ஒலிம்பிக் விளையாட்டுகள் பற்றி கட்டுரை

Olympic Essay in Tamil

ஒலிம்பிக் கட்டுரை – Olympic Essay in Tamil

இன்று நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகின் முதன்மையான விளையாட்டுப் போட்டி என்றால் அது ஒலிம்பிக் தான். சர்வதேச விளையாட்டு நிகழ்வான ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது பல விளையாட்டு வீரர்களுக்கு பெரிய லட்சியம் ஆகும். அப்படி பல சர்வதேச நாடுகளை சேர்ந்த வீரர்களால் போற்றப்படும் ஒலிம்பிக் போட்டியின் தினம் ஆண்டு தோறும் ஜூன் 23-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சரி இந்த ஜூன் 23-ஆம் தேதி ஏன் ஒலிம்பிக் தினம் கொண்டாடப்படுகிறது மற்றும் ஒலிம்பிக் பற்றிய சிறப்புகளை பற்றி இந்த கட்டுரையில் நாம் படித்து தெரிந்து கொள்வோம் வாங்க.

ஒலிம்பிக் விளையாட்டு:

இந்த ஒலிம்பிக் விளையாட்டினை அனைவரிடத்திலும் கொண்டு செல்லும் நோக்கத்தில் கடந்த 1948 முதல் இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இதே நாளில் கடந்த 1894-இல் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி அமைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒலிம்பிக் சின்னம்:

இந்த ஒலிம்பிக் சின்னம் ஐந்து நிறங்களால் உருவான வளையங்கள் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்ட வண்ணம் காணப்படுகின்றது. இது நவீன ஒலிம்பிக்கின் தந்தையான பியரி டெ கூபர்டின் (Pierre De Coubertin) வடிவமைத்துள்ளார்.

இது ஆசியா, ஆபிரிக்கா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பா என உலகின் முக்கிய ஐந்து முக்கிய கண்டங்களை குறிப்பதாக அமைந்துள்ளது.

கொடி தனி வெள்ளை நிறத்தில் காணப்படுகிறது. இதற்கு நடுவில் ஐந்து வளையங்கள் இருக்கும். இதில் இருக்கும் நீலம், மஞ்சள், கருப்பு, பச்சை, சிவப்பு, வெள்ளை இந்த 6 நிறங்களில் உள்ள ஏதேனும் ஒரு நிறம் உலகில் உள்ள அனைத்து நாடுகளின் தேசியக் கொடியிலும் காணப்படுகிறது என்று சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன.

ஆனால் முதல் ஒலிம்பிக்கில் பங்கேற்ற உலக நாடுகளின் கொடியில் இருந்த பொதுவான நிறங்களை வைத்து அந்த வளையங்களுக்கு நிறம் தேர்வு செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது.

இதில் அந்த வளையங்கள் ஒன்றோடு ஒன்று பிணைக்கப்பட்டிருக்கின்றமைக்கான காரணம், இந்த ஒலிம்பிக் போட்டியின் அடிப்படை நோக்கம் மக்களுக்கு இடையில் விளையாட்டு மூலமாக நட்புறவை ஏற்படுத்துவதுதான்.

ஒலிம்பிக் வரலாறு:

பழங்காலத்தில் கிரீஸ் நாட்டு மக்கள் ஒலிம்பிக் போட்டியை ஒரு விளையாட்டு திருவிழாவாக கருதி கொண்டாடியுள்ளனர். அந்த நாட்டில் அமைந்துள்ள ஒலிம்பியாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த போட்டி ஆரம்ப காலங்களில் நடத்தப்பட்டுள்ளன.

பெரும்பாலும் தடகள விளையாட்டுகளை முன்வைத்து ஆதிகால ஒலிம்பிக் நடத்தப்பட்டுள்ளது. அதோடு மல்யுத்தம் மாதிரியான விளையாட்டுகளும் நடைபெற்று உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் விளையாட்டை வழிபட்டனர்.

இவ்வாறு தூவப்பட்ட விதை இன்று விருட்சமாக ‘மாடர்ன் டே’ ஒலிம்பிக் விளையாட்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. அண்மைய காலமாக சுமார் 200-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.

1896-இல் கிரீஸ் நாட்டின் ஏதன்ஸில் மாடர்ன் டே ஒலிம்பிக்கின் முதலாவது ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. இதனை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒருங்கிணைத்தது. இது வரை 31 முறை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றுள்ளன.

ஒலிம்பிக் சுடர்:

ஒலிம்பிக் போட்டியின் இன்னோர் முக்கியமான நிகழ்வு ஒலிம்பிக் சுடர். கிரேக்கர்களால் ஒலிம்பிக் தோற்றம் பெற்ற இடமான ஒலிம்பியாவில், ஆரம்பகாலத்தில் சூரிய கதிர்கள் மூலமாக ஒலிம்பிக் சுடர் ஏற்றினார்கள். இன்று வரை தொடர்ச்சியாக ஒரு மரபாகவே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

நோக்கம்:

ஒலிம்பிக்கின் முக்கிய நோக்கம் அல்லது லட்சியமாக பார்க்கப்படுவது, போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்பது அல்ல, பங்கேற்பவர்கள் சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதே நோக்கமாகும்.

நவீன ஒலிம்பிக் நடைபெற்ற இடங்கள்:

1896 இல் கிரேக்கத்தின் நாட்டில் ஆரம்பமாகி தொடர்ந்து ஒவ்வொரு நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற்றது. 2016 இல் பிரேஸிலின் ஜெனிரோ நகரிலும், இறுதியாக, 2020 இல் ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது.

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai