உணவே மருந்து கட்டுரை | Unave Marunthu Katturai Tamil

Unave Marunthu Katturai Tamil

உணவே மருந்து தமிழ் கட்டுரை | Unave Marunthu Essay in Tamil

நண்பர்களுக்கு வணக்கம் இன்றைய பதிவில் உணவே மருந்து கட்டுரை பற்றி பார்ப்போம். அப்போது வாழ்ந்த நம் முன்னோர்கள் நோய்களுக்கான மருந்தாக மூலிகைகளையும், சத்து நிறைந்த உணவுகளையும் தான் எடுத்து வந்தார்கள். இன்றைய காலத்தில் சாதாரண வலி என்றாலே உடனே மருத்துவமனைக்கு செல்லும் பழக்கத்திற்கு வந்துவிட்டோம். மாறிவரும் உணவு பழக்கத்தால் இப்போது பல நோய்களை சந்தித்து வருகிறோம். வாங்க உணவே மருந்து பற்றிய கட்டுரையை படித்து தெரிந்துக்கொள்ளலாம்..

தமிழர் பண்பாடு கலாச்சாரம் கட்டுரை

பொருளடக்கம்:

முன்னுரை 
உணவு முறைகளும் நமது ஆரோக்கியமும் 
இயற்கை உணவுகள் 
மாறிவரும் உணவு முறைகள் 
நோய் அதிகரிப்பு 
முடிவுரை 

முன்னுரை:

திருவள்ளுவர் உணவே மருந்து பற்றிய சிறப்பினை “மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்” என்ற குறள் மூலம் சிறப்பாக விளக்கியுள்ளார்.

இந்த குறளுக்கான அர்த்தம் உடலுக்கு எது பொருத்தமான உணவோ அதை தேர்ந்தெடுத்து உண்டால் நாம் நெடுநாள் எந்த நோயும் இல்லாமல் வாழலாம் என்பதை குறிப்பிட்டுள்ளார்.

மனிதர்களுடைய வாழ்வில் உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. எனவே மனிதர்களாகிய நாம் உணவிற்கு அதிக முக்கியத்துவத்தை கொடுக்க வேண்டியது அவசியம்.

Unave marunthu katturai

உணவு முறைகளும் நமது ஆரோக்கியமும்:

நம் முன்னோர்கள் சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம் என்று கூறியது போல உடலில் நல்ல ஆரோக்கியம் இருந்தால் தான் நல்வாழ்வினை வாழ முடியும்.

இந்த இயற்கையானது நமக்கு பல வளங்களை கொடுத்துள்ளது. அதில் விளைகின்ற பழ வகைகள், தானியங்கள், காய்கறிகள் போன்ற அனைத்தும் ஊட்டச்சத்து நிறைந்தவை. நல்ல வளமான நிலத்தில் வளரும் பயிர் போல ஆரோக்கியமான உணவுகளை உண்ணும் மனிதனும் வளமாக வாழ முடியும்.

இயற்கை உணவுகள்:

இயற்கையான முறையில் கிருமி நாசினிகள் தெளிக்கப்படாத தானிய வகைகள், கிழங்குகள், கீரைகள், பசும்பால் உணவுகள், பழங்கள் போன்ற இயற்கையான உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தன.

இன்றைய விவசாயத்தில் பெரும்பாலும் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய செயற்கை உரங்கள் தான் பயன்படுத்தப்படுகிறது. இதனால் கூட மனிதர்களுக்கு நோயின் தாக்கம் அதிகமாகிவிட்டது.

இயற்கை சார்ந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் உடலில் பிணி இல்லாமல் நெடுநாள் வாழ முடியும்.

இயற்கை வேளாண்மை கட்டுரை

மாறிவரும் உணவு முறைகள்:

இன்றைய சூழலில் அனைவரும் உடலுக்கு தீங்கு தரக்கூடிய ஜங்க் புட்ஸ், பாஸ்ட் புட்ஸ் போன்ற துரித உணவுகளையே பெரிதும் விரும்பி சாப்பிடுகிறார்கள்.

நமது பிரதேசங்களில் அதிகம் விற்பனையாகும் “பெப்சி, கொக்கா கோலா ” போன்ற குளிர்பானங்களை அதிகம் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.

நாகரீக வளர்ச்சியின் காரணமாக நம்முடைய இயற்கையான உணவு முறைகளும் அடியோடு மாறிவிட்டது. கொழுப்பு நிறைந்த உணவுகளை வெளியில் அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை அதிகரித்து பல நோய்களுக்கு நம்மை நாமளே ஆளாக்கிக்கொள்கிறோம். இயற்கையான உணவுகளை எடுத்துக்கொண்டு உடலை ஆரோக்கியமாய் வைத்துக்கொள்ளுவோம்.

நோய் அதிகரிப்பு:

நாம் எடுத்துக்கொள்கின்ற உணவு முறைதான் நம்முடைய நீண்ட நாள் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.

சிரிய வயதிலிருந்து உணவிற்கு மதிப்பு கொடுக்காமல் நாம் எடுத்து கொள்கின்ற ஆரோக்கியமற்ற உணவுகள் தான் இன்று அதிகளவான நோய்களுக்கு காரணமாக உள்ளது.

முடிவுரை:

மனிதன் இன்று பொருளாதார நிலை, தொழில்நுட்ப வளர்ச்சி, விஞ்ஞானம் என்று நாட்டின் வளர்ச்சியை மட்டுமே யோசிக்கிறார்களே தவிற மனிதருடைய உடல் ஆரோக்கியம் பற்றி யாரும் நினைத்து பார்ப்பதில்லை.

அதனால் நோய்கள் வந்து தாக்கிய பிறகு அதனை பற்றி கவலை கொள்வதில் எந்த பயனும் இல்லை. எனவே உணவு முறையில் நாம் எப்போதும் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இதனையெல்லாம் சரி செய்வதற்கு ஒரே வழி உண்டு என்றால் இயற்கை விவசாயத்தை மீண்டும் உருவாக்க வேண்டும்.

இது போன்று கட்டுரை சார்ந்த பதிவுகளை  விரும்புபவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்  Tamil Katturai