தக்காளி காய்ச்சல் அறிகுறி | Tomato Fever Symptoms in Tamil..!

tomato fever symptoms in tamil

தக்காளி காய்ச்சல் அறிகுறி | Tomato Fever Symptoms in Tamil..!

பொதுவாக கால நிலை மாற்றத்தினாலோ அல்லது மழைக்காலம், குளிர்க்காலம் என இத்தகைய நிலை வரும் போது காய்ச்சல் ஆனது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருக்கும் அதிகமாக வரும். அதே சமயம் கொசுக்களினாலும் கூட காய்ச்சல் ஆனது அதிகமாக வரும். அந்த வகையில் டைபாய்டு, மலேரியா, சிக்கன் குன்யா, டெங்கு என இதுபோன்ற காய்ச்சல்கள் அதிகமாக வரும். இதோடு மட்டும் இல்லாமல் பிற நாடுகளில் இருந்தும் ஒருவருக்கும் ஒருவர் தொற்று போல காய்ச்சல் ஆனது பரவி வந்து கொண்டு தான் இருக்கிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் தக்காளி காய்ச்சல் என்ற ஒரு வகை காய்ச்சலும் இருக்கிறது. இந்த காய்ச்சலை பற்றி கேள்வி பட்டிருப்போர் மிகவும் குறைவு தான். ஆகவே இன்றைய அறிகுறிகள் பதிவில் தக்காளி காய்ச்சல் பற்றியும், அதனுடைய அறிகுறிகள் என்ன என்பது பற்றியும் விரிவாக காணலாம் வாங்க..!

இதையும் செய்து கிளிக் படியுங்கள் 👇
குளிர் காய்ச்சல் வருவதற்கான அறிகுறிகள் 

தக்காளி காய்ச்சல் என்றால் என்ன..?

தக்காளி காய்ச்சலும் ஒரு வகையான வைரஸ் காய்ச்சலாகவே இருக்கிறது. அதாவது இந்த காய்ச்சல் A 16 என்ற வைரஸினால் அனைவருக்கும் ஏற்படுகிறது என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாக இருக்கிறது.

அதேபோல் இந்த காய்ச்சளுக்கான பெயர் என்பது கை, பாதம், வாய் நோய் ஆகும். ஆனால் அனைவரும் இதனை தக்காளி காய்ச்சல் என்று அழைத்து வருகின்றனர்.

தக்காளி காய்ச்சல் அறிகுறிகள்:

 தக்காளி காய்ச்சல் அறிகுறிகள்

  1. காய்ச்சல்
  2. தலைவலி
  3. தொண்டை வலி
  4. தொண்டையில் புண்
  5. பசியின்மை
  6. நாக்கில் புண்
  7. உடம்பில் சிவந்தது போல் கொப்பளங்கள் வருதல்
  8. தோலில் அரிப்பு
  9. உடல் சோர்வு
  10. உடல் வலி

மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் தக்காளி காய்ச்சலும் உரிய அறிகுறிகளாக இருப்பதனால் வரும் முன் காத்து ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.

தக்காளி காய்ச்சல் வர காரணம்:

தக்காளி காய்ச்சல் எந்த மாதிரியான காரணத்தினால் வருகிறது என்பது சரியாக தெரியாமல் இருந்தாலும் கூட பூஞ்சை தொற்று உள்ள தக்காளியினை சாப்பிடுதல் மற்றும் அதனுடைய விளைச்சலுக்காக பயன்படுத்தும் மருந்துகளினால் இது வரலாம் என்றும் கூறப்படுகிறது.

கண் அழுத்த நோய் அறிகுறிகள்

மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 Symptoms in Tamil