பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

Advertisement

10 Lines About Bharathiyar in Tamil | பாரதியார் பற்றிய 10 வரிகள் | Few Points About Bharathiyar in Tamil

சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரைப் பாரதியார் என்றும் மகாகவி என்றும் அழைக்கின்றனர். பாரதி, தமிழ்க் கவிதையிலும் உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு, நவீன தமிழ்க் கவிதைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தார்

“இனி ஒரு விதி செய்வோம்” என பாடிய மகாகவி பாரதியார் பற்றிய சிறப்புகள் சிலவற்றை இந்த பதிவில் பார்ப்போம். பாரதி எனும் புரட்சி கவிஞன் தமிழையும் மக்களையும் அன்போடு நேசித்த பெரும் காதலன். அவர் கொண்ட தமிழ் பற்று அளவிட முடியாதது. இந்த பாரதியார் பற்றிய குறிப்புகள் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

பாரதியார் பற்றிய 10 வரிகள்:

  • மகாகவி சுப்பிரமணிய பாரதியார் ஒரு தமிழ் கவிஞர், சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் பெண் விடுதலைக்காக போராடியவர் ஆவார்.
  • பாரதியார் அவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள எட்டயபுரத்தில் டிசம்பர் 11.12.1882-ஆம் ஆண்டு பிறந்தார்.
  • இவரது தந்தை பெயர் சின்னசாமி ஐயர், தாயார் பெயர் இலட்சுமி அம்மாள் ஆவார்.
  • இவருக்கு 11 வயது இருக்கும் போது இவரது கவி பாடும் ஆற்றலையும் புலமையையும் பாராட்டி எட்டயபுர மன்னர் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார்.
  • சுதந்திர போரில், பாரதியின் பாடல்கள் சுதந்திரக் கனலாய் மக்களை விறுகொள்ளச் செய்தது.
  • சாதிகள் இல்லையடி பாப்பா என்று கூறிய பாரதியார் தீண்டாமையை அறவே வெறுத்தார்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் சிறப்புகள் சில வரிகள்..!

  • கண்ணன்பாட்டு, குயில்பாட்டு, பாஞ்சாலி சபதம், புதிய ஆத்திச்சூடி, போன்ற புகழ் பெற்ற காவியங்கள் பாரதியரால் எழுதப் பெற்றன.
  • பாரதியார் தேசியக் கவிஞர், மகாகவி, மானுடம் படவந்த மகாகவி உள்ளிட்ட பல பெயர்களால் போற்றப்படுகிறார்.
  • தேசியக் கவிஞர் பாரதியார் 1921 ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி, தனது 39 ஆவது வயதில் இவ்வுலக வளவில் இருந்து விடுதலை பெற்றார்.
  • மகாகவி மறைந்தாலும், அவரது கவிதைகள் இன்றைக்கும் நமக்கு தேசபக்தியை ஊட்டிக் கொண்டே இருக்கிறது.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாரதியார் பாடல் வரிகள்

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Today useful information in tamil
Advertisement