மகாத்மா காந்தி பற்றிய கட்டுரை தமிழ் | Gandhi Adigal Patri Katturai in Tamil
வணக்கம் நண்பர்களே.! இன்றைய பதிவில் மகாத்மா காந்தியை பற்றி கட்டுரை காண்போம். மகாத்மா காந்தி’ என்று அன்புடன் அழைக்கப்படும் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி இந்திய விடுதலைப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். நம்மை எதிர்ப்பவர்களை சண்டையிட்டு வெல்லாமல் அகிம்சையின் மூலமும் வெல்லலாம் என்பதனை நிரூபித்து காட்டியவர் காந்தி. இவர் பீகாரில் சத்தியகிரகம் எனும் முறையை வெற்றிகரமாக நடத்தினார். இந்திய அரசியல் மட்டுமன்றி உலக மக்களுக்கும் உதாரணமான தலைவராக மகாத்மா காந்தி தன் வாழ்வில் சத்தியம், நேர்மை, அகிம்சை ஆகிய கொள்கைகளை கடைப்பிடித்து வாழ்ந்து காட்டிய மகான் ஆவார். இவரை பற்றி கட்டுரை வடிவில் தெரிந்துகொள்வோம்.
சுதந்திர தினம் பேச்சு போட்டி கட்டுரை
மகாத்மா காந்தி வரலாறு கட்டுரை:
முன்னுரை:
சுதந்திர இந்தியாவின் தேசப்பிதா என்று அழைக்கப்படுபவர் மகாத்மா காந்தி. இவரது முழுப்பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி. 2 அக்டோபர் 1869 அன்று இந்திய நாட்டின் குஜராத் மாநிலத்திலுள்ள போர்பந்தர் எனும் ஊரில் பிறந்தார். இவரின் தாய்மொழி குஜராத்தி மொழி. மகாத்மா காந்தியின் தந்தையின் பெயர் கரம்சந்த் உத்தம்சந்த் காந்தி, தாயார் பெயர் புத்லிபாய் ஆகும். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதேயான கஸ்தூரிபாயை மணந்தார். காந்தி சிறு வயதில் பார்த்த அரிச்சந்திரா நாடகம் இவர் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. காந்தி தனது 16 ஆம் வயதில் தந்தையை இழந்தார். காந்திக்கு 4 ஆண் குழந்தைகள் பிறந்தது. தனது குடும்ப வாழ்க்கையோடு நிறுத்திவிடாமல் சமூகத்தின் மீது பற்று உடையவராக வாழ்ந்தார்.
காந்தியின் பள்ளி வாழ்க்கை:
- காந்தி படிப்பில் சுமாராக மாணவனாக இருந்தாலும் நேர்மையான மாணவனாக இருந்தார். காந்தி தனது 18 ஆம் வயதில் பாரிஸ்டர் எனப்படும் வழக்கறிஞர் படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். வழக்கறிஞர் படிப்பை முடித்து சிறிது காலம் வழக்கறிஞராக மும்பையில் பணியாற்றினார்.
- குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நீதிமன்றத்திற்கு வருபவர்களின் விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் பணியை செய்தார். 1893 -ல் ஒரு இந்திய நிறுவனத்தின் உதவியால் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிய பயணத்தை தொடங்கினார்.
- தென்னாப்பிரிக்காவில் ஆங்கிலேயர் ஆட்சியில் நிறவெறியும், இனப்பாகுபாடும் அதிகமாக இருந்தது. இது காந்தியின் மனதை காயப்படுத்தியது. தென்னாப்பிரிக்காவில் காந்திக்கு ஏற்பட்ட அனுபவங்கள் அவரை மிக பெரிய அரசியல் சக்தியாக மாற்றியது.
காந்தி பணிகள் தமிழ்:
- காந்தி அவர்கள் தென்னாபிரிக்காவின் பிரிட்டோரியா ரயிலில் ஏறிய காந்தி அவர் வெள்ளையர் இல்லை என்பதற்காக தூக்கி வீசபட்டார். அந்த ரயில் நிலையத்தில் காந்தியின் சிலை வைக்கப்பட்டுள்ளது. தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடி பெயர்ந்த இந்திய மக்களும் படும் பிரச்சனைகளை உணர்ந்தார். அதனால் தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களின் வாக்குரிமையை நிறுத்தும் தீர்மானத்தை எதிர்த்தார்.
- 1894 -ல் தென்னாப்பிரிக்காவில் நாட்டல் இந்திய காங்கிரஸ் எனும் கட்சியை ஆரம்பித்தார். அதில் அவரே தலைமையாக வகித்தார்.
- அறவழி போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்காவில் வாழும் இந்தியர்களின் சமூக நிலையை உயர்த்தி அவரது முயற்சியில் வெற்றியை கண்டார்.
சுதந்திர போராட்டத்தில் வீரர் காந்தியின் பங்கு:
- இந்தியாவில் தனது மக்கள் அடிமைப்படுவதை கண்டு கவலை அடைந்தார். இதனால் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்து ஆங்கிலேயருக்கு எதிரான விடுதலை போராட்டத்தில் முழுமையாக ஈடுபட்டார்.
- 1924 -ல் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக பொறுப்பேற்றார். காங்கிரஸில் பல மாற்றங்களை காந்தி ஏற்படுத்தினார். இவர் முதலில் விவசாயிகளுக்கான சம்பாரண் போராட்டத்தை தொடங்கினார். 1930 -ல் 240 மைல் நடைபயணம் இந்திய வரலாற்றில் உப்பு சத்தியாகிரகம் என்று சொல்லப்படுகிறது.
- 1942 -ல் ஆங்கிலேயர்களுக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் காந்தி பெரும் பங்களிப்பு ஆற்றினார். 1947 -ல் இந்தியா சுதந்திரம் அடைய முக்கியமான ஒருவராக காந்தி இருந்தார்.
- காந்திக்கு இரவீந்திரநாத் தாகூர் மகாத்மா என்ற பட்டத்தை வழங்கினார்.
முடிவுரை:
குஜராத் மொழியில் எழுதி தமிழ் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டவை சுயசரிதை சத்தியசோதனை நூல்கள் ஆகும். காந்தியை பெருமைப்படுத்தும் வகையில் இந்தியாவில் பல இடங்களில் சிலைகளும் அருங்காட்சியகங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இந்திய கல்வி திட்டத்தில் காந்தியின் வரலாறு ஒரு பாடமாகவும் கற்பிக்கபடுகிறது
இதுபோன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க → | Tamil Katturai |