வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

நமது தேசியக் கொடி கட்டுரை

Updated On: July 27, 2023 12:22 PM
Follow Us:
Desiya Kodi Katturai in Tamil
---Advertisement---
Advertisement

தேசியக் கொடி பற்றிய தகவல் – Desiya Kodi Katturai in Tamil

இந்திய தேசிய கொடி என்பது இந்திய நாட்டின் தேசபக்தி மற்றும் சுதந்திரத்தின் சின்னமாகும். நமது இந்திய தேசிய கொடி ஆங்கிலேயர்களிடம் இருந்து. விடுதலை பெறுவதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஜூலை 22-ஆம் தேதி 1947-ஆம் ஆண்டு தற்போதைய வடிவில் ஏற்கப்பட்டது. நமது தேசிய கொடி பச்சை, வெள்ளை, காவி ஆகிய மூன்று வணக்களை கொண்டதால் மூவர்ண கொடி என்று அழைக்கப்படுகிறது. காந்தியின் ஆலோசனைப்படி, தீவிர விடுதலை போராட்ட வீரரான பிங்கலி வெங்கைய்யா அவர்கள் தான் நமது இந்திய தேசிய கொடியை வடிவமைத்தார். சரி இந்த பதிவில் நமது தேசிய கொடி பற்றி கட்டுரை வடிவில் பார்க்கலாம் வாங்க.

நமது தேசியக் கொடி கட்டுரை..! – Desiya Kodi Katturai in Tamil

முன்னுரை:

உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கென்று தனி தனி தேசிய கொடி கட்டாயம் இருக்கும். அத்தகைய கொடி அந்த நாட்டின் சின்னமாகும். அந்த வகையில் நமது இந்திய நாட்டின் சின்னமாக அழைக்கப்படுவது மூவர்ண கொடி ஆகும். சுதந்திர இந்தியாவின் அடையாளமாகவும் சுதந்திரப் போராட்ட வீரர்களின் உயிர் மூச்சாகவும் தேசியக்கொடி கருதப்படுகின்றது. இந்த தேசியக் கொடியானது நாட்டின் மதிப்பு மிக்க சின்னமாகவும், கௌரவமாகவும் பார்க்கப்படுகின்றது. இத்தகைய தேசிய கொடி பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

தேசியக் கொடி உருவான வரலாறு:

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இந்திய நாட்டில் வெள்ளையர்களுக்கு எதிரான போராட்டமான சுதந்திரப் போராட்டம் தீவிரமாக இருந்தது. இக்காலப்பகுதியில் வெள்ளையர்கள் வேறு, இந்தியர்கள் வேறு என்று கோடிட்டு காட்டுவதற்கு ஒரு கொடி இந்தியர்களுக்கு தேவைப்பட்டது.

அந்த சமையம் சுவாமி விவேகானந்தரின் சீடரான நிவேதிதா ஒரு கொடியை உருவாக்க முன்வந்தார். 1906-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி அன்று வங்கப் பிரிவினையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் மூவர்ணக் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.

அதன் பின்னர் மூவர்ணக் கொடியில் காவி, பச்சை நிறங்களோடு மத்தியில் வெள்ளைக்கு பதிலாக மஞ்சள் நிறமுள்ள கல்கத்தா கொடி அறிமுகம் செய்யப்பட்டதால் இதற்கு எதிர்ப்பு எழுந்தது.

பிங்காலி வெங்கையா:

அதன் பின்னர் 1916-ஆம் ஆண்டு பிங்கலி வெங்கையா எல்லோருக்கும் பொதுவான ஒரு கொடியை உருவாக்கினார். அதில் காவி, வெள்ளை, பச்சை ஆகிய வண்ணங்களைக் கொண்டதாகவும் நடுவில் ராட்டை சக்கரம் உள்ள கொடியாகவும் தயாரிக்கப்பட்டது.

இதற்குப் போட்டியாக சுபாஷ் சந்திரபோஸ் அவர்கள் தனது தேசியப் படைக்கு ராட்டைச் சக்கரத்திற்கு பதிலாக பாயும்புலி சின்னத்துடன் கொடியை உருவாக்கினார் இதற்கு பெரும் எதிர்ப்பு உருவானது. இதன் பின்னர் 1950 ஜனவரி 26-ஆம் திகதி பிங்காலி வெங்கையா காந்தியின் ஆலோசனைப்படி கொடியை உருவாக்கினார். இக்கொடியே நம் இந்திய தேசியக் கொடியாக உள்ளது.

தேசிய கொடியின் விதிமுறைகள்:

தேசியக்கொடி செவ்வக வடிவில் நீளம்-அகலம் 3:2 எனும் விகிதத்தில் மேற்புறம் காவி வண்ணம் நடுவில் வெண்மை கீழே பச்சை வெண்மையின் நடுவில் நீலநிறத்தில் 24 ஆரங்கள் கொண்ட அசோகச் சக்கரம் இருக்க வேண்டும். தேசியக்கொடி கதர் மற்றும் பட்டுத் துணிகளால் செய்யப்பட்டதாக இருக்க வேண்டும். எந்த பொருளையும் மூடிவைக்கும் அலங்காரப் பொருளாகத் தேசியக்கொடி இருக்கக்கூடாது. அலங்காரப் பொருளாகத் தேசியக் கொடியை பயன்படுத்த கூடாது.

தேசிய கொடியின் வடிவம்:

இந்தியத் தேசியக் கொடியானது நீள்வாக்கில் மூன்று வண்ணங்களை உடையது. மேல்பக்கம் காவி வண்ணமும் இடையில் வெள்ளை வண்ணமும் அடியில் பச்சை வண்ணமும் சம அளவில் இருக்க வேண்டும். நீளம் மூன்று பங்கு அகலம் இரண்டு பங்கு என்ற விகித அளவில் கொடியின் அளவு அமையும். கொடியின் நடுவில் சக்கரம் கடல் நீல வண்ணத்தில் இருக்கும். அசோக மன்னரின் தலைநகரான சாரநாத்தில் அமைந்திருக்கும் சிங்கத்தின் மணிச் சட்டத்தில் இவ் தர்மச் சக்கரம் அமைந்திருக்கின்றது.

தேசியக் கொடியின் சிறப்புக்கள்:

இந்தியத் தேசியக் கொடியிலுள்ள அசோகச் சக்கரமானது தர்மம் காக்கப்பட வேண்டும் என்ற வகையில் அமைந்துள்ளது. நாம் சுதந்திரக் காற்றைச் சுவாசிப்பதற்குக் காரணம் ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடிய நமது சுதந்திர் போராட்ட வீரர்களின் தியாகமேயாகும். இவ்வாறு போராடிப் பெற்ற சுதந்திரத்தின் அடையாளமே தேசியக் கொடியாகும்.

முடிவுரை:

நம் நாட்டின் அடையாளச் சின்னமாகவும்⸴ மரியாதைக்கும்⸴ போற்றுதலுக்கும் உரியதுமாகத் தேசியக்கொடி விளங்குகின்றது. எனவே அனைவராலும் இந்திய தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தப்பட வேண்டும். நம் நாட்டின் சுதந்திரத்திற்காக அயராது பாடுபட்டு உயிர்த் தியாகம் செய்த தியாகிகளையும்⸴ நம் தேசத்தையும்⸴ தேசிய கொடியையும் காப்போம்.

இது போன்று கட்டுரை பற்றிய பதிவுகளை பார்க்க Tamil Katturai
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now