ஆசிரியர் தினம் கட்டுரை
வணக்கம் நண்பர்களே இன்று நம் பதிவில் ஆசிரியர் தினம் பற்றிய கட்டுரை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். ஆசிரியர் தினமானது சுதந்திர இந்தியாவின் முதல் துணை குடியரசு தலைவரான டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளை நினைவு கூறும் வகையில் செப்டம்பர் 5 தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆசிரியர் பணி என்பது கல்வியை மற்றும் கற்பிப்பதோடு நல்ல பண்புகளையும், ஒழுக்கத்தையும், தன்னபிக்கை, விடாமுயற்சி, பண்பு, ஆற்றல் போன்றவற்றை அனைத்து மாணவர்களுக்கும் கற்பிக்கும் தொழிலை கொண்டவர்கள் தான் ஆசிரியர்கள் ஆவார்கள்.
Teachers Day Speech in Tamil |
டாக்டர் ராதாகிருஷ்ணன் வரலாறு:
ராதாகிருஷ்ணன் அவர்கள் 1888 ஆம் ஆண்டு செம்டம்பர் 5 தேதி வீராச்சாமிக்கும், சீதம்மாக்கும் பிறந்தவர். இவர் பிறந்த ஊர் திருத்தணிக்கு அருகே உள்ள சர்வப்பள்ளி என்னும் ஊராகும். தெலுங்கை தாய் மொழியாக கொண்ட இவர் ஏழை பிராமண சமயத்தை சார்ந்தவர் ஆவார். இவர் தொடக்க பள்ளியை திருவள்ளூரில் கௌடி என்ற பள்ளியில் படித்தார்.
உயர் நிலை கல்வியை திருப்பதியில் உள்ள லூத்தரன் மிஷன் என்னும் உயர் நிலை பள்ளியிலும், கல்லூரியை வேலூரியில் உள்ள ஊரிஸ் என்ற கல்லூரியில் படித்தார். அதன் பிறகு இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பை சென்னையில் கிறிஸ்துவ கல்லூரியில் படித்து முடித்தார். உதவித்தொகை மூலமாகவே இவருடைய கல்வி படிப்பை தொடர்ந்தார்.
டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் சென்னையில் உள்ள பிரிசிடென்சி என்ற கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றினார். மாணவர்களிடையே ஒரு சிறந்த ஆசிரியராக இருந்துருக்கிறார். இந்து மத இலக்கியத் தத்துவங்களான உபநிடதங்கள், பகவத்கீதை, பிரம்மசூத்திரா, மற்றும் சங்கரா, ராமானுஜர், மாதவர், போன்றோரின் வர்ணனைகளையும் கற்றுத்தேர்ந்துள்ளார்.
1918 ஆம் ஆண்டு மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராகத் தேர்வு செய்யப்பட்ட இவர், 1921 ஆம் ஆண்டு கல்கத்தா பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பரிந்துரைக்கப்பட்டார். அதன் பிறகு 1923 ஆம் ஆண்டு டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அற்புதப் படைப்பான “இந்திய தத்துவம்” என்ற புத்தகம் இவரால் வெளியிடப்பட்டது. இந்தப்புத்தகமானது பாரம்பரியத் தத்துவம் இலக்கியத்தின் ஒரு தலைச்சிறந்த படைப்பாகப் போற்றப்பட்டது.
டாக்டர் ராதாகிருஷ்ணன் திருமண வாழ்க்கை:
இவரின் இல்லற வாழ்க்கையானது தூரத்து உறவினரான சிவகாமு என்பவரை 16 வயதிலே திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் இருந்துருக்கிறது. இவரின் மனைவி 1956 ஆம் ஆண்டு இறந்துவிட்டார். இவருடைய திருமண வாழ்க்கை 56 ஆண்டுகளில் முடிந்துவிட்டது. 1952 ஆம் ஆண்டு இந்திய குடியரசின் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1962 முதல் 1967 வரை இந்திய குடியரசு தலைவராக பதவியேற்றார்.
ஆசிரியர் தினம் எதற்கு கொண்டபடுக்கிறது?
ஆசிரியர் தினமானது டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு கொண்டாடப்படுகிறது. இவர் ஒரு பல புகழ் பெற்ற தத்துவஞானியாகவும், அரசியல்வாதியாகவும், புகழ்பெற்ற தூதராகவும், குடியரசு துணை தலைவராகவும் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் கல்வியாளர் மற்றும் பல நல்ல குணங்களை கொண்ட மனிதராகவும் மாணவர்களுக்கிடையே பிடித்த ஒரு சிறந்த ஆசிரியராகவும் இருந்துள்ளார்.
ஒரு நாட்டின் எதிர் காலமானது குழந்தைகள் மற்றும் ஆசிரியர் கையில் தான் இருக்கிறது என்றும் சொல்லப்படுவது போல அந்தவகையில் மாணவர்களை உருவாக்கும் பொறுப்புகள் அனைத்தும் ஆசிரியர் கையில் தான் இருக்கிறது. படித்து முடித்து வேலைக்கு செல்லும் மாணவர்களின் தொழில் மற்றும் வணிகத்தில் வெற்றிபெறும் ஒவ்வொரு மாணவர்களுக்கும் ஆசியர்கள் முக்கிய பங்கு பெற்றுள்ளார்கள்.
ஒரு கல்லை ஒரு சிற்பி செதுக்குவது போல மாணவர்களையும் கொஞ்சம் கொஞ்சமாக செதுக்கி வருகிறார்கள். ஆசிரியர்கள் சாதாரண மாணவர்களை கூட தங்களின் அறிவு திறமையாலும், அனுபவங்களின் ஆற்றலாலும் மாணவர்களை மதிப்புமிக்க ஒரு கடவுளுக்கு நிகராக மாற்றுகிறார்கள். எனவே தான் செப்டம்பர் 5 தேதி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.
ஆசிரியர் தினம் வாழ்த்துக்கள் Images டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் ⇒ Download Link
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |