |