காடுகளின் பயன்கள் கட்டுரை | Uses of Forest in Tamil | Kaadu Payangal Katturai in Tamil

Kaadugal Payangal in Tamil

காடுகளின் பயன்கள் | Kaadugal Payangal in Tamil

காடுகளின் பயன்கள் கட்டுரை: நண்பர்கள் அனைவருக்கும் கனிவான வணக்கம் இந்த பதிவில் காடுகளின் பயன்கள் குறித்து கட்டுரை பார்ப்போம். காடுகள் என்றாலே நம் நினைவிற்கு முதலில் வருவது அடர்ந்த மரங்கள், பசுமை நிறைந்த புல்வெளிகள், மிருகங்கள், பூத்து குலுங்கும் மலர்கள் இவையெல்லாம் தான் மனதில் வரும். இப்போதெல்லாம் இயற்கை வளமான காடு, மரம், வயல் நிலங்கள் போன்றவை அழிந்துகொண்டே வருகிறது. காடுகள் இல்லாமல் மனிதர்களுக்கு எந்த ஒரு நன்மைகளும் கிடைக்காது. இத்தகைய சிறப்புமிக்க காடுகளின் பயன்கள் குறித்து ஒரு கட்டுரை (kaadu katturai in tamil) தொகுப்பு பார்க்கலாம் வாங்க..!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

குறிப்பு சட்டகம்:

முன்னுரை 
காடுகளை பாதுகாத்தல் வேண்டும் 
காடுகளின் பயன்கள் 
காடுகளின் தொழிற்பாடு 
முடிவுரை

முன்னுரை:

மனிதர்களுக்கு காடுகளானது அனைத்து விதத்திலும் மிகவும் பயனுள்ளதாக தான் உள்ளது. காட்டில் இருக்கின்ற மரத்திலிருந்து காகிதம், வீடு கட்டுவதற்கு பெரும்பாலும் மரங்கள் பயன்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் காடுகளிலிருந்து நமக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்துக்கொண்டுதான் இருக்கிறது. சிலர் காடுகளின் நன்மைகளை அறியாமல் காடுகளை அழித்துக்கொண்டு இருக்கிறார்கள். காடுகளின் நன்மை குறித்து கீழே விரிவாக படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க.

காடுகளை பாதுகாத்தல் வேண்டும்:

காடுகள் தான் நீர் வளங்களை பாதுகாத்து கொள்கிறது. மலைகளிலுள்ள அடர்ந்த காடுகளில் மழை பெய்யும் போது, மரங்களின் இலைகளால் அதன் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு நீர் வீழுவதால் அங்குள்ள வளமான மண் கரைந்து போவதில்லை. காடுகளில் பனி பெய்யும் போது பனியானது மெதுவாகத்தான் உருகும். காடுகளின் பயனை உணர்ந்த மேல் நாட்டு மக்கள் இனி மேலும் காடுகளை அழித்தால் மரத்தினால் ஆன மரப்பொருட்கள், காகிதம், கட்டுமான பொருட்கள் போன்வற்றை தயாரிக்க மரங்கள் கிடைக்காது என்ற காரணத்தினால் நன்கு வளர்ந்த வந்த மரங்களை வெட்டக்கூடாது என்று முடிவு எடுத்தார்கள். அவசர தேவைக்கு மரத்தை வெட்டினாலும் கூட வெட்டியமரத்திற்கு பதிலாக இன்னொரு செடிகளை வளர்க்கிறார்கள்.

காடுகளின் பயன்கள் (kadukalin payangal):

காடுகளை பூமியின் நுரையீரல் என்று மக்கள் சிறப்பித்து அழைக்கிறார்கள். காடுகளானது நாம் சுவாசிப்பதற்கு சுத்தமான காற்றை கொடுக்கிறது, நாம் அருந்துவதற்கு சுத்தமான நீர், உண்பதற்கு காய்கறிகள், கிழங்கு வகைகள், மருந்து தயாரிக்க சில மூலிகைகள், வாழ்வதற்கு வீட்டினை உருவாக்கம் செய்து தருவதற்கு என பல்வேறு வகையிலும் காடுகள் நமக்கு பயன்தரக்கூடியதாக இருக்கிறது.

மரம் வளர்ப்போம் கட்டுரை

காடுகளின் தொழிற்பாடு | காடுகளில் கிடைக்கும் பயன்கள்:

காடுகள் இயற்கையாகவே உருவாகும் தன்மை கொண்டது. காடுகளில் உயிர் வாழ்கின்ற பறவை இனங்கள் தாவரங்களில் உள்ள பழத்தினை சாப்பிட்டு அவற்றின் விதைகளை எச்சமாக போடுவதனாலும் வெடித்து காற்றிலும் பரவி காடுகள் இயற்கையாகவே தம்மை பாதுகாத்து கொள்கின்றன. காடுகளை நம்பியே 2 பில்லியன் மக்கள் அவர்களது வாழ்வாதாரத்தை மேற்கொண்டு வருகிறார்கள். உதாரணத்திற்கு பூமிக்கு தேவையான 20% ஆக்சிஜனை அமேசான் காடுகள் உற்பத்தி செய்கின்றன. அண்மைக் காலங்களாக வளிமண்டலத்தில் பச்சைவீட்டு வாயுக்களின் சதவீதம் அதிகரித்து வர காரணம் காடுகள் அழிவதே ஆகும்.

முடிவுரை:

காடுகளை அழிப்பதற்கு மக்கள் முக்கியத்துவம் கொடுக்காமல் காட்டின் வளத்தை பாதுகாக்க முயற்சிக்க வேண்டும். நாட்டினுடைய நலனிற்காக தென்னை, பனை போன்ற மரங்களை அதிகமாக வளர்த்து வரலாம். இப்போதெல்லாம் சில பல்கலைக்கழகங்களில் காடுகளைப்பற்றியும் அதன் பலன்களைப்பற்றியும் விழிப்புணர்வு பாடங்களை மக்கள் மத்தியில் எடுத்து வருகின்றனர். காடுகளை பாதுகாக்கும் விதமாக சர்வதேச காடுகள் தினம் மார்ச் 21 அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த தலைமுறையினர் பாதுகாப்பாக வாழ காடுகளை அழிக்காமல் பாதுகாப்போம்..!

இது போன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today Useful Information in Tamil