பெண் கல்வி பற்றிய கட்டுரை | Pen Kalvi Katturai in Tamil Language

Advertisement

பெண் கல்வி கட்டுரை | Pen Kalvi Katturai in Tamil 

வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். இப்பதிவில் பெண் கல்வி பற்றிய கட்டுரையை தொகுத்து பின்வருமாறு வழங்கியுள்ளோம். பெண்களுக்கு கல்வி என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். பெண்களின் கல்வி பற்றி பலரும் கூறி வந்த நிலையில், இக்காலத்தில் பெண்கள் கல்வி கற்று அவர்களின் வாழ்க்கையில் முன்னேறி வருகிறார்கள்.

பெண் என்ற தாய்மையில் தான் உலகில் அனைத்து உயிர்களும் தோன்றுகின்றன. “பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற வாசகத்திற்கு ஏற்ப நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியலும், பொருளாதாரமும் எந்த அளவிற்கு முக்கியமோ அதே அளவிற்கு ஒரு நல்ல சமுதாயம் உருவாவதற்கு பெண்களின் பங்கு இன்றியமையாதது. அப்படிப்பட்ட பெண்களுக்கு கல்வியை கொடுப்பதால் என்னென்னெ நன்மைகள் கிடைக்கின்றன என்பதை இன்றைய கட்டுரை பதிவில் பார்க்கலாம் வாங்க.

பெண் கல்வி முக்கியத்துவம் கட்டுரை:

 பெண் கல்வி முக்கியத்துவம் கட்டுரை

குறிப்பு சட்டகம்:

முன்னுரை
பெண் புலவர்களின் சிறப்பு
பெண் கல்விக்காக பாடுபட்டவர்
பெண் கல்வியின் பயன்கள்
முடிவுரை

முன்னுரை:

  • ஒரு பெண் சமுகத்தில் தன் பெற்றோருக்கு நல்ல மகளாகவும், உடன் பிறந்தவர்களுக்கு சகோதரியாகவும், கணவனுக்கு மனைவியாகவும், குழந்தைக்கு நல்ல தாயாகவும் விளங்குகிறாள்.
  • ஒரு ஆணிற்கு கிடைக்கும் கல்வி அவன் ஒருவருக்கு மட்டுமே பயன்படும். ஆனால் ஒரு பெண் பெரும் கல்வி அவளுக்கு மட்டும் இன்றி அவளை சுற்றி உள்ளவர்களுக்கும், அவளின் சந்ததினரையும், குடும்பத்தையும் போய் சேர்கிறது.

பாரதியார் பெண் கவிதைகள்..!

பெண் புலவர்களின் சிறப்பு:

  • பழங்காலத்தில் இந்த பூமியை ஆளும் அரசர்களையும், கவிதைகள் கூறும் புலவர்களை மட்டுமே சிறப்பாக கூறி புகழ்ந்து வந்தனர். ஆனால் இந்த பூமியில் நல்லதை எடுத்து கூறிய புலவர்களில் ஒளவையார், வெண்னிகுயத்தியார், காவற்பெண்டு, நற்பசலையார், பொன்முடியார் போன்ற பெண்பார் புலவர்களும் உள்ளனர்.

பெண் கல்விக்காக பாடுபட்டவர்:

  • பெண்களின் வளர்ச்சியை பற்றி அறியாத சில மூடர்கள் அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு, பெண் புத்தி பின் புத்தி என்ற கேள்வியையும் கூறி வந்தனர்.
  • பெண்களை இந்த நிலையிலிருந்து மாற்றி அமைக்கவே பல போராட்ட வீரர்களான மகாகவி பாரதி, கல்விக்கு கண் திறந்த கர்மவீரர் காமராசர் போன்ற பல தலைவர்களால் பெண்களுக்கு கல்வி திட்டமானது கிடைக்கப்பட்டது. பெண் கல்வி முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதற்காக

“பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்”

என்ற பாடலை பாரதியார் இயற்றினார்.

கல்வி இல்லாத பெண்கள் களர் நிலம்
அந்நிலத்தில் புல் விளைந்திடலாம் ! நல்ல
புதல்வர்கள் விளைதல் இல்லை !’

என்று பாரதிதாசன் தனது பாடல் மூலம் கூறுகிறார்.

கல்வியின் சிறப்பு கட்டுரை

பெண் கல்வியின் பயன்கள்:

  • பெண்கள் கல்வி பெற்றதால் இன்றைய உலகில் உள்ள அனைத்து துறைகளிலும் பெண்கள் கால் தடம் பதித்துள்ளனர். விளையாட்டு துறையில் பி.வி.சிந்து, விண்வெளி ஆராய்ச்சி துறையில் கல்பனா சாவ்லா போன்றவர்கள் உள்ளனர்.
  • ஜான்சி ராணி, அகல்யாபாய், இந்திரா காந்தி, ஜெயலலிதா போன்ற பெண் தலைவர்கள் இந்த நாட்டை ஆட்சி செய்து வந்துள்ளனர். ஆண்களுக்கு நிகராக பெண்களும் அனைத்து துறைகளிலும் சாதனை படைத்து வருகின்றனர்.
  • முன்பெல்லாம் ஆண்கள் மட்டுமே வருவாய் ஈட்டி வந்து கொண்டிருந்தனர் இப்பொழுது பெண்களுக்கு கல்வியறிவு கிட்டியதால் பெண்களும் ஆண்களுக்கு சமமாக வருமானம் ஈட்டுகின்றனர். இதனால் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி பெற்றுள்ளது.

முடிவுரை:

  • வளர்ந்த நாடுகள் பல பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தேவைகள், சுதந்திரம், பாதுகாப்பு என பெண்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
  • நாடு மற்றும் வீட்டின் முன்னேற்றத்திற்கும் பெண்கள் கல்வி அறிவு பெற வேண்டும். பெண்களை தெய்வமாக வழிபடும் நாம் கல்வி அறிவு பெறவும் செய்வோம். பெண்கள் இந்த சமுதாயத்தின் விதைகள் நன்றாக இருந்தால், செடி கண்டிப்பாக வளர்ந்து கனிகளை தரும்.

வீட்டை அழகாக்கும் பெண்களுக்கு! உலகை அழகாக்க! பெண் கல்வியை வளர்ப்போம்!

கல்வியில் சிறந்த பெண்கள் பெயர்கள்

 

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement