மாட்டு பொங்கல் கட்டுரை | Mattu Pongal Katturai in Tamil

Advertisement

ஜல்லிக்கட்டு பற்றிய கட்டுரை | Jallikattu Katturai in Tamil

உழவு தொழிலுக்கு உதவிகரமாக இருந்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடும் விழாதான் மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. மாட்டு பொங்கலானது தை திருநாளான பொங்கல் திருநாளிற்கு மறுநாள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மாட்டு பொங்கல் கிராமப்புறங்களில் மிக கோலாகலமாக பல நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த மாடு பொங்கலை பட்டி பொங்கல் என்றும் சிறப்புப் பெயருடன் கிராமங்களில் அழைத்து வருகிறார்கள். பள்ளியில் பொங்கல் வந்து விட்டாலே கட்டுரை போட்டி வைப்பார்கள். அவர்களுக்கு உதவும் வகையில் இந்த பதிவில் மாட்டு பொங்கல் பற்றிய கட்டுரையை (Mattu Pongal Katturai in Tamil) காண்போம் வாங்க..

மாட்டு பொங்கல் வைக்க நல்ல நேரம் 2025

பொருளடக்கம்:

முன்னுரை 
பட்டி பொங்கல் 
மாட்டு பொங்கல் விழாவின் சிறப்பு 
வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு 
மாடுகளுக்கு உணவளித்தல் 
நீர் தெளித்து வணங்குதல் 
முடிவுரை 

முன்னுரை:

வருடம் முழுவதும் நம்முடைய உழவு தொழிலுக்கு உறுதுணையாக இருந்த மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் நாள்தான் இந்த மாட்டு பொங்கல் கொண்டாடப்படுகிறது. இன்றைய சிறப்பு நாளில் மாடுகளை குளிப்பாட்டி, மாடுகளுக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் வைத்து, கழுத்தில் சலங்கை மணி கட்டி, மாலை அணிவித்து அலங்கரிப்பார்கள். இது மட்டுமல்லாமல் மாடுகளின்மீது பல வண்ண போர்வைகளை விரித்து விடுவர்கள். மாட்டின் கொம்புகளுக்கு வண்ணம் தீட்டி சிறிய உலோகத்தால் ஆன தொப்பிகளை செய்து அலங்காரம் செய்வார்கள்.

பட்டி பொங்கல்:

பொங்கலிற்கு அடுத்த நாள் வருவது மாட்டுப்பொங்கல். மாட்டு பொங்கல் காலம் காலமாக நம் விவசாய தமிழர்களிடம் இருந்து வரகூடிய பண்டிகையாகும். இந்த பொங்கலை பட்டி பொங்கல் என்றும் கூறுவதுண்டு. உழவுக்கும், வண்டி இழுக்கவும், சூடு மிதிக்கவும், நீர் இறைக்கும் சூத்திரத்தைச் சுற்றுவதற்கும் இன்னும் பல தேவைகளுக்கு எருது மாடுகளும், பால், சாணம், இனப்பெருக்கத்திற்கு பசு மாடுகளும் பல வகையில் உழவனுக்கு உதவியாக இருக்கின்றன.

மாட்டு பொங்கல் விழாவின் சிறப்பு:

கால்நடைகளுக்கு உகந்த நாள் இந்த மாட்டு பொங்கல். மாட்டு என்ற தமிழ் வார்த்தை காளையையும், பொங்கல் என்ற வார்த்தை வளமையையும் குறிக்கிறது. மாட்டு பொங்கல் விழா அன்று மஞ்சுவிரட்டு, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு நடைபெறும்.

வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு:

பெரும்பாலான கிராம இடங்களில் மாட்டு பொங்கல் அன்று மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிகள், தமிழர்களின் அடையாளமாக இருக்கும் ஜல்லிக்கட்டு நடக்கும். இந்த விளையாட்டுகளில் பெரும்பாலோனோர் அந்தந்த கிராமங்களில் வசிக்கும் நபர்கள் கலந்துகொண்டு விழாவினை நடத்துவார்கள். ஜல்லிக்கட்டானது வாடி வாசலில் இருந்து பயிற்சி பெற்ற காளை மாடுகள் சீறிக்கொண்டு வரும். அப்போது கிராமத்து இளைஞர்கள் மாட்டினை அடக்கி அதன் கொம்புகளில் இருக்கும் பணத்தை எடுப்பர். இந்த விழாவானது மாட்டு பொங்கல் அன்று மாலை நேரத்தில் நடைபெறும். சில ஊர்களில் காணும் பொங்கல் அன்று நடைபெறுவது வழக்கம்.

மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்

மாடுகளுக்கு உணவளித்தல்:

மாட்டு பொங்கல் அன்று மாட்டிற்கு உணவளிக்கும் விதமாக சர்க்கரை பொங்கல் வைப்பார்கள். அரிசி, பாசிப்பருப்பு, காய்ந்த பழங்கள் மற்றும் வெல்லம் கலந்த இனிப்பான பொங்கலை வைத்து மாடுகளுக்கு படைப்பார்கள். வைத்த பொங்கலை முதலில் மாடுகளுக்கு ஊட்டி மகிழ்வார்கள். அதன் பிறகு மற்றவர்களுக்கும் கொடுப்பார்கள். இந்த பொங்கலை கால்நடை பிரசாதம் அல்லது மாட்டு பிரசாதம் என்று சொல்வார்கள்.

நீர் தெளித்து வணங்குதல்:

காளை மாடுகள் மற்றும் வீட்டில் வளர்க்கக்கூடிய மாடுகளை குளிப்பாட்டி அலங்கரித்த பிறகு குங்குமம், மஞ்சள் மற்றும் மாவிலை கலந்த தண்ணீரை மாடுகளின் மீது தெளித்து விடுவார்கள். மாடுகளுக்கு எந்த தீங்கும் ஏற்படாதவாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்வார்கள். குறிப்பாக தங்களது கால்நடைகள் பெருக வேண்டும் என்று பகவான் கிருஷ்ணா் மற்றும் இந்திரன் போன்ற தெய்வங்களை வழிபாடு செய்வார்கள். அதன்பிறகு  கால்நடைகளின் முன்நெற்றி மற்றும் கால்களைத் தொட்டு கால்நடைகளை வழிபடுவா். இறுதியாக அவற்றிற்கு ஆராத்தி எடுப்பா்.

முடிவுரை:

மாட்டு பொங்கல் அன்று அனைவரும் சாதி மதம் போன்றவைகளை மறந்து ஒன்றுகூடி புதிய ஆண்டினை வரவேற்று கொண்டாடுவார்கள். மாட்டு பொங்கலாந்து தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலத்திலும் கொண்டாடப்படுகிறது. இந்த வருடம் மாட்டு பொங்கல் விழாவானது ஜனவரி மாதம் 15-ம் நாள் சனிக்கிழமை அன்று கொண்டாடப்படவிருக்கிறது. பொதுநலம்.காம் பதிவின் அனைவருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்..

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement