வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் கட்டுரை

Updated On: July 27, 2023 12:24 PM
Follow Us:
Paruva Nilai Matram Katturai
---Advertisement---
Advertisement

பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் கட்டுரை – Paruva Nilai Matram Katturai

மனிதர்களின் தவறுகளால், சுயநலத்தால் ஏற்படும் பருவநிலை மாற்றம் காரணமாக பலவகையான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். பருவநிலை மாற்றம் உலகெங்கிலும் உள்ள பல விவசாயத் துறைகளை பாதிக்கிறது. சூறாவளி, வறட்சி மற்றும் கடுமையான மழை போன்றவை ஏற்படுவதால், பல பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. மனிதர்களின் இயற்கைக்கு எதிராக செய்யும் பல வகையான செயற்பாடுகள் காரணமாக தற்போது சுற்றுசூழலில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. ஆகவே இன்றைய பதிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பருவநிலை மாற்றம் சுற்றுசூழல் பற்றி கட்டுரை பார்க்கலாம் வாங்க.

பருவநிலை மாற்றம் சுற்றுச்சூழல் கட்டுரை:

முன்னுரை:

பொதுவாக பருவநிலை மாற்றம் என்பது பூமியில் ஏற்படும் ஒரு வழக்கமான விஷயம் தான். இருப்பினும் மனிதர்களாகிய நாம் இயற்கைக்கு எதிராக செய்யும் பல வகையான செயற்பாடுகள் காரணமாக தற்போது சுற்றுசூழலில் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. கரியமில வாயு வெளியேற்றம் அதிகரித்த காரணத்தினால் புவியின் வெப்பநிலை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் பருவநிலை மாற்றங்கள், துருவப் பகுதியில் உள்ள பனிப்பாறைகள் உருகுதல் என்று பல மோசமான மாற்றங்கள் தற்பொழுது நமது பூமியில் நிலவி வருகிறது. இத்தகைய மோசமான சூழ்நிலையை மற்ற வேண்டியது நமது கடமையாகும்.

பருவநிலை மாற்றத்திற்க்கான காரணி:

பருவநிலை மாற்றம் குறுகிய காலப் பருவமாற்றமாகும். அதாவது வழக்கமான பருவநிலை மாறுதலைக் குறிக்கும். இம்மாற்றத்திற்கு பிரதான காரணி மனித நடவடிக்கைகள் ஆகும்.

இதையும் கிளிக் செய்தி படியுங்கள் மரம் வளர்ப்போம் கட்டுரை

பருவநிலை மாற்றத்திற்க்கான அநுதாபம்:

தொழிற்புரட்சி பரவலாவதற்கு முன்னதாக இருந்ததை விட தற்போது பூமியின் வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்துள்ளதாக உலக வானிலை மையம் கூறுகிறது.

உலகம் முழுவதும் கடல் நீரின் மட்டம் சராசரியாக ஆண்டுக்கு 3.6 மில்லி மீட்டர் என்ற கணக்கில் அதிகரித்துள்ளது. நீரின் வெப்பநிலை அதிகரிக்க அதிகரிக்க அதன் பரும அளவு அதிகரிப்பதே பருவநிலை மாற்றத்திற்கான காரணமாகும்.

இருப்பினும் பனிப்பாறைகள் உருகுவதே கடல்நீர் மட்ட உயர்வுக்கு முக்கிய காரணமாக தற்போது பார்க்கப்படுகிறது. சமீப கால ஆய்வுகளில் அண்டார்டிக்காவில் பனிப்பாறைகள் இழக்க தொடங்கியுள்ளன.

பருவநிலை மாற்றத்தால் சுற்றசூழலில் ஏற்படும் பாதிப்புகள்:

மாறிவரும் பருவநிலை காரணத்தினால் தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கும் பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அதாவது நீர் பற்றாக்குறை, உணவு உற்பத்தியில் தட்டுப்பாடு, புயல், வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் நிகழ்ந்து உயிரிழப்புக்கள் அதிகரிப்பது போன்ற பல வடிவங்களில் பருவநிலை மாற்றத்தின் தாக்கங்கள் சுற்றுச்சூழலில் காணப்படுகின்றன.

இந்த உலகம் மென் மேலும் வெப்பமானால் நீர் நீராவியாவதன் அளவு அதிகரித்து அதன் காரணமாக காற்றில் ஈரப்பதன் அதிகரிக்கும். இதன் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் அதிதீவிர மழையும் சில பகுதிகளில் பனிப்பொழிவும் புதிய இயல்பாக உருவெடுக்கக் கூடும்.

கோடைகாலத்தின் போது வெப்பநிலை காரணத்தினால் வறட்சி அதிகரிக்கும் சூழ்நிலை ஏற்படக்கூடும். அதேநேரம் புயல்களின் காரணமாக ஏற்படும் மழையால் பெருக்கெடுக்கும் வெள்ள நீர் கடலில் கலந்து அதன் நீர்மட்டம் உயர வழிவகித்திடும். இத்தகைய அசாதரண இயற்கை சீற்றத்தினால் பல ஏழை நாடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

முடிவுரை:

இத்தகைய பருவநிலை மாற்றம் தற்பொழுது சுற்றுசூழலில் பலவகையான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. பருவநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளே இந்த நூற்றாண்டில் நாம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்றாக இருக்கும்.

இத்தகைய பருவநிலை மாற்றத்தினை தூண்டும் செயற்பாடுகளில் ஈடுபடுவதை முடிந்தவரை நாம் அனைவரும் தவிர்த்துக் கொள்வதோடு எமது எதிர்கால சந்ததியினருக்கு இயற்கையின் கொடைகள் வழங்குவோமாக. நன்றி வணக்கம்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

இதுபோன்று தமிழ் கட்டுரை சார்ந்த விஷயங்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> Tamil  Katturai
Advertisement

Sathya Priya

வணக்கம்.. நான் சத்திய பிரியா.. நமது பொதுநலம்.காம் இணையதளத்தில் உள்ளடக்க எழுத்தாளராக பல்வேறு பயனுள்ள பதிவுகளை எழுதுகிறேன். பயனர்கள் அதனை படித்து பயன் பெறுவதில் மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now